Sat Sep 12, 2026 | 02:23 AM IST

Expert

இரவு உணவுக்குப்பின் 5 நிமிடம் இந்த நிலையில் இருங்க.. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்

வஜ்ராசனம் செய்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக, இது மேம்பட்ட செரிமானம், வயிற்று உப்புசம் குறைதல், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறுதல் போன்றவற்றைத் தருகிறது. இதில் இரவு உணவுக்குப்பின் வஜ்ராசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளும் அடங்குகின்றன. குறிப்பாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகளின் காரணமாக, அன்றாட வாழ்வில் வாயு பிரச்சனைகள்,  வயிறு உப்புசம்,  நெஞ்செரிச்சல் மற்றும் இன்னும் பல செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.  அதிலும் இரவு நேரங்களில் சாப்பிடக்கூடிய கனமான உணவுகள் மற்றும் தாமதமான உணவுகள்,  இது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன் இரவு நேர தூக்கத்தையும் பாதிக்கிறது.

இந்நிலையில், இரவு உணவு உட்கொண்ட பிறகு சில பழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். அவ்வாறு இரவு உணவு உட்கொண்ட பிறகு வஜ்ராசனம் செய்வது செரிமான தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவுகிறது.  இதில் இரவு உணவுக்குப் பின் ஐந்து நிமிடங்கள் வஜ்ராசனம் நிலையில் இருப்பதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பது குறித்து ஊட்டச்சத்து மற்றும்  எடை இழப்பு நிபுணரான லீமா மகாஜன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வஜ்ராசனம்

வஜ்ராசனம், வைர நிலை அல்லது இடி நிலை என்றும் அழைக்கப்படுகிறது. இது யோகாவில் ஒரு எளிமையான ஆனால் சக்திவாய்ந்த அமர்ந்த நிலை ஆகும். இந்த முழங்கால் இட்டு அமரும் நிலை, யோகாசனங்களில் தனித்துவமானதாக விளங்குகிறது. ஏனெனில் இதை உணவு உண்ட உடனேயே பயிற்சி செய்யலாம். இது செரிமானத்திற்கு ஒரு சிறந்த உதவியாக அமைகிறது.

இது அன்றாட வாழ்வில் சமநிலை, அமைதி மற்றும் வலிமையைக் கொண்டுவர உறுதியளிக்கிறது. இந்த ஆசனம் எவ்வாறு செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது என்று நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காண்போம்.

image

doctor-shares-powerful-and-healthy-breakfast-options-for-better-digestion-Main-1765947233616.jpg

நிபுணரின் கருத்து

நிபுணரின் கூற்றுப்படி, “பெரும்பாலான மக்கள் இரவு உணவு சாப்பிட்ட பிறகு படுத்துக் கொள்கிறார்கள் அல்லது தங்கள் தொலைபேசியை பயன்படுத்துகின்றனர். இங்கு தான் செரிமானப் பிரச்சனைகள் தொடங்குகின்றன.

இரவு உணவிற்குப் பிறகு வெறும் 5 நிமிடங்கள் வஜ்ராசனத்தில் அமர்ந்தால், அது உங்களுக்கு எப்படி உதவுகிறது என்பதை நிபுணர் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: நோயற்ற வாழ்க்கைகான சரியான உணவு முறை

அறிவியல் ரீதியான காரணங்கள்

  • வஜ்ராசனம் செய்வது உடலை நிமிர்ந்து வைத்திருக்க உதவுகிறது. இதனால் அமிலம் மேல்நோக்கி வருவதில்லை
  • வாயு சிக்கிக்கொள்ளாமல் வெளியேற உதவுகிறது, இதனால் வயிறு உப்புசம் குறைகிறது
  • உடலை "ஓய்வு மற்றும் செரிமான" நிலைக்குச் செல்ல சமிக்ஞை செய்கிறது. அப்போது செரிமானம் சிறப்பாகச் செயல்படுகிறது
  • ஒட்டுமொத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் இணைக்கும்போது, உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது
  • சாப்பிட்ட பிறகு ஏற்படும் கனமான, இறுக்கமான, தூக்கக் கலக்கமான உணர்வைக் குறைக்கிறது

தினமும் செய்தால் ஏற்படும் மாற்றங்கள்

  • வயிறு உப்புசம் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகள் காலப்போக்கில் குறைகிறது
  • செரிமானம் முன்னதாகவே தொடங்கி சீராக நடக்க உதவுகிறது
  • குடல் இயக்கம் மிகவும் சீரானதாக மாறுகிறது
  • சாப்பிட்ட பிறகு அசௌகரியமாக உணராமல், இலகுவாக உணரலாம்

இரவு உணவிற்குப் பிறகு வஜ்ராசனம் செய்வது எப்படி?

  • குதிகால்களின் மீது நிமிர்ந்து உட்கார வேண்டும்
  • முதுகெலும்பை தளர்வாகவும், நேராகவும் வைத்திருக்கலாம்
  • தொலைபேசி பயன்படுத்த வேண்டாம், கூன் போட வேண்டாம்
  • சாதாரணமாக சுவாசிக்க வேண்டும்
  • வெறும் 5 நிமிடங்கள் மட்டும் செய்யலாம்

image

good-digestion

View this post on Instagram

A post shared by Leema Mahajan | Nutritionist & Weight loss specialist (@leemamahajan)

குறிப்பு

இதனைத் தொடர்ந்து, நிபுணர் வஜ்ராசனம் செய்வதற்கான சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

  • முழங்கால் வலி இருந்தாலோ அல்லது சமீபத்தில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ இந்த ஆசனத்தைத் தவிர்க்க நிபுணர் பரிந்துரைக்கிறார்.
  • இது ஒரு சிகிச்சை முறையோ அல்லது மருந்தோ அல்ல.
  • இது தொடர்ந்து செய்யும்போது செரிமானத்திற்கும், சாப்பிட்ட பிறகு உடல் ஆரோக்கியத்திற்கும் ஆதரவளிக்கும் ஒரு சிறிய தினசரி பழக்கமாகக் கருதப்படுகிறது எனக்கூறி நிபுணர் தனது பதிவை முடித்தார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் நைட் தூங்கும் முன் இதை செய்யுங்க! உங்க சுகர் லெவல் ஏறவே ஏறாது

Image Source: Freepik

Read Next

சாப்பிட்ட உடனே செரிமானம் அடைய உணவுக்கு முன் இந்த ஒரு முத்ரா செய்யுங்க.. மருத்துவர் ஹன்சாஜி தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 24, 2025 09:11 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content