$
Ash Gourd in Tamil: அன்றாட உணவில் நாம் சேர்க்கும் சில காய்கறிகள் பழங்கள் வாயிலாகவே, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும். அதிலும், சில வகை பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்குப் பல்வேறு விதமான நன்மைகளை அளிக்கிறது. இந்த பட்டியலில் ஒன்றாக இருப்பதே வெண்பூசணிக்காய். இவை இயற்கையாகவே உத்வேகத்தை அளிக்கக் கூடிய உணவாகும். இது பல்வேறு வகையான பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் சுவை வெள்ளரிக்காய் போன்றே மிகவும் மென்மையான சுவையாகும். இந்த அற்புத சுவையுடன் கூடிய வெண்பூசணியை எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.
வெண்பூசணியின் ஊட்டச்சத்துக்கள்
நீர்ப்பூசணிக்காய் எனப்படும் வெண்பூசணிக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை பூஜ்ஜிய கொலஸ்ட்ராலைக் கொண்டுள்ளது. எனவே வெண்பூசணிக்காய் உடல் எடை இழப்பிற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும், பல்வேறு வித நோய்களுக்கு அருமருந்தாக வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது. சுரைக்காயைப் போன்று வெண்பூசணியில் விதைகள், இலைகள், சாறுகள் என அனைத்தும் பல முக்கிய ஊட்டச்சத்துக்களின் கலவையைக் கொண்டுள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க 6 குளிர்கால பானங்கள்
வெண்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பலதரப்பட்ட நன்மைகளைக் கொண்டுள்ள வெண்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
செரிமான அமைப்பை மேம்படுத்த
வெண்பூசணியில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. கனமான உணவை உட்கொண்ட போதிலும், வெண்பூசணியை எடுத்துக் கொள்வதால் வீக்கம், மலச்சிக்கல், மற்றும் தசைப்பிடிப்பு போன்றவற்றைக் குணப்படுத்தலாம். மேலும், வெண்பூசணியில் உள்ள ஊட்டச்சத்துகள் குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதனால், குடலில் ஏற்படும் அசௌகரியங்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது.

இதய செயல்பாட்டை அதிகரிக்க
இதில் குறைவான கொலஸ்ட்ரால் இருப்பதால், இதய ஆரோக்கியம் மேம்பாட்டிற்கு உதவுகிறது. இது இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது உடலில் தசைகளின் செயல்பாட்டை உறுதி செய்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்
எடை இழப்பிற்கு உதவ
வெண் பூசணிக்காயில் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், இது குறைந்த அளவிலான கலோரிகளைக் கொண்டுள்ளது. எனவே, இது உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், நீண்ட நேரம் பசி ஏற்படாமல் தடுக்கிறது. விரைவாக கொழுப்புக் கரைய உதவுவதால் உடல் எடை வேகமாகக் குறைய பெரிதும் உதவக்கூடியதாக அமைகிறது.
உடலில் நச்சுக்களை நீக்க
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற தூண்டுவதாக வெண் பூசணிக்காய் உள்ளது. இவை திரட்டப்பட்ட நச்சுக்களை வெளியேற்றுவதுடன், உடலில் உறுப்புகளின் நீரேற்றத்திற்கு உதவுகிறது. இதன் மூலம் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையின் பணிகள் ஒழுங்கான செயல்பாட்டுடன் இருக்கின்றன.
சுவாச செயல்முறைக்கு
இந்த வெண்பூசணிக்காய் ஆனது உள்ளார்ந்த சளி சுரக்கும் தன்மை கொண்டதாகும். மேலும் இது உடலில் அதிகப்படியான சளி அல்லது சளி சுரப்புகளைத் தளர்த்த உதவுகிறது. மேலும், சுவாசக் குழாயிலிருந்து சளிகளை அகற்ற உதவுகிறது. இது நுரையீரல் செயல்பாட்டிற்கு பெரிதும் பயனளிப்பதாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: அதிக உப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
Image Source: Freepik