நீங்கள் தயிர் சாப்பிட விரும்புபவராக இருந்தால், மதிய உணவோடு தயிர் சாப்பிடுவது மிகவும் நல்லது. தயிர் சாதத்தை தொடர்ந்து மதிய உணவோடு சாப்பிட்டு வந்தால், நம் உடலுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
- தயிரை உணவில் சேர்ப்பதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
- தயிர் சாப்பிடுவது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- தயிரை சரியான முறையில் உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்கலாம். எனவே, உடல் பருமன் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
- இது மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலைக் குறைக்க உதவுகிறது.
- அதேபோல பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுகளை குறைக்க தயிர் சாப்பிடுவது நல்லது.
இவங்க எல்லாம் தயிர் சாப்பிடக்கூடாது - ஏன்?
தயிரை அதிகமாக உட்கொண்டால் பலருக்கு ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு தும்மல், சளி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, இதுபோன்ற அலர்ஜி பிரச்சனைகளுக்கு ஆளாகக்கூடியவராக நீங்கள் இருந்தால், தயிரை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.
முக்கிய கட்டுரைகள்
அதேபோல இரவில் தயிர் சாப்பிடக் கூடாது. சில சமயம் உண்ணும் உணவு புளிப்பாக மாற வாய்ப்புள்ளது.

அதேபோல், நீங்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால், தயிர் சாப்பிட வேண்டாம். தயிர் நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.
மேலும், தயிரை அளவாக உட்கொள்ள வேண்டும். ஏனென்றால், தயிரை அதிகமாக உட்கொள்வது சில நேரங்களில் வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே அளவோடு சாப்பிடுங்கள்.
அதேபோல சிலர் தயிர் பழங்களுடன் சாப்பிடுவார்கள். குறிப்பாக சிட்ரஸ் பழங்களைச் சேர்ப்பதால், அதிக அமிலத்தன்மை ஏற்படுகிறது. எனவே, அத்தகைய கலவையை தவிர்க்க வேண்டும்.
அதேபோல பாலுடன் தயிர் சாப்பிடவேக் கூடாது. இலைக் காய்கறிகளுடன் தயிர் சாப்பிடக் கூடாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் இது இலை கீரையில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுப்பதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
மதியம் தயிர் சாப்பிடுவது நல்லதா?
மதிய நேரத்தில் கொஞ்சம் எவியாக சாப்பிடுவது இந்தியர்களின் வழக்கம். மதியம் பல கறிகளுடன் சாதம் சாப்பிடுவோம். வெகு சிலரே மதியம் சப்பாத்தி சாப்பிடுவார்கள். சோறு சாப்பிடுபவர்களே அதிகம்.
இப்படி சாதம், கறிகள் சாப்பிடும்போது, சில நேரங்களில் ஜீரணிக்க சிறிது நேரம் ஆகலாம். சில நேரங்களில் இந்த நேரத்தில் பலருக்கு செரிமான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக உணவு உண்ணும் போது அதிகமாக தண்ணீர் குடிப்பதும், சாப்பிட்ட உடனே உறங்கச் செல்வதும் செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
எனவே, இதுபோன்ற சிரமங்களைத் தவிர்க்க, உணவில் தயிர் சேர்த்தாலே போதும். ஏனென்றால், தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன, இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் செரிமான பிரச்சனைகளைத் தடுக்கிறது.
Image Source: Freepik