$
கடுமையான நோய் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க, ஆன்டி பயாடிக் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக, ஆன்டி பயாடிக் மருத்துகளை நாம் உட்கொள்கிறோம். இது உங்கள் உடல் உறுப்புகளை சேதப்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? மருந்துக்கு பதிலாக உணவு மூலம் இயகையான முறையில் ஆன்டி பயாடிக பெற முடியும். நோய் தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாக்கவும், நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும் உதவும், ஆன்டி-பயாடிக் பண்புகள் நிறைந்த உணவுகள் குறித்து இங்கே காண்போம்.
வெங்காயம்
வெங்காயத்தில் பிளாவனாய்டுகள் உள்ளன. இது ஒரு சிறந்த ஆன்டி பயாட்டிக் பொருளாகும். இதனை நீங்கள் பச்சையாகவோ, எல்லா வகையான உணவுகள் மற்றும் சூப்களிலோ இணைத்து சாப்பிடலாம்.
இஞ்சி

இஞ்சி ஒரு சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு உணவாக திகழ்கிறது. இது அழற்சி எதிர்ப்பு உணவுகளில் முதன்மையாக இருக்கிறது. இதில் ஜிஞ்சரால், ஜெரம்போன், ஜிங்கரோன், டெர்பெனாய்டுகள், ஷோகோல் மற்றும் ஆன்டி-பயாடிக் பண்புகள் உள்ளன. இந்த நன்மைகளை பெற, இஞ்சியை சாலட், டீ மற்றும் சூப்களில் இணைத்து சாப்பிடலாம்.
இதையும் படிங்க: Heart Health Foods: இதய நோய் வராமல் இருக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!
ஆர்கனோ எண்ணெய்
பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு கலவைகளை, ஆர்கனோ எண்ணெய் கொண்டுள்ளது. இதில் சில ஆன்டி-பயாடிக் கலவைகளும் உள்ளன. நீங்கள் ஆர்கனோ எண்ணெய் வாங்குவதற்கு முன், அது சுத்தமான எண்ணெய்தானா என்பதை சரிபார்க்க வேண்டும்.
பூண்டு

பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட, பூண்டு சிறந்து திகழ்கிறது. இதனை மிதமான அளவோடு உணவில் சேர்க்க வேண்டும். அரிதான நோய்க்கிருமிகளைக் கொல்ல பூண்டு உதவும்.
தேன்
நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட தேன் உதவுகிறது. குறிப்பாக மனுகா தேன் மிகவும் நன்மை வாய்ந்தது. இதில், ஆன்டி பயாடிக் பண்புகள் அதிக அளவில் உள்ளது.
எந்த வகையான உணவாக இருந்தபோதிலும், பகுதி கட்டுப்பாடு மிக அவசியம். உங்களுக்கு ஏதேனும் உணவு ஒவ்வாமை இருந்தால், உணவு முறையில் மாற்றம் செய்யும் முன்னும், புதிய உணவுகளை முயற்சிக்கும் முன்னும், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
Image Source: Freepik