
பல பெண்கள் எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். ஆனால், வலி சில நாட்களில் அதிகரித்து, சில சமயங்களில் தாங்க முடியாத அளவுக்கு மாறுவது ஏன் என்று பலருக்கும் புரியாது. இதற்கு ஒரு முக்கிய காரணம், மன அழுத்தம் (Stress) என்று மகப்பேறு நிபுணர் டாக்டர் ராஜேஸ்வரி ரெட்டி விளக்குகிறார்.
மன அழுத்தம் உடலில் என்ன செய்கிறது?
நாம் மனஅழுத்தத்தில் இருப்போம் என்றால், உடலில் கோர்டிசால் எனும் ஹார்மோன் சுரக்கிறது. இது எதிர்வினை ஹார்மோன். இதன் அளவு அதிகரிக்கும்போது உடலில் அரிப்பு அதிகரிக்கிறது. இதனால் வலியும், உடல் சென்சிட்டிவிட்டியும் கூடுகிறது. அதன் விளைவாக, எண்டோமெட்ரியோசிஸ் நோயாளிகளுக்கு வலி திடீரென அதிகரிக்கும்.
“Endo Belly” என்றால் என்ன?
மனஅழுத்தம் வந்தால், செரிமானம் (digestion) தாமதமாகி, குடல் இயக்கம் மந்தமாகிறது. இதனால் திடீரென வயிறு பெரிதாகவும், கனமாகவும், புண்ணாகவும் உணரப்படுவது வழக்கம். இதுதான் Endo Belly எனப்படும் நிலை. சில மணி நேரங்களுக்குள் வயிறு வீங்குவது, உப்புசம், கனமான உணர்வு, அசௌகரியம் போன்ற அறிகுறிகள் இதன் போது அதிகரிக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியத்திற்கு.. இந்த மூலிகையை சாப்பிடுங்க.. மருத்துவர் பரிந்துரை..
சிகிச்சை மருந்துகளால் மட்டும் அல்ல.. மன அமைதியாலும் முடியும்..
டாக்டர் ராஜேஸ்வரி ரெட்டி கூறுவதாவது, “எண்டோமெட்ரியோசிஸ் நிர்வாகம் என்பது மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை மட்டும் அல்ல. உடல்- மனம் முறைகளும் மிகப்பெரிய பங்காற்றுகின்றன” என்றார்.
அதற்கான சில பயனுள்ள நடைமுறைகள்
* யோகா (Yoga) – உடல் நெகிழ்வை அதிகரித்து, மனஅழுத்தத்தை குறைக்கும்.
* ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி (Deep Breathing) – உடல் நரம்புகளை தளர்த்தி, வலியை தணிக்கும்.
* தியானம் (Meditation) – கோர்டிசால் அளவை குறைத்து, மன அமைதியை அளிக்கும்.
* மெதுவான நடைப்பயிற்சி (Gentle Walks) – செரிமானத்தை சீராக்கி, உப்புசத்தை குறைக்கும்.
View this post on Instagram
மனநலனும் உடல் நலனும் இணைந்தவை
மருத்துவர் கூறுவதாவது, “மனநலத்தை கவனிப்பது என்பது உடல் நலத்தைப் பராமரிப்பதற்கு இணையானது.” நீங்கள் மனஅழுத்தத்தை குறைத்து அமைதியான வாழ்க்கையை கடைப்பிடித்தால், உடல் வலியும் குறைந்து, இரவுகள் நிம்மதியாக மாறும்.
இறுதியாக..
எண்டோமெட்ரியோசிஸ் என்பது உடலில் மட்டுமல்ல, மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை. ஆனால், மருந்துகள் மட்டுமல்லாது யோகா, தியானம், ஆழ்ந்த மூச்சு, நடைப்பயிற்சி போன்ற எளிய வழிகளும் பெரும் நிவாரணத்தை தரக்கூடியவை. உடல் நலத்துடன் மன அமைதியையும் பராமரியுங்கள். அதுவே முழுமையான நலன்.
Disclaimer: இந்தக் கட்டுரை பொதுத் தகவலுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இது மருத்துவ ஆலோசனையாகக் கருதப்படக்கூடாது. எண்டோமெட்ரியோசிஸ் அல்லது வலி தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் தகுதியான மகப்பேறு நிபுணரை அணுகவும்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Oct 16, 2025 12:14 IST
Published By : Ishvarya Gurumurthy