Diwali 2023: தீபாவளி ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க்ஸ் - விருந்தாளிகளை அசத்துங்க!

  • SHARE
  • FOLLOW
Diwali 2023: தீபாவளி ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க்ஸ் - விருந்தாளிகளை அசத்துங்க!

எந்த தீபாவளி கொண்டாட்டமும் சுவையான இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் இல்லாமல் முழுமையடையாது. பாரம்பரியமான லட்டு, ஜிலோபி முதல் காஜு கட்லி, சோன் பாப்டி போன்ற நவீன கால இனிப்புகள் வரை தீபாவளியை சுவையானதாக மாற்ற ஏராளமான வகைகள் உள்ளன.

diwali-special-mind-blowing-home-made-mocktails

குறிப்பாக கடந்த சில வருடங்களாக வடக்கு முதல் தெற்கு வரை இந்தியாவில் தீபாவளி பார்ட்டி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பார்ட்டி என்று வந்துவிட்டாலே, விருந்தினர்களை வரவேற்க சிறப்பாக தயாரிக்கப்படும் வெல்கம் ட்ரிங்க்ஸ் எப்போதும் தனி கவனம் பெறும். சில இடங்களில் வெல்கம் ட்ரிங்க்ஸாக ஆல்கஹால் கலந்த பானங்கள் அல்லது சோடா பானங்கள் வழங்கப்படுவது உண்டு. இவை உடலுக்கு மிகவும் கெடுதலானது.

எனவே தீபாவளி நாளில் உங்களை உற்சாகமாக வைத்திருக்கக்கூடிய ஆல்கஹால் இல்லாத, ஆரோக்கியமான மாக்டெயில்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்…

1.தாய் லெமன் கிராஸ் ட்ரிங்க்ஸ் (Thai Lemongrass Drink):

தேவையான பொருட்கள்:

  • 5 பெரிய எலுமிச்சை துண்டுகள்
  • 2 ½ கப் தண்ணீர்
  • ¼ - ½ கப் சர்க்கரை
  • பெரிய சிட்டிகை உப்பு
  • எலுமிச்சை காய்
diwali-special-mind-blowing-home-made-mocktails

செய்முறை:

  • எலுமிச்சம்பழத்தை மெல்லியதாக நறுக்கவும். தண்ணீரில் ஒரு பாத்திரத்தில் 7-8 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  • சர்க்கரை சேர்த்து கிளறி, அதனை முழுவதுமாக கரைய விடவும்.
  • எலுமிச்சம்பழத்தை வடிகட்டுவதற்கு முன் அதை குளிர்விக்க வேண்டும்.
  • இப்போது ஒரு சிட்டிகை உப்பு மற்றும் நிறைய ஐஸ் சேர்த்து பரிமாறவும்.
  • அலங்காரத்திற்கு கண்ணாடி டம்பளரில் துண்டாக நறுக்கப்பட்ட எலுமிச்சை, சில பொதினாவை சேர்க்கலாம்.

2.வெர்ஜின் குக்கும்பர் கூலர் (Virgin Cucumber Cooler):

எலுமிச்சையின் சிட்ரஸ் ப்ளேவர், சோடாவின் ஃபிஸ்ஸுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து புத்துணர்ச்சியூட்டும் மாக்டெயிலை தயாரிக்கலாம்.

diwali-special-mind-blowing-home-made-mocktails

தேவையான பொருட்கள்:

  • வெள்ளரி காய் - 300 கிராம்
  • எலுமிச்சை சாறு - 15 மில்லி
  • ஐஸ் - 150 கிராம் (நொறுக்கப்பட்டது)
  • சோடா - 1
  • புதினா அல்லது துளசி தளிர் (அலங்காரத்திற்காக)

செய்முறை:

  • அனைத்து பொருட்களையும் ஒரு ஷேக்கரில் சேர்த்து அரைக்கவும்.
  • ஒரு கிளாஸில் ஊற்றி அத்துடன் சோடாவை சேர்க்கவும்.
  • புதினா அல்லது துளசியை வைத்து கிளாஸை அலங்கரிக்கவும்.

3.புளூபெர்ரி மோஜிடோ ராயல் (Blueberry Mojito Royale):

புத்துணர்ச்சி மற்றும் காஸ்ட்லியான உணர்வை தரக்கூடிய வெல்கம் ட்ரிங்க்ஸை உருவாக்க நினைத்தால் புளூபெர்ரி மோஜிடோ உங்களுக்கு சரியான தேர்வு.

diwali-special-mind-blowing-home-made-mocktails

தேவையான பொருட்கள்:

  • ப்ளூ பெர்ரி - 1/3 கப்
  • புதிய இலைகள் - 6
  • எலுமிச்சை சாறு- 2 1/2 டீஸ்பூன்
  • சர்க்கரை - 1 டீஸ்பூன்
  • ஐஸ் க்யூப்ஸ்

செய்முறை:

  • ஒரு கிளாஸில், ப்ளூ பெர்ரி, புதினா இலைகள், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்க்கவும்.
  • ப்ளூ பெர்ரி நன்றாக கரையும் வரை கிளாஸின் அடிப்பகுதியை ஸ்பூன் அல்லது மரக்கரண்டி கொண்டு நன்றாக கலக்கவும். (பெர்ரிகள் லேசாக நசுங்கினால் போதுமானது)
  • இப்போது கண்ணாடி குவளையில் நொறுக்கப்பட்ட ஐஸ் கட்டி மற்றும் சோடாவை சேர்க்கவும்.
  • இந்த ட்ரிங்ஸை நன்றாக குலுங்கி, சில புதினா இலைகள் மற்றும் ப்ளூ பெர்ரிகளை போட்டு அலங்கரிக்கவும்.

4.ஜிஞ்சர் ஆல் (Ginger Ale):

சமையலறையில் எளிதில் கிடைக்கும் பொருட்களை வைத்து செய்யக்கூடிய எளிதான தீபாவளி மாக்டெய்ல் ரெசிபி இது.

diwali-special-mind-blowing-home-made-mocktails

தேவையான பொருட்கள்:

  • வீட்டில் தயாரிக்கப்பட்ட இஞ்சி Ale - 30 மில்லி
  • இஞ்சி சாறு -15 மில்லி
  • எலுமிச்சை சாறு - 20 மில்லி
  • சர்க்கரை பாகு - 15 மில்லி
  • புதினா (அலங்கரிக்க)

செய்முறை:

  • புதினா சாறு தயாரிக்க, புதினா இலைகள் மற்றும் ஐஸ் எடுத்து இரண்டையும் மிக்ஸில் அரைத்து, சாற்றை வடிகட்டிக்கொள்ளவும்.
  • இஞ்சி சாறு தயாரிக்க, இஞ்சி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • கண்ணாடி குவளையில் சிறிதளவு நொறுக்கப்பட்ட ஜஸ் உடன் சர்க்கரை பாகு மற்றும் புதினா, இஞ்சி சாறு கலந்து பொதினா இலைகள் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

5.ஜல் ஜீரா (Jal jeera):

ஜல் ஜீரா பானத்தின் அடிப்படை மூலப்பொருள் சீரகமாகும், இது புத்துணர்ச்சியூட்டும் புதினா இலைகளுடன் பண்டிகை காலத்தை புத்துணர்ச்சியாக்குகிறது.

மேலும் இதன் உட்பொருட்கள் காரணமாக செரிமான மற்றும் குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. புதினா இலைகள் அமிலத்தன்மை மற்றும் சீரகம் எடையைக் குறைக்க உதவும். இது ஒரு சில நிமிடங்களில் வீட்டிலேயே தயாரிக்க எளிதான பானமாகும்.

Read Next

Popcorn Benefits: பாப்கார்ன்ல இவ்வளவு நன்மையா?

Disclaimer

குறிச்சொற்கள்