$
Eye Redness Reasons: கண்கள் மனித உடலில் மிக முக்கியமான உறுப்பு. டிஜிட்டல் இந்தியாவில் அனைத்து அணுகலுக்கும் கண்கள் என்பது பிரதானம். பொழுதுபோக்கு என்று எந்த திசையில் திரும்பினாலும் திரை அணுகல் தான். கண்கள் உடலில் மிகவும் உணர்திறன் வாய்ந்த உறுப்பு. கண் பிரச்சினைகள் நிறைய கவலை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். கண் பிரச்சனைகள் அன்றாட வேலைகளுக்கு இடையூறாக இருக்கும்.
கண்கள் சிவந்தால் இரத்தம் போல் இருக்கும். இதற்கான காரணம், கண்ணில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் வீக்கமடைந்தாலோ அல்லது அதில் பாதிப்பு ஏற்பட்டாலோ இந்த பிரச்சனை ஏற்படும்.
இதையும் படிங்க: சொத்தைப் பற்களுக்கான ரூட் கெனால் சிகிச்சை - முழு விவரங்களையும் மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்வோம்
கண்கள் சிவத்தலை குறைப்பது எப்படி?

கண்கள் சிவக்க பல காரணங்கள் உள்ளன. கண் எரிச்சல், தூக்கமின்மை, கண்களில் அதிக அழுத்தம் போன்றவற்றால் கண்கள் சிவந்து போகும். சிவப்பு கண்களுக்கு வேறு காரணங்கள் உள்ளன. தூசி, புகை, கண்ணீர் இல்லாமை, சேதமடைந்த கண் இமைகள் போன்றவையும் கண் எரிச்சல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
கண் சிவத்தல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற வீட்டிலேயே இருந்து சில குறிப்புகள் மற்றும் வீட்டு வைத்தியங்களை பின்பற்றினால், அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். கண்கள் சிவந்து, பிரச்னை கடுமையாக இருந்தால், கண் டாக்டர்கள் மற்றும் நிபுணர்களை அணுகி, தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
அலோவேரா ஜெல்
குறிப்பாக கற்றாழை ஜெல் கண் வீக்கத்தை குறைக்கிறது. இது சிவப்பு கண் பிரச்சனையை நீக்குகிறது. கண்களில் ஏற்படும் அழற்சி பிரச்சனையை குறைக்கிறது. கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. கற்றாழை ஜெல் அல்லது சாறு கண்களை சுற்றி தடவவும்.
தேங்காய் எண்ணெய்
கண்கள் சிவப்பாக இருந்தால் தேங்காய் எண்ணெய் தடவவும். தேங்காய் எண்ணெயில் வைட்டமின் கே, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது கண்களில் வறட்சி மற்றும் எரிச்சலை போக்க உதவுகிறது. கண்களில் பயன்படுத்த சில ஆர்கானிக் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தவும். இது கண்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.
கண்களை சுற்றி ஐஸ் தடவுங்கள்
கண் சிவந்து வீங்கியிருந்தால், ஒரு சிறிய ஐஸ் துண்டை சுத்தமான துணியில் கட்டி கண்ணின் மீது வைக்கவும். வட்ட இயக்கத்தில் சுற்றி மசாஜ் செய்யவும். 3 நிமிடங்களுக்குப் பிறகு கண்களை சுற்றி சுத்தமான துணியை வைத்து துடைத்து எடுக்கவும்.
கண்கள் சிவந்து போக முக்கிய காரணம்
சில வகையான பாக்டீரியா தொற்றுகள் கண்களை வீக்கமடைய வைத்து சிவக்க வைக்கலாம். வைரஸ் கிருமியால் தொற்று ஏற்பட்டால், கண்களில் நீர் வழியும்.
பிளெஃபாரிடிஸ் என்பது கண் பார்வையின் மிகவும் பொதுவான தொற்றுகளில் ஒன்றாகும். இது ஒரு பாக்டீரியா தொற்று. இதனால் கண்கள் சிவக்கும். இது அசுத்தம் மற்றும் அழகு சாதனத்தால் ஏற்படுகிறது.

சிலருக்கு சில வகையான ஒவ்வாமைகளால் தொந்தரவு ஏற்படுகிறது, உதாரணமாக பூக்களிலிருந்து வரும் மகரந்தம் கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது மற்றும் கண்கள் சிவந்து போக செய்கிறது.
கண்ணில் பயன்படுத்தப்படும் கான்டாக்ட் லென்ஸ்கள் சரியாக சுத்தம் செய்யப்படாவிட்டால், நோய்த்தொற்று கண்ணுக்குள் நுழைந்து கண் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்
தொடர்ந்து திரை அணுகலை மேற்கொண்டாலும் கண்கள் சிவந்து போகச் செய்யும். மொபைல், லேப்டாப், டிவி போன்றவற்றை பார்க்கும் போது சற்று இடைவெளி எடுங்கள்.
Image Source: FreePik