உதட்டின் நிறத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறும் மருத்துவர் சந்தோஷிமா கார்த்திகேயன், உங்கள் உதடு என்ன நிறத்தில் உள்ளது என்பதை வைத்தே உடலில் என்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை கண்டறிய முடியும் என்கிறார்.
1. பழுப்பு நிற உதடுகள்:
முக்கிய கட்டுரைகள்
உதடுகள் பழுப்பு அல்லது வெளிர் நிறத்தில் இருப்பது ரத்த ஓட்டத்துடன் தொடர்புடையது. மோசமான ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை, குறைந்த இரத்த சர்க்கரை, வைட்டமின் குறைபாடு ஆகியவற்றை குறிக்கிறது.

2. நீல நிற உதடுகள்:
குளிர் பிரதேசங்களில் வாழக்கூடியோர் மற்றும் கரண்ட் ஷாக் அடித்தவர்களின் உதடுகள் நீல நிறத்தில் காணப்படும். நுரையீரல் மூச்சுக்குழாய்களில் பிரச்சனைகள், நிமோனியா, ரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுவோருக்கு உதடுகள் நீல நிறமாக மாறும்.
3. அடர் சிவப்பு நிற உதடுகள்:
உதடுகள் அடர் சிவப்பு நிறத்தில் காணப்படுவது, நச்சுதன்மையால் செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. இதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவு அல்லது பானங்களைக் கொண்டு உடலை உடனடியாக டீடாக்ஸ் செய்ய வேண்டும்.
4. பிங்க் நிற உதடுகள்:
உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பவர்கள், தங்களது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பதை குறிக்கிறது. இவர்கள் உணவு, உடற்பயிற்சி, உறக்கம் என அனைத்து விஷயத்திலும் சரியான முறையைக் கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள்.
5. உதடுகளைச் சுற்றி ஊதா கோடு:
உதடுகளைச் சுற்றி ஒரு ஊதா அல்லது பச்சை நிற கோடு உங்கள் உடலில் ஆற்றல் சமநிலையின்மையைக் குறிக்கிறது. அதாவது எதிர்மறை ஆற்றல் உங்கள் உடலை ஆக்கிரமித்துள்ளது. மிதமான மசாலா பொருட்களை பயன்படுத்துவது, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது இதிலிருந்து விடுபட உதவும்.
6. சிவப்பு நிற உதடுகள்:
சிவப்பு நிற உதடுகள், உங்கள் உடல் அதிக வெப்பமடைவதை சுட்டிக்காட்டுகிறது. இது வாய் துர்நாற்றம், கல்லீரல் செயலிழப்பு, உணவில் ஒவ்வாமை ஏற்படுவதை குறிப்பதாக மருத்துவர் தெரிவிக்கிறார்.
7. வறண்ட உதடுகள்:
சிலருக்கு உதடுகள் அதிக வறட்சியோடும், வெடிப்புகளுடனும் காணப்படும். உடலில் நீர்ச்சத்து மற்றும் ஓமேகா குறைபாடு உள்ளவர்களின் இதழ்கள் வறட்சியாக காட்சியளிக்கும்.
8. உதடு ஓரங்களில் வெடிப்பு:
வைட்டமின் பி12 குறைப்பாடு கொண்டவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் வெடிப்புகள் காணப்படும். வைட்டமின் பி12 நிறைந்த முட்டையின் வெள்ளைக்கரு, சீஸ், கீரைகளை உட்கொள்ள வேண்டும்.