Benefits Of Almond Milk: பொதுவாக சாதாரண பாலை விட பாதாம் பாலை மிகவும் விரும்பி அருந்துபவரே அதிகம். ஏனெனில் பாதாம் பால் சுவையுடன் கூடிய பல்வேறு ஊட்டச்சத்துகளைத் தருகிறது. சாதாரண பாலை விட, பாதாம் பாலில் உள்ள புரோட்டீன் மற்றும் கால்சியம் சத்துக்கள் குறைவு. இருப்பினும் ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் ஒரு கப் பாதாம் பாலில் நிறைந்துள்ளன. பாதாம் பாலில் இருக்கும் சத்துக்களையும், பாதாம் பால் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளையும் காண்போம்.
பாதாம் பால் ஊட்டச்சத்துகள்
பாதாம் பருப்பின் நன்மைகளை முழுமையாக எடுத்துக் கொள்வதற்கான சிறந்த வழியாக பாதாம் பால் உள்ளது. இதன் குறைந்த கலோரி மதிப்பு, உயர் ஊட்டச்சத்த்கள், தனித்துவமான சுவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பாதாம் பால் மிகவும் சிறந்த வழியாகத் தேர்வு செய்யப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள்
பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பாதாம் பால் குடிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பல்வேறு உடல் நன்மைகளைப் பெறலாம். இப்போது பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றை இப்போது காண்போம்.
ஆரோக்கியமான மூளை
பாதாம் பால் உடலுக்கு சுறுசுறுப்பைத் தருவதுடன், நல்ல நினைவாற்றலைத் தருகிறது. குறிப்பாக, இரவு படுக்கும் முன் மற்றும் காலை எழுந்ததும் பாதாம் பால் அருந்துவது மூளைக்குத் தேவையான ஆரோக்கியத்தை வழங்கி ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
வலுவான எலும்புகள்
பொதுவாக எலும்பு வலிமைக்கு கால்சியம் நிறைந்த பாலை உட்கொள்வது சிறந்ததாகும். பாதாம் பாலில் கால்சியம் குறைந்த அளவில் இருப்பினும், தினமும் குடித்து வருவதன் மூலம் எலும்பு வலுவாக இருப்பதை உணரலாம். மேலும், இவை உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இதய பாதுகாப்பு
பாதாம் பாலில் கொழுப்புச்சத்துகள் அதிகம் இல்லை. கொழுப்பு அதிகம் இல்லாத பொருள்களை எடுத்துக் கொள்வது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதுடன், இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. ஏனெனில், இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைவது கொலஸ்ட்ரால் ஆகும். கொழுப்பு இல்லாத பாதாம் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: அதிக உப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
வலிமையான தசைகள்
பாதாம் பாலில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை உடலின் தசைகளை வலுவாக்கும் சத்துக்கள் ஆகும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளுடன், தசைகளை வலுப்படுத்த உதவும் ஊட்டச்சத்துகளை பாதாம் பால் கொண்டிருக்கிறது. எனவே தசை வலிமை அடைய விரும்புபவர்கள் பாதாம் பாலை அருந்தலாம்.
கண் பார்வை மேம்பாடு
இன்றைய கால கட்டத்தில் மொபைல், கணினி, லேப்டாப் என தொடர்ந்து கண்ணிற்கு வேலை கொடுத்து வருகிறோம். எனவே, பார்வையை மேம்பாட்டிற்கு உடலுக்கு அதிக அளவிலான வைட்டமின் A சத்துக்களை உட்கொள்ள வேண்டும். இதற்கு சரியான தீர்வாக பாதாம் பால் உள்ளது. ஏனெனில் பாதாம் பாலில் அதிக அளவிலான வைட்டமின் ஏ சத்துகள் நிறைந்துள்ளன. எனவே, பாதாம் பால் குடிப்பதன் மூலம் கண் பார்வையை மேம்படுத்தலாம்.
உடல் எடை குறைப்பு
பாதாம் பால் உடல் எடை குறைப்பிற்கு ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. மற்ற பால் பொருள்களுடன் ஒப்பிடும் போது பாதாம் பாலில் குறைந்த அளவிலான கலோரிகளே உள்ளன. எனவே, இவை கொழுப்பு நீக்கப்பட்ட பாலுக்கு சிறந்த மாற்றாக உள்ளது. இவை உடல் எடை குறைத்து, எடையை சரியாக பராமரிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: காளான்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இங்கே…
Image Source: Freepik