Chicken GBS: சிக்கன் சாப்பிடுவோர் கவனத்திற்கு.. இப்படி சாப்பிடுவதால் பரவும் GBS நோய்

சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்றாலும் அசைவ உணவுகளில் குறிப்பிட்ட ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடிய தன்மையும் சிக்கனில் இருக்கிறது. அதன்படி குறிப்பிட்ட முறையில் சிக்கன் சாப்பிடுவதால் GBS என்ற ஒருவகை நோய் தாக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை வெளியாகி இருக்கிறது.
  • SHARE
  • FOLLOW
Chicken GBS: சிக்கன் சாப்பிடுவோர் கவனத்திற்கு.. இப்படி சாப்பிடுவதால் பரவும் GBS நோய்


Chicken GBS: அசைவ பிரியர்களையும் சிக்கனையும் பிரித்து பார்க்கவே முடியாது. சிக்கனிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. ஏணைய நபர்கள் அசைவத்தில் சிக்கன் மட்டுமே சாப்பிடுவோம் என கூறுவதுண்டு. சிக்கனின் மார்பக இறைச்சி, கால் பகுதி இறைச்சி என இரண்டும் வெவ்வேறு நன்மைகளை கொண்டிருக்கிறது.

உடற்பயிற்சிக் கூடம் செல்பவர்கள், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள் என அனைவரும் கண்டிப்பாக சிக்கன் சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். மட்டனை விட இதில் கொலஸ்ட்ரால் அளவு குறைவாகும். அதேசமயத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அசைவ உணவுகளிலேயே அடிக்கடி தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய உணவாக சிக்கன் இருக்கிறது என்பதும் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

மேலும் படிக்க: Omega-3 Acid Foods: உடலுக்கு ஒமேகா-3 ஏன் முக்கியம்., ஒமேகா-3 எக்கச்சக்கமாக இருக்கும் டாப் 5 உணவுகள்!

கோழிகள் மூலம் பரவும் புதுவகை பாதிப்பா?

பறவை காய்ச்சல் உள்ளிட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய உணவாக சிக்கன் இருந்து வரும் நிலையில், தற்போது சிக்கனை குறிப்பிட்ட வகையில் சாப்பிட்டால் GBS என்ற புதிய வகை நோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை தகவல் வெளியாகி இருக்கிறது.

cause-gbs-disease

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், நரம்பு கோளாறுகளான குய்லைன்-பாரே நோய்க்குறி (GBS) பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அரைகுறையாக கோழியை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கோழிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை

  • புனேவில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமீபத்தில், புனேவின் கடக்வாஸ்லா அணைப் பகுதியில் GBS நோய் பாதிப்பு பதிவாகியுள்ளது.
  • சிலர் அதை நீர் மாசுபாட்டுடன் தொடர்புபடுத்தினாலும், பல்வேறு நபர்கள் இதற்கு கோழி நுகர்வு காரணமாக இருக்கும் என ஊகித்துள்ளனர்.
  • சுகாதார சிக்கல்களைத் தடுக்க மக்கள் தங்கள் உணவு, குறிப்பாக கோழி உள்ளிட்டவைகள் நன்கு சமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.
guillain-barre-syndrome

கோழி மற்றும் உணவுகளை நன்கு சமைக்க வேண்டும்

  • உணவை முழுமையாக சமைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
  • தற்போதைய நிலவரப்படி GBS நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.
  • கோழிகளை அழிக்க வேண்டிய அவசியமோ, தவிர்க்க வேண்டிய அவசியமோ இல்லை.
  • இருப்பினும் அவை அனைத்தும் நன்கு சமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டியது மிக அவசியமாகும்.

மேலும் படிக்க: அட நீங்க அடிக்கடி சலூன் சென்று முடி வெட்டுபவரா? அப்போ இதை கண்டிப்பா படியுங்க!

Guillain-Barre syndrome (GBS) என்றால் என்ன?

Guillain-Barre syndrome (GBS) என்பது உடலில் நோயெதிர்ப்பு அமைப்பின் புற நரம்புகளை தாக்கும் ஒரு நிலையாகும். இது தசை பலவீனம் மற்றும் உணர்வுகள் இல்லாத நிலைமைக்கு வழிவகுக்கக் கூடும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இது அனைத்து வயதினரையும் பாதிக்கக் கூடும். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் வயதினர்களே இதற்கு அதிகம் பலியாகின்றனர். இந்த நோய் வராமல் தடுக்க சுகாதாரமான தண்ணீர், நன்றாக சமைக்கப்பட்ட உணவு ஆகியவையை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்.

image source: freepik

Read Next

அட நீங்க அடிக்கடி சலூன் சென்று முடி வெட்டுபவரா? அப்போ இதை கண்டிப்பா படியுங்க!

Disclaimer