உலக சாக்லேட் தினம் 2025: டார்க் சாக்லேட் சாப்பிடுவதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது?

Health benefits of eating dark chocolate everyday: ஜூலை 7 அன்று கொண்டாடப்படும் சாக்லேட் தினம் இனிப்பைப் பகிர்ந்து கொண்டாட மட்டுமல்லாமல், சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து அறியும் நாளாகும். இதில் சாக்லேட் சாப்பிடுவதன் நன்மைகள் மற்றும் அதை யார் சாப்பிடக்கூடாது என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
உலக சாக்லேட் தினம் 2025: டார்க் சாக்லேட் சாப்பிடுவதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது?

World chocolate day 2025 why chocolate day is celebrated: ஆண்டுதோறும் ஜூலை மாதம் 7 ஆம் நாள் உலக சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினமானது சாக்லேட் பிரியர்களுக்கு சிறப்பு வாய்ந்த தினமாகக் கருதப்படுகிறது. பொதுவாக, சாக்லேட் சுவை மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆனால், இது அனைவருக்கும் நன்மை தராது என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஆம் சாக்லேட் உட்கொள்வது அனைவருக்கும் நன்மையைத் தராது.

சிலர் அதைத் தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும். இந்த சிறப்பு தினத்தில் ஜூலை 7 அன்று சாக்லேட் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதையும், சாக்லேட்டின் நன்மைகள் மற்றும் அதை யார் தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: டார்க் சாக்லேட் சாப்பிடுங்க.. சும்மா பளபளனு தங்கம் போல ஜொலிக்கும் சருமத்தைப் பெறுங்கள்

ஜூலை 7 அன்று சாக்லேட் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

சாக்லேட் தினம் முதலில் ஆரம்பமானது 1550 ஆம் ஆண்டு என்று நம்பப்படுகிறது. அப்போது முதன் முதலில் சாக்லேட் ஐரோப்பாவிற்கு கொண்டு வரப்பட்டது. அதாவது ஜூலை 7, 1550 அன்று ஐரோப்பாவில் சாக்லேட் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நாளை நினைவு கூறும் வகையில், சாக்லேட்டின் சுவை மட்டுமல்லாமல், அதன் நன்மைகள் மக்களுக்குத் தெரியும் வகையிலும், ஜூலை 7 ஆம் நாள் "உலக சாக்லேட் தினம்" கொண்டாடப்படுகிறது.

பொதுவாக, சாக்லேட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் விரும்பக்கூடிய ஒன்றாகும். ஆனால், இதை தினமும் உட்கொள்வது உடல் நலத்திற்கு ஆரோக்கியமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். சில சாக்லேட்களைத் தினமும் போதுமான அளவு உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் டார்க் சாக்லேட் முக்கிய பங்கு வகிக்கிறது. டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

டார்க் சாக்லேட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

டார்க் சாக்லேட்டில் உள்ள முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக கொக்கோ அமைகிறது. இந்த மூலப்பொருளே சாக்லேட்டிற்குத் தனித்துவமான சுவையைத் தரக்கூடியதாகும். மேலும் இந்த டார்க் சாக்லேட்டில் நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்து, மக்னீசியம், காப்பர், மாங்கனீசு போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை சில நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கவும் உதவுகிறது.

செயல்திறனை அதிகரிக்க

சாக்லேட்டை உட்கொள்வது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், இவை அறிவுத்திறன் மேம்பாட்டிற்கும் உதவுகின்றன. அதன் படி, தினமும் டார்க் சாக்லேட் உண்பதன் மூலம் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்கலாம். இதன் மூலம் செயல்திறனை மேம்படுத்தலாம்.

மனக்கவலையை நீக்குவதற்கு

எதாவதொரு விஷயத்தில் மனக்கவலை அல்லது சோர்வை அனுபவிப்பவராக இருந்தால், அவர்கள் டார்க் சாக்லேட்டை சாப்பிடலாம். இதை உட்கொள்வது அவர்களின் மனநிலையை சீராக வைப்பதுடன், மேலோங்க வைக்கிறது. மேலும், இது மனக்கவலையை நீக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: என்னது.. டார்க் சாக்லேட்டில் கலோரிகள் இல்லையா.?

இதய பாதுகாப்புக்கு

டார்க் சாக்லேட்டில் மிகுதியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இதய பாதுகாப்புக்கு உதவுகின்றன. அதாவது இவை உடலில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளைக் கரைத்து, இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. இவ்வாறு உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

சரும பராமரிப்புக்கு

சில ஆய்வுகளில், டார்க் சாக்லேட் சாப்பிடுவது முகத்தில் உள்ள கரும்புள்ளிக்களைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளே முக்கிய காரணமாகும். இவை முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை நீக்கி பளபளப்பான முகத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் இது புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகின்றன.

சாக்லேட்டை யார் தவிர்க்க வேண்டும்?

சாக்லேட் சுவையாக இருப்பினும், அது சிலருக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் - சாக்லேட்டில் அதிக அளவு சர்க்கரை நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை விரைவில் அதிகரிக்கலாம். எனவே நீரிழிவு நோயாளிகள் சாக்லேட் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

அமிலத்தன்மை பிரச்சனை - சாக்லேட் வயிற்றில் அமிலத்தை அதிகரிக்கக்கூடியதாகும். இவை வாயு அல்லது அமில வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

சிறுநீரக கல் நோயாளிகள் - சாக்லேட்டில் ஆக்சலேட்டுகள் உள்ளன. இவை சிறுநீரகக் கற்கள் பிரச்சனையை மேலும் அதிகரிக்கலாம்.

பல் பிரச்சனைகள் - அதிகளவு சாக்லேட் உட்கொள்வது பற்களின் குழிகளை சேதப்படுத்தக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: Chocolate ரொம்ப புடிக்குமா.? அப்போ World Chocolate Day கொண்டாடப்படும் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க..

Image Source: Freepik

Read Next

வெறும் வயிற்றில் வெள்ளரி ஜூஸ் குடிப்பது இவ்வளவு நல்லதா? ஆரோக்கிய நன்மைகள் இங்கே!

Disclaimer