World Food Safety Day 2024: நீங்க சாப்பிடும் உணவு பாதுகாப்பாக மற்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கான குறிப்புகள் இங்கே

  • SHARE
  • FOLLOW
World Food Safety Day 2024: நீங்க சாப்பிடும் உணவு பாதுகாப்பாக மற்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கான குறிப்புகள் இங்கே


குறிப்பாக, நெருவோரங்களில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான உணவுகள் கலப்பட உணவுகளாகவோ, பூச்சிக்கொல்லிகள், உரங்களின் அதிகமான பயன்பாட்டின் காரணமாக இருக்கலாம். இந்த வகை காய்கறிகள், பழங்களை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கலாம். இதன் விளைவால் நரம்பு மண்டலத்தின் தாக்கம், இன்சுலின் சுரப்பு குறைபாடு, புரதங்களின் செல்லுலார் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைத்தல், கார்போஹைட்ரேட்டுகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் சில பூச்சிக் கொல்லிகளின் வெளிப்பாடு டிமென்ஷியா மற்றும் இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Too Much Milk Effects: பழக பழக பாலும் புளிக்கும் - இது எதுக்கு சொல்றாங்க தெரியுமா?

ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவு குறிப்புகள்

உணவு ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும், சுகாதார நிலைமைகள் மற்றும் நாள்பட்டநோய்களைத் தடுக்கவும் சில உணவுப் பாதுகாப்பு குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.

கைகளை நன்கு கழுவுதல்

எந்தவொரு உணவையும் கையாள்வதற்கு முன்னதாக, கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் குறைந்தது 20 விநாடிகளுக்கு நன்கு கழுவ வேண்டும். இதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க முடியும். எதாவதொரு பொருள்களைத் தொட்ட பிறகு, ஓய்வறையைப் பயன்படுத்திய பிறகு, குறிப்பாக செல்லப்பிராணியைக் கையாண்ட பிறகு கைகள் கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தனித்தனியாக கவனம் செலுத்துதல்

நல்ல ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கவும், மாசுபடுவதைத் தவிர்க்கவும் சில உணவு வகைகளைத் தனித்தனியாக வைத்து பயன்படுத்துவது அவசியமாகும். குறிப்பாக, கடல் உணவுகள், பச்சை இறைச்சி, கோழி போன்றவற்றை மற்ற உணவுகளிலிருந்து விலகி வைக்க வேண்டும். இந்த பொருள்களை குளிர்சாதனப் பெட்டியில் சீல் செய்யப்பட்ட கொள்கலன்களில் சேமித்து வைக்க வேண்டும். இதை மற்ற உணவுகளில் கசிவதைத் தடுத்து பாதுகாப்பானதாக வைக்க வேண்டும். அதே சமயம், கடல் உணவு, கோழி மற்றும் பிற சமைக்கப்படாத உணவுகளுக்கு தனித்தனி தட்டுகள் அல்லது வெட்டு பலகைகளைப் பயன்படுத்துவது முக்கியமாகும்.

கிருமிகளைத் துடைத்தல்

உணவு சமைக்கும் இடமான சமையலறையை சுத்தமாக வைப்பது முக்கியமாகும். இதில் சமையலறை மேற்பரப்புகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகு கட்டிங் போர்டு பாத்திரங்கள் போன்றவற்றை சோப்பு நீரில் சுத்தம் செய்வது முக்கியமாகும். கூடுதலாக, தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் பரவாமல் இருக்க, காய்கறிகள் மற்றும் பழங்களை நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் கிருமிகளை எளிதாக நீக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! குறிப்பா இந்த உணவுகளை சாப்பிடவே சாப்பிட்ராதீங்க

கெட்டுப்போனதா என்பதைச் சரிபார்ப்பது

நாம் உண்ணும் உணவு மற்றும் உணவு சமைக்க பயன்படுத்தும் பொருள்கள் எப்போதும் புதியதாக மற்றும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே சமைப்பதற்கு அல்லது சாப்பிடுவதற்கு முன் ஏதேனும் கெட்டுப்போனதா அல்லது சேதமடைந்ததா என்பதைச் சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும். அதே சமயம், உணவுப் பொருள்களை வாங்கும் முன் காலாவதி தேதியைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் சந்தேகத்திற்கிடமான உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். இவ்வாறு உணவு கெட்டுப்போனதா, பாதுகாப்பற்றதா என்பதைக் கண்டறிந்த பிறகு எடுத்துக் கொள்வது புத்துணர்ச்சியைத் தருகிறது.

சரியான வெப்பநிலையில் சமைப்பது

உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், தீங்கு விளைவிக்கும் கிருமிகளிலிருந்து விடுபடவும், உணவை சரியான முறையில் சமைக்க வேண்டியது அவசியமாகும். உறைந்த உணவைக் கரைக்கும் போது, குளிர்சாதன பெட்டி, குளிர்ந்த நீர் அல்லது மைக்ரோவேவ் ஓவனில் செய்ய வேண்டும். ஏனெனில் இதை கவுண்டரில் விடுவது பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. சமைக்க மற்றும் சூடுபடுத்துவதற்கு பேக்கேஜ் வழிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியமாகும்.

பாதுகாப்பான உணவு கையாளுதல் பயிற்சி

மாசுபடுவதைத் தடுக்க, உணவைக் கவனமான முறையில் கையாள வேண்டும். அதன் படி, எப்போதும் சுத்தமான பாத்திரங்களைப் பயன்படுத்துவது, உணவை நேரடியாகக் கைகளில் தொடுவதைத் தவிர்ப்பது போன்றவற்றைக் கையாள வேண்டும்.

இந்த வகை உணவு பாதுகாப்பு முறைகளைக் கையாள்வது ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவுகளை எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: CWC 5 Special: மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ப்ரான் ரெசிபி! இதுல இருக்க நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Image Source: Freepik

Read Next

World Food Safety Day: பாதுகாப்பான சமையல் மற்றும் சேமிப்பு குறிப்புகள் இங்கே…

Disclaimer