Doctor Verified

ஜிம் செல்லும்முன் தேன் + வாழைப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

உடற்பயிற்சிக்கு முன் தேன் மற்றும் வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்குச் சரியாக வேலை செய்கிறதா? இதில் உள்ள எரிசக்தி, தசை பலம், நீரேற்று நன்மைகள் குறித்து முழுமையான விளக்கம். யாருக்கெல்லாம் இது கூடாது என்பதையும் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
ஜிம் செல்லும்முன் தேன் + வாழைப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

உடற்பயிற்சி செய்வதற்கு முன் என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றிய குழப்பம் பலருக்கும் இருக்கும். சரியான pre-workout உணவு உடலுக்கு ஆற்றலை வழங்கி, தசை வலிமையை மேம்படுத்தி, உடற்பயிற்சி திறனை உயர்த்தும். பொதுவாக ஓட்ஸ், முழுதானிய உணவுகள், முட்டை, தயிர், பழங்கள் போன்றவை நல்ல pre-workout உணவுகளாகக் கருதப்படுகின்றன. இப்போதெல்லாம் அதிகமாக பேசப்படும் கேள்வி - ஜிம் செல்லும்முன் தேன் + வாழைப்பழம் சாப்பிடலாமா? அது பயனளிக்குமா? இதற்கு நிபுணர்களின் பதில் ஆம், ஆனால் சில நிபந்தனைகளுடன்.


முக்கியமான குறிப்புகள்:-


தேன் & வாழைப்பழம் — சிறந்த Pre-Workout Combo?

தேன் மற்றும் வாழைப்பழம் உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடக்கூடிய சிறந்த லேசான உணவாகும்.

வாழைப்பழம் செய்வது என்ன?

* இயற்கையான கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாகும்

* உடலுக்கு விரைவான ஆற்றலை தருகிறது

* பொட்டாசியம் அதிகம் இருப்பதால் தசை பிடிப்புகளைத் தடுக்கிறது

* நீடித்த சகிப்புத் திறனை வழங்குகிறது

தேன் செய்வது என்ன?

* குளுக்கோஸ் + பிரக்டோஸ் என்ற எளிய சர்க்கரை கலவையை வழங்குகிறது

* உடற்பயிற்சியின் போது உடனடி energy boost

* தசைகளுக்கு விரைவாக எரிசக்தி கிடைக்க உதவும்

இவை இரண்டும் சேரும் போது உடல் லேசாக இருக்கும்; ஜீரணிக்க சுலபம். அதனால், ஜிஂம் தொடக்கநிலையர்கள், மாணவர்கள், வீரர்கள், சக்தி குறைவாக உணர்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: எடை குறைய.. நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் இங்கே.. மருத்துவர் பரிந்துரை..

ஏன் உடற்பயிற்சிக்கு முன் தேன் + வாழைப்பழம் சாப்பிட வேண்டும்?

1. உடனடி & நீடித்த ஆற்றல்

வாழைப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் + தேனில் உள்ள எளிய சர்க்கரைகள், உடற்பயிற்சி முழுவதும் energy sustained ஆக இருக்கும்.

2. தசை பம்ப் மேம்பாடு

பொட்டாசியம் & சோடியம் சமநிலையில் இரத்த ஓட்டம் மேம்பட்டு, தசைக்கு அதிக ஆக்சிஜன், ஊட்டச்சத்துகள் கிடைக்கும். தசை பம்ப் (Muscle Pump) அதிகரிக்கும்.

3. நீரேற்றம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலை

வாழைப்பழத்தின் எலக்ட்ரோலைட் தன்மைகள் - பிடிப்புகளை தடுக்கிறது, நீரேற்றத்தை மேம்படுத்துகிறது.

யாரெல்லாம் இந்த கலவையைத் தவிர்க்க வேண்டும்?

சர்க்கரை நோயாளிகள் தேன் + வாழைப்பழம் இரத்தத்தில் சர்க்கரையை வேகமாக உயர்த்தும். குறைந்த கார்ப் டயட்டில் இருப்பவர்கள், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு பிரச்சனை உள்ளவர்கள், தேன் அல்லது மகரந்த ஒவ்வாமை உள்ளவர்கள், இந்த உணவைக் தவிர்ப்பது பாதுகாப்பானது.

எப்போது சாப்பிட வேண்டும்?

உடற்பயிற்சிக்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்கு முன் எடுத்துக் கொள்வது சிறந்தது. வயிற்றில் கனமாக இருக்காது; உடல் உடற்பயிற்சிக்கு தயார் நிலையில் இருக்கும்.

இறுதியாக..

தேன் மற்றும் வாழைப்பழம் சேர்த்துக் கொண்டால் உடற்பயிற்சிக்கான சிறந்த சக்தி, தசை வலிமை, எலக்ட்ரோலைட் சமநிலை, நீடித்த ஆற்றல் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால், இது எல்லோருக்கும் பொருந்தும் pre-workout உணவு அல்ல. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அல்லது low-carb diet இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சரியாக உடற்பயிற்சிக்கும் முன் எடுத்துக் கொண்டால், இது ஒரு எளிய, இயற்கையான, உடனடி energy booster ஆகும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் கிடைத்த மருத்துவ நிபுணர்கள் விளக்கங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் கூறப்பட்ட உணவுப் பரிந்துரைகளை நீங்கள் பின்பற்றுவதற்கு முன் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.

Read Next

காபியில் நெய் கலந்து குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா? மருத்துவர் சொன்ன புல்லட் காபியின் இரகசியம்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 25, 2025 21:48 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்