Pure Soul: பொதுவாக பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும், ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு ஆன்மா உள்ளது. ஒவ்வொருவரின் ஆன்மாவும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலையும் ஒளியையும் கொண்டுள்ளது. சில ஆன்மாக்களின் ஒளி பிரகாசமாகவும் அழகாகவும் இருக்கும். அதேபோல் சில எளிமையானதாகவும், சில தீயவையாகவும் இருக்கின்றன. இதில் குறிப்பிட்ட பல ஆன்மாக்கள் தூய்மையானதாக இருக்கும்.
ஒரு தூய ஆன்மா நன்மையை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. இவர்கள் அன்பானவர்கள், பச்சாதாபமுள்ளவர்கள், மற்றவர்களை அமைதிப்படுத்தி ஆறுதல்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள். இந்த காலக்கட்டத்தில் பலரையும் அடையாளம் காண்பது என்பது அரிது. ஒருவரின் குணாதிசியம் என்ன என்பதை அடையாளம் காண்பதே பெரும் சிரமமாக இருக்கிறது. ஒரு தூய்மையான நல்ல மனிதர் யார், அவர்களை எப்படி அடையாளம் காண்பது என்பதை பார்க்கலாம். கீழே கொடுத்துள்ள பண்புகளை தூய்மையான ஆன்மா கொண்ட மனிதர்கள் எப்போதும் தவறமாட்டார்கள்.
இதையும் படிங்க: காலை வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு மட்டும் கலந்து குடித்து பாருங்க..
தூய்மையான ஆன்மா கொண்ட நல்ல மனிதரை எப்படி அடையாளம் காண்பது?
அனைவரின் மீதும் அளவற்ற அன்பு
ஒரு தூய்மையான அழகான ஆன்மாவின் ஆகச்சிறந்த பண்புகளில் ஒன்று, பாரபட்சமில்லாத அன்பு என்பதுதான். இவர்கள் ஒவ்வொரு மனிதரையும் இதயத்தில் இருந்து நேசிப்பார்கள். எதிர் இருக்கும் நபர் யார் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவர் மீதும் அன்பு காட்டுவார்கள். இவர்கள் அன்பை அனைவருக்கும் பரப்புவார்கள். ஒவ்வொருவருக்கும் கஷ்டங்கள் என்பது இயல்பாக இருக்கும், அவர்களை ஆதரிக்க சக மனிதன் செய்யக்கூடிய ஒரே விஷயம் அன்பு மட்டும்தான்.
எல்லோருக்கும் அனுதாபம்
எல்லோரும் அனுதாபம் கொண்டவர்கள் அல்ல. தூய ஆன்மா மட்டுமே உண்மையான பச்சாதாபத்தை அறிந்திருக்கிறது. பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் அனைவருக்கும் உதவி செய்வார்கள். பாவம் யாராவது உதவி செய்யலாமே என சிந்திக்காமல் நேரடியாக தாங்களே களத்தில் இறங்கி உதவி செய்வார்கள்.
மற்றவர்களிடம் என்ன நடந்தது என்பதை பொறுமையாக கேட்கும் திறனை கொண்டவர்களாக இருப்பார்கள். தூய்மையான உள்ளம் கொண்ட ஒருவர் மற்றவர்களிடம் கேட்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவவும் செய்வார்கள்.
ஏற்றத்தாழ்வு இல்லாமை
வாழ்க்கை என்பது உணர்ச்சிகளின் கலவையாகும், வாழ்க்கையில் மாற்றம் மட்டுமே நிலையானது என்று நமக்கு எப்போதும் கற்பிக்கப்படுகிறது. அதனால், வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் சகஜம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது பொருளாதாரமோ, பதவியோ என எதுவாக இருந்தாலும் சரி.
இவ்வளவு ஏன் மனவேதனை மற்றும் துக்கத்தின் நிலைகளாகக் கூட இருக்கலாம். ஒருவர் வாழ்க்கையில் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும். இந்த நிலையை கருத்தில் கொண்டு, யாரிடமும் எப்போதும் பாரபட்சம் என்பதே பார்க்கக் கூடாது. அனைவரும் சமம் என்ற நிலையுடன் எப்போதும் பழக்கம் கொள்ள வேண்டும்.
ஆன்மீகத்தின் மீதான காதல்
தூய்மையான ஆன்மா இயற்கையாகவே ஆன்மீகத்தில் ஈர்க்கப்படுகிறது. அவர்கள் தங்கள் உள் ஆற்றல்களை அறிந்து அதை கட்டுப்படுத்த கற்றுக் கொள்கிறார்கள்.
மற்றவர்களுக்கும் எவ்வாறு உதவ முடியும் என்பதில் ஆர்வமாக இருப்பார்கள். தியானங்கள், நினைவாற்றல், மந்திரங்கள், உறுதிமொழிகள் மற்றும் காட்சிப்படுத்தல் தியானம் போன்ற பலவற்றை தினசரி மேற்கொள்வார்கள். இதன்மூலம் தங்களை தாங்களே கட்டுப்படுத்தக் கொள்கிறார்கள். இவர்கள் தங்களிடம் இருந்து தீயவைகளை ஒதுக்கி வைத்து, தங்களை சுற்றி இருப்பவர்களுக்கு பாசிட்டிவ் எண்ணங்களை வழங்குகிறார்கள்.
தன்னலமற்ற தன்மை மற்றும் நிர்ணயம் இல்லாதவர்கள்
தன்னலமற்ற தன்மை என்பது ஒரு தூய ஆன்மாவின் ஒரு பெரிய குணம் மற்றும் பண்பு. எந்தவொரு நல்ல விஷயத்தையும் பிறருக்கு பகிர்ந்த பிறகே தங்களுக்கு எடுத்துக் கொள்வார்கள். தனக்கென்று எதையும் தன்னலமாக செய்துக் கொள்ளமாட்டார்கள். பிறருக்கு உதவி செய்து உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இதையும் படிங்க: Thiyanam: உங்கள் மனதையும் உடலையும் உடனடியாக அமைதிப்படுத்த உதவும் 5 தியானங்கள்!
அதேபோல் பிறர்களின் நடத்தையை வைத்து ஒருவர் இப்படித்தான் என தீர்மானிக்க மாட்டார்கள். அவர்களுக்கு முடிந்த நல்லதை செய்தும் கற்பித்தும் ஒருவரின் குணாதிசயங்களை சரியாக மாற்ற நினைப்பார்கள்.
pic courtesy: freepik