$
Palaya Satham Benefits: பழைய சோறு சாப்பிட்ட அப்பாவும், தாத்தாவும் வாழ்நாள் முழுவதும் நன்றாக தான் வாழ்ந்தார்கள். பீட்சா, பர்கர் சாப்பிடும் தலைமுறையின் ஆரோக்கியம் தான் கேள்விக்குறியாக இருக்கிறது. பிரியாணியில் சில நன்மைகள் இருக்கிறது என்றால் ஐஸ் பிரியாணி என நக்கலாக கூறப்படும் பழைய சோறில் ஏணைய நன்மைகள் இருக்கிறது. மிச்சமாகும் சோறு வீணாகமல் இருக்க இரவில் தண்ணீர் ஊற்றி வைத்து அதை மறுநாள் சாப்பிட்டால் அதுவே பழைய சோறு என கூறப்படுகிறது. பழைய சாறு நாளடைவில் கௌரவக் குறைச்சலை ஏற்படுத்தும் உணவாக மாறிவிட்டது. பழைய சோறில் இருக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
பழைய சோறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தமிழகத்தில் மிக பரீட்சியமான உணவு பழைய சோறு. இப்போதெல்லாம் காலை உணவு என்றால் அதன் பட்டியலில் இட்லி, வடை, தோசை, பூரி, பொங்கல் போன்ற உணவுகளை தான் சாப்பிடுகிறோம். காலை உணவு பட்டியலில் இருந்த பழைய சோறு, கூல் எல்லாம் காணாமல் போகி விட்டது.
இதையும் படிங்க: வேர் காய்கறிகளும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்
வெப்பம் குறையும்
பழைய சோறுக்கு உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளது. காலையில் பழைய சோறு போட்டு அதில் லேசாக தயிர் ஊற்றி உப்பு போட்டு அதனுடன் சின்ன வெங்காயம் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
கால்சியம் உள்ளிட்ட பல நன்மைகள்
இரத்த சோகை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பழைய சோறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காலையில் தயிருடன் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகையில் இருந்து விடுபடலாம். பழைய சோறு சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைக்கும். இதனால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுவடையும்.
உடலுக்கு தேவையான சக்தியை வழங்கும் பழைய சோறு
கோடையில் பழைய சோறு சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது. சூரியனால் ஏற்படும் மந்தமான தன்மையைத் தடுக்கிறது. அதிகாலையில் பழைய சோறை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கும். அதோடு அல்சர் மற்றும் குடல் பிரச்சனை உள்ளவர்களுக்கு பழைய சோறு மருந்தாக செயல்படுகிறது.
செரிமான சக்தி மேம்படும்
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அனைத்து உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும். அதேபோல் இதில் பாக்டீரியா செரிமானத்தை மேம்படுத்தும் சக்தி இருக்கிறது. அதோடு பழைய சோறு சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம், மலச்சிக்கல் பிரச்சனைகளை நீங்கும்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்
பழைய சோறில் லேசாக புளிப்பு சுவை ஏற்படும். காரணம் இதில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீயாதான் புளிப்புச் சுவையை ஏற்படுகிறது. இதில் மிக அதிகளவில் புரதச் சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம் ஆகிய நிறைந்துள்ளது. பழைய சோறை அதிகபட்சமாக நீரூற்றி 15 மணி நேரத்துக்குள் சாப்பிட வேண்டும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தினையின் வகை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்வோம்?
நாள் முழுவதும் புத்துணர்ச்சியோ இருக்கலாம்
பழைய சோறை சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் ஃப்ரெஷாக உணருவீர்கள். ஒவ்வாமை, தோல் தொடர்பான பிரச்சனைகளும் குறையும். வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு நல்லது. பழைய சோறு நன்றாக நொதிக்கும் செயல்முறையின் போது கால்சியம், இரும்பு மற்றும் மக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. பழைய சோறில் அதிக வைட்டமின் பி12 இருப்பதால் இது சாப்பிடும் போது சோர்வு உணர்வு குறைகிறது.
பழைய சோறில் பல்வேறு நன்மைகள் நிறைந்திருந்தாலும் ஏதேனும் நோய் பாதிப்பில் இருப்பவர்கள் புதிய உணவு எதையும் எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகுவது சிறந்த முடிவாகும்.
image source: freepik