Beetroot Benefits: பீட்ரூட் சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வராது

  • SHARE
  • FOLLOW
Beetroot Benefits: பீட்ரூட் சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வராது


Beetroot Health Benefits: உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருவதில் பீட்ரூட் அதீத நன்மைகளைக் கொண்டுள்ளது. உடலில் இரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்ய பீட்ரூட் உதவுகிறது. பீட்ரூட் சாப்பிடுவதால், உடலில் பல்வேறு விதமான மாற்றங்களைத் தரும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது சூப்பர் ஃபுட் என அழைக்கப்படுகிறது. இது அதிக சத்துள்ள மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பல்வேறு கலவைகளால் நிரம்பியுள்ளது. இதில் பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து காணலாம்.

பீட்ரூட்டின் ஊட்டச்சத்துக்கள்

பீட்ரூட்டில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் மிகக் குறைந்த அளவிலான கலோரிகளே உள்ளது. அதன் படி 150 கிராம் பீட்ரூட்டில் 58 கலோரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன. மேலும் பீட்ரூட்டில் நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், சோடியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஃபோலேட், மாவுச்சத்து, ஜிங்க் உள்ளிட்ட சத்துக்கள் காணப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Anti-Aging Foods List: முதுமை எதிர்ப்புக்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்.?

பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளைத் தருவதில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கிறது.

செரிமானத்தை மேம்படுத்த

பீட்ரூட்டில் அதிக அளவிலான நீரில் கரையும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, பெருங்குடலைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இது செரிமானத்திற்கு சிறந்த தீர்வாக அமைகிறது.

அழற்சியை நீக்க

பீட்ரூட்டில் பீட்டாலைன் என்ற அழற்சி எதிர்ப்புப் பண்புகள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது. இது நாள்பட்ட அழற்சி தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக, இது சிறுநீரகத்தில் ஏற்படும் அழற்சியைப் போக்க உதவுகிறது. இதன் மூலம் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம்.

தீக்காயம் குணமாக

இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள், சருமத்தில் ஏற்படும் புண், கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்க உதவுகிறது. இது எரிச்சல் மற்றும் வலியை உண்டாக்கும் புண்கள் அல்லது கொப்புளங்களைக் குணப்படுத்த உதவுகிறது. தீக்காயம் ஏற்பட்ட இடங்களில் பீட்ரூட் சாற்றினை தடவி வர அது காயம் உள்ல இடத்தில் கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

நச்சுத்தன்மை நீக்க

பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்க முடியும். பித்தப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் காணப்படும் நச்சுக்களை நீக்கவும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் பீட்ரூட் ஜூஸ் மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது. எனவே, பீட்ரூஸ் ஜூஸ் அருந்துவது உடல் உறுப்புகளைச் சுத்தமடையச் செய்யும்.

அல்சர் குணமாக

காரமான உணவுகளை எடுத்துக் கொள்வது அல்லது முறையான வாழ்க்கை முறையைப் பின்பற்றாமல் இருப்பது அல்சர் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும். எனவே, அல்சரால் அவதிப்படுபவர்கள் பீட்ரூட் ஜூஸில் சிறிதளவு தேன் கலந்து அருந்துவது அல்சரை விரைவில் குணமாக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள்

இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க

பீட்ரூட்டில் மிக அதிக அளவு வைட்டமின் பி1 மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதன் மூலம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம். மேலும், பீட்ரூட் ஜூஸில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்க சுவையுடனும், ஆரோக்கியம் தருவதாகவும் அமைகிறது.

குறிப்பு

பீட்ரூட் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இவற்றை அதிகமாக சாப்பிடுவது மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

இதில் அதிக அளவில் நைட்ரேட்டுகள் உள்ளன. இதனால், பீட்ரூட்டை அதிகமாக எடுத்துக் கொள்வது வயிற்று வலியை உண்டாக்கலாம்.

பீட்ரூட்டில் அதிகளவிலான ஆக்சலேட்டுகள் இருப்பதால், மற்ர உணவுகளில் இருக்கும் கால்சியம் சத்துக்களை உறிஞ்சுவதில் சிரமமாக இருக்கும். இதனால், சிறுநீரகக் கற்கள் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

இந்த பதிவும் உதவலாம்: Warm Water Benefits: தினமும் காலையில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

Image Source: Freepik

Read Next

Benefits Of Ginger Tea: தூங்க செல்லும் முன் எலுமிச்சை மற்றும் இஞ்சி டீ குடித்தால் இவ்வளவு நல்லதா?

Disclaimer

குறிச்சொற்கள்