இன்றைய இளம் தலைமுறையினர் இடையே உடலை பிட்டாக பராமரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதனை பயன்படுத்திக் கொண்டு சில நிறுவனங்கள் ஒரே நாளில் உடல் எடையைக் குறைக்கலாம்... ஒரே இரவில் பிட்டாக மாறலாம் என போலியாக விளம்பரம் செய்து கல்லா கட்டி வருகின்றன.
வருடக் கணக்கில் கட்டுப்பாடு இல்லாமல் ஜங் ஃபுட், பாஸ்ட் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்டு, கிலோ கணக்கில் கூடிய உடல் எடையை சில வாரங்கள் அல்லது மாதங்களிலேயே டயட் இருந்து குறைக்க ஆசைப்படுகின்றனர். சிலர் வெறும் 30 நாட்களிலேயே உடல் எடையை கணிசமான அளவு குறைக்க வழி இருக்கிறதா? என தேடுகின்றனர்.
முக்கிய கட்டுரைகள்
உண்மையில் நீங்கள் இப்போது டயட்டில் இருந்தால் அல்லது உடல் எடையைக் குறைக்க டயட் இருக்க தீர்மானித்திருந்தால் 100 நாட்கள் உணவுக் கட்டுப்பாட்டிற்குப் பிறகு உங்கள் உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்து முடிவு செய்யுங்கள்.
டயட் இருக்க வேண்டிய கால அளவு எவ்வளவு?
வாட்டர் டயட், இன்டர்மீடியட் பாஸ்டிங், கீட்டோ டயட், ஃபேலியோ என பலவகையான உணவுக் கட்டுப்பாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. உணவின் அளவைக் குறைத்து உடலை வறுத்தி மேற்கொள்ளப்படும் டயட்டை விட, அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய மற்றும் குறைந்த கலோரிகளைக் கொண்ட பொது உணவை எடுத்துக்கொள்வதே சிறந்த உணவுக்கட்டுப்பாடு முறையாகும்.
பொதுவாக மனிதர்கள் 90 நாட்கள் அல்லது 12 வாரங்களுக்கு மேல் டயட் இருக்கக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனென்றால் மனித உடல் நீங்கள் சாப்பிடும் டயட் உணவிற்கு பழக்கமாகிவிடும் என்பதால், அதற்கு மேல் எடை இழப்பில் எவ்வித மாற்றமும் இருக்காது.
இந்த பதிவும் உதவலாம்: Curd for Weight Loss: எகிறும் உடல் எடையை வேகமா குறைக்கும் தயிர்! எப்படி தெரியுமா?
100 நாள் டயட் மூலம் உடலில் என்ன நடக்கும்?
1. உடல் உள்ளுறுப்புகள் சுத்தமாகும்:
100 நாட்கள் டயட்டின் போது ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸினேற்றங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் வாய்ப்பு அதிகம். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உட்புறம் சுத்தமாகிறது.
2) ஆரோக்கியமான சருமம்:
நமது சருமம் ஆரோக்கியத்தின் கண்ணாடியாக திகழ்கிறது. உடல் ஆரோக்கியமாக இருப்பதை பொலிவான முகமும், பளபளப்பான தோலும் எடுத்துக்காட்டுகிறது. டயட்டின் போது அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமுள்ள ஆரோக்கியமான உணவை உட்கொள்கிறோம். இது தோலில் ஏற்படும் முகப்பரு, வெடிப்புகள், தழும்புகள் மற்றும் கருவளையங்கள் உள்ளிட்டவற்றை போக்க உதவுகிறது.
3) குறைபாட்டைக் குணப்படுத்துகிறது:
அனைவருமே உணவுக்கட்டுப்பாட்டை எடையிழப்பிற்கான ஒன்றாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் நலக்குறைப்பாடுகளை சரி செய்யவும் உதவுகிறது. உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிரம்பிய, இயற்கையான உணவை உண்ணும் போது, உங்கள் உறுப்புகள் சரியாக செயல்பட தொடங்குகிறது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மல்டிவைட்டமின் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வதில் இருந்து விடுதலை கிடைக்கிறது.
4) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
ஆரோக்கியமான உணவுமுறைக்கு மாறுவது உடலில் கொலஸ்ட்ராலுக்குப் பதிலாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. ஜங் ஃபுட்களை தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான உணவுகளை தொடர்ந்து 100 நாட்கள் எடுத்துக்கொள்ளும் போது உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அபரிவிதமான அளவிற்கு அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
5) ஆரோக்கியமான எடை இழப்பு:
ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற எடை இழப்புக்கு வித்தியாசம் உள்ளது. குறுகிய காலத்திற்கு பின்பற்றப்படும் குறுக்குவழி டயட் முறைகளால் உடலுக்கு தீங்கு உருவாகக்கூடும். அதேசமயம் சரியான உணவு பழக்கத்தை கடைபிடித்தால் வாரத்திற்கு 4 கிலோ வரை உடல் எடையை குறைக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் ஆரோக்கியமான முறையில் நடைபெறும் எடையிழப்பானது நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவும் உதவலாம்: Berries For Weight Loss: நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு எடை குறையணுமா? இந்த ஒரு பழம் சாப்பிடுங்க
Image Source: Freepik