Doctor Verified

World Alzheimer's Day 2025: அல்சைமர் நோயால் மறதி மட்டுமல்ல.. இந்த உடல்நல பிரச்சனைகளும் ஏற்படும்

அல்சைமர் நோய் முதன்மையாக வயதானவர்களை பாதிக்கக்கூடிய நோயாகும். இது ஒரு நபரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலவீனப்படுத்துகிறது. இதில் அல்சைமர் நோய் மறதி மட்டுமல்லாமல், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. இதில் அல்சைமரால் ஏற்படும் பிரச்சனைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
World Alzheimer's Day 2025: அல்சைமர் நோயால் மறதி மட்டுமல்ல.. இந்த உடல்நல பிரச்சனைகளும் ஏற்படும்


அல்சைமர் நோய் என்பது ஒரு வகையான நியூரோடிஜெனரேட்டிவ் நோயாகும். நியூரோடிஜெனரேட்டிவ் நோய் என்பது நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் ஒரு நிலையைக் குறிப்பதாகும். இதனால் நரம்பு செல்கள் படிப்படியாக இறக்கிறது அல்லது உடைகிறது. இவை மூளை செல்களுக்கு படிப்படியாக சேதத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, உடல் மற்றும் மன திறன்கள் குறைகிறது. எனினும் அல்சைமர் நோய்க்கு நிரந்தர சிகிச்சை இல்லை. ஆனால் சரியான சிகிச்சை மற்றும் பராமரிப்பானது நோயின் வளர்ச்சியை மெதுவாக்குகிறது மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.

உலக அல்சைமர் தினம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. அல்சைமர் நோய் மற்றும் பிற டிமென்ஷியா தொடர்பான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் எடுத்துரைக்கிறது. இந்த நோய் முதன்மையாக வயதானவர்களை பாதிக்கிறது மற்றும் மூளை செல்களை படிப்படியாக இழப்பதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. இது நோயாளிக்கு மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பத்தினருக்கும் பராமரிப்பாளர்களுக்கும் பல சவால்களை முன்வைக்கிறது. எனினும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பல உடல் மற்றும் உளவியல் சவால்களை முன்வைக்கிறது. இதில் அல்சைமர் நோயால் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து லக்னோவில் உள்ள கேர் இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்சஸின் மருத்துவர் டாக்டர் சீமா யாதவ், எம்.டி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: வாழ்நாளில் மறதி என்பதே வராமல் தடுக்க இதை மட்டும் மறக்காம பண்ணுங்க!

அல்சைமர் நோய் வரும்போது ஏற்படும் நோய்கள்

நினைவாற்றல் இழப்பு 

அல்சைமர் நோயின் மிக முக்கியமான சவாலாக அமைவது நினைவாற்றல் இழப்பு ஆகும். நோயாளிகள் சமீபத்திய நிகழ்வுகள், உரையாடல்கள் அல்லது முக்கியமான தகவல்களை நினைவில் கொள்வதில் சிரமப்படுகின்றனர். ஆரம்ப கட்டங்களில் இந்த மறதி சிறிய விவரங்களை மட்டுப்படுத்தலாம். ஆனால் நோய் முன்னேறும்போது, இந்த பிரச்சனை கடுமையாக மாறலாம். ஆனால், நாளடைவில் மற்ற சில முக்கிய விவரங்களையும் மறக்க வழிவகுக்கலாம். இது அன்றாட நடவடிக்கைகளுக்கு மற்றவர்களின் உதவியை நாட வழிவகுக்கிறது.

மொழியைப் பேச மற்றும் புரிந்து கொள்வதில் சிரமம்

அல்சைமர் நோய் நினைவாற்றலை மட்டுமல்லாமல், பிற திறன்களையும் பாதிக்கக்கூடும். இந்நிலையில், அல்சைமர் உள்ள ஒருவருக்கு சரளமாகப் பேச முடியாமல் போகலாம். மேலும், மொழியைப் புரிந்துகொள்வதிலும் பேசுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. பல பொதுவான சொற்கள் நினைவிலிருந்து மங்கத் தொடங்குகிறது. மேலும் நோயாளிகள் சிந்திக்கவும், புரிந்துகொள்ளவும், முடிவுகளை எடுக்கவும் சிரமப்படுவர். அதாவது, கணக்கீடுகள், சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் பகுத்தறிவுடன் போராடுவர். இந்த சவால் ஆனது அவர்களின் சமூக நடவடிக்கைகளை பாதிக்கிறது. உதாரணமாக, அவர்களால் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாமல் போகலாம்.

நாள்பட்ட நோய்களின் ஆபத்து

அல்சைமர் நோய் பல்வேறு நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இதில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கரோனரி தமனி நோய் போன்ற நோய்களும் அடங்குகிறது. ஏனெனில் இதயம் மற்றும் மூளை ஒன்றோடன்று தொடர்புடையவை ஆகும். நீரிழிவு நோயில் அதிக இரத்த சர்க்கரை மூளை செல்களை சேதப்படுத்துகிறது. கூடுதலாக, அதிக கொழுப்பு மூளையில் பிளேக் படிவதை ஊக்குவிக்கக்கூடும். இது அல்சைமர் அறிகுறிகளை அதிகரிக்கலாம். இந்த நாள்பட்ட நோய்கள் அல்சைமர் சிகிச்சையின் செயல்திறனை மெதுவாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த வயசுலயும் மூளை கம்ப்யூட்டர் மாறி வேலை செய்ய இந்த 7 ஃபுட்ஸ உங்க டயட்ல சேர்க்க மறக்காதீங்க

உணவுக் கோளாறு 

அல்சைமர் நோயில் உணவுக் கோளாறுகள் பொதுவாக பசி மற்றும் உணவுப் பழக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் பாகங்களுக்கு ஏற்படும் சேதத்தின் விளைவாகும். இது மூளை செல்களை சேதப்படுத்தி, பசியின்மை, அதிகமாக சாப்பிடுவது அல்லது சாப்பிடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நினைவாற்றல் இழப்பு மற்றும் முடிவெடுப்பதில் சிரமம் போன்றவை ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பதை கடினமாக்குகிறது. இந்நிலையானது ஊட்டச்சத்து குறைபாடுகள், எடை இழப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

உணர்ச்சி மற்றும் மனநல சவால்கள்

அல்சைமர் நோய் ஆனது உணர்ச்சி மற்றும் மனநலப் பிரச்சினைகளுடனும் தொடர்புடையதாகும். மேலும் நோயாளிகள் பெரும்பாலும் பதட்டம், மனச்சோர்வு மற்றும் எரிச்சலை அனுபவிக்கின்றனர். அவர்கள் தங்கள் நிலையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, அவர்களின் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. உணர்ச்சி ரீதியான உறுதியற்ற தன்மை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உறவுகளில் விரிசலுக்கும் வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: ஆபத்து! இந்த 6 பிரச்சனைகள் உங்களுக்கா இருக்கா? மறதி வருவதற்கான ஆரம்ப நிலை இது தான்

Image Source: Freepik

Read Next

நைட் ஷிப்ட் உங்களின் இந்த உறுப்பை ரொம்ப பாதிக்கும்.. அதற்கான காரணங்கள் மற்றும் சரி செய்ய உதவும் வழிகள்! டாக்டர் பால் பரிந்துரை

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 20, 2025 18:07 IST

    Published By : கௌதமி சுப்ரமணி