நவீன வாழ்க்கை முறையால் மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக குடல் பிரச்சனைகள், மன அழுத்தம், தூக்கமின்மை, இரத்த சர்க்கரை மாற்றங்கள் போன்றவை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், நம்முடைய குடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் மேம்படுத்தும் சத்து “நார்ச்சத்து (Fiber)” என்று டாக்டர் பால் பகிர்ந்துள்ளார்.
நார்ச்சத்து (Fiber) என்றால் என்ன?
நார்ச்சத்து என்பது செரிமானம் செய்ய முடியாத ஒரு வகை கார்போஹைட்ரேட். இது பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், முழுதானியங்களில் கிடைக்கிறது. உணவின் மூலம் கிடைக்கும் இந்த இயற்கை சத்து, உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் பங்காற்றுகிறது.
1. குடல் ஆரோக்கியம் & நன்மை தரும் பாக்டீரியா
நார்ச்சத்து, நம் குடலுக்குள் வாழும் நல்ல பாக்டீரியாக்களை ஊட்டுகிறது. இதனால் குடல் மைக்ரோபையோம் வலுப்பெற்று, செரிமானம் எளிதாக நடக்கிறது. ஒரு ஆரோக்கியமான குடல் இருந்தால், மலச்சிக்கல், வாயுத்தொல்லை, செரிமான கோளாறுகள் போன்றவை குறைகின்றன.
2. குடல் – மூளை இணைப்பு
அறிவியல் ஆய்வுகளின்படி, குடல் ஆரோக்கியம் நேரடியாக மூளை ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. குடல் வலுவாக இருந்தால், செரோட்டோனின் (Serotonin) எனப்படும் “மகிழ்ச்சி ஹார்மோன்” அதிகரிக்கிறது. இதனால் மனநிலை சமநிலையில் இருந்து, மன அழுத்தம் குறையும், மனச்சோர்வு குறையும்.
3. இரத்த சர்க்கரை கட்டுப்பாடு
ஃபைபர் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீர் உயர்வு அல்லது தாழ்வு ஏற்படாது. இதனால், மத்தியில் ஏற்படும் சோர்வு (mid-day crash) குறையும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். நீரிழிவு நோய் (Diabetes) கட்டுப்பாட்டில் இருக்கும்.
4. நல்ல தூக்கம் & மனஅழுத்தம் குறைவு
ஃபைபர், இரவு நேரத்தில் ஆழ்ந்த, ஓய்வான தூக்கத்தை பெற உதவுகிறது. மேலும், குடல் – மூளை தொடர்பை வலுப்படுத்துவதால், மனஅழுத்தம், பதட்டம், சினம் போன்றவை குறைகின்றன.
5. அலெர்ஜி (Inflammation) குறைக்கும் சக்தி
குடல் மற்றும் உடலில் ஏற்படும் அலெர்ஜியை (inflammation) ஃபைபர் கட்டுப்படுத்துகிறது. இது மூளையை தெளிவாக வைத்திருப்பதுடன், நினைவாற்றல், கவனிப்பு திறன் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: குடல் ஹெல்தியாக இருக்க நிபுணர் சொன்ன இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க..
ஃபைபர் உள்ள உணவுகள்
மருத்துவர் பரிந்துரைத்த சில உணவுகள்:
* ஆப்பிள் (Apple) – குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* பருப்பு வகைகள் (Lentils) – புரதம் + ஃபைபர் = இதயம் ஆரோக்கியம்.
* ப்ரோக்கொலி (Broccoli) – நோய் எதிர்ப்பு சக்தி உயரும்.
* ஓட்ஸ் (Oats) – கொழுப்புச் சத்து குறைக்கும்.
இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்தால், குடல், இதயம், மூளை – அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.
மருத்துவர் பரிந்துரை
* தினசரி குறைந்தபட்சம் 25-30 கிராம் ஃபைபர் உணவில் இருக்க வேண்டும்.
* பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், பருப்பு வகைகள் – அனைத்தையும் சமமாக சேர்க்க வேண்டும்.
* பாக்கெட் ஸ்நாக்ஸ், ஜங்க் ஃபுட், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
View this post on Instagram
இறுதியாக..
மருத்துவர் பால் கூறியபடி, “Fiber” என்பது மாத்திரை, பவுடர் அல்லது விலை உயர்ந்த சப்பிள்மென்ட் அல்ல. நம்முடைய அன்றாட உணவில் ஏற்கனவே இருக்கும் ஒரு எளிய சத்து. அதனை சரியாக பயன்படுத்தினால், குடல் ஆரோக்கியம், மூளை தெளிவு, இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, நல்ல தூக்கம், மனநிலை சமநிலை என அனைத்தையும் எளிதாக பெற முடியும்.