$
Right time to drink tea morning or night: நம்மில் பலர் டீ அல்லது காபியுடன் தான் நமது நாளை துவங்குவோம். இன்னும் சிலர் டீயை உணவாக பார்க்கிறார்கள். பசித்தால் டி, மகிழ்ச்சி என்றால் டீ, துக்கம் என்றாலும் டீ என எல்லா சமயங்களிலும் டீயை சுவைக்க விரும்புகிறார்கள். பெரும்பாலும் தேநீர் காலையிலும் மாலையிலும் குடிக்கும் வழக்கம் மக்கள் மத்தியில் உள்ளது. இன்னும் சிலர் உணவு உண்ட பிறகு தேநீர் அருந்துவார்கள். பால் டீ குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு உண்ண சரியான நேரம் இருப்பதைப் போல, தேநீர் அருந்தவும் சரியான நேரம் இருக்கிறது. அடிக்கடி டீ குடிப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஆரோக்யா டயட் மற்றும் நியூட்ரிஷன் கிளினிக்கின் டயட்டீஷியன் டாக்டர். சுகீதா முத்ரேஜா தேநீர் அருந்த சரியான நேரம் எது குறித்து நமக்கு விளக்கியுள்ளார். அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க 6 குளிர்கால பானங்கள்
தேநீர் அருந்த சரியான நேரம் எது?

பெரும்பாலான இந்தியர்கள் தேநீர் அருந்த விரும்புகிறார்கள். சிலர் காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பார்கள், மற்றவர்கள் மாலையில் டீ குடிக்க விரும்புகிறார்கள். ஆனால், சரியான நேரத்தில் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இது குறித்து டாக்டர் சுகீதா முத்ரேஜா கூறுகையில், காலை 11 முதல் 12 மணிக்குள் தேநீர் அருந்த சரியான நேரம்.
காலை உணவுக்கு 2 மணி நேரம் கழித்தும், மதிய உணவுக்கு 1-2 மணி நேரத்திற்கு முன்பும் தேநீர் அருந்துவது நல்லது. இதனால், உங்களின் உணவு நன்றாக ஜீரணமாகும். அசிடிட்டி, எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது. தவறான நேரத்தில் தேநீர் குடிப்பது உங்கள் முழு உடலுக்கும் தீங்கு விளைவிக்கும். மேலும், அதிகமாக தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : வேர் காய்கறிகளும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்
எப்போது டீ குடிக்கக் கூடாது?

- உணவு உண்ட உடனேயே தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
- உணவுடன் தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
- காலையில் எழுந்தவுடன் சுமார் 2 மணி நேரம் தேநீர் அருந்தக்கூடாது.
- காலை உணவுக்குப் பிறகு 1-2 மணி நேரம் தேநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- மாலை 4-5 மணிக்கு மேல் தேநீர் அருந்தக் கூடாது.
- இரவில் தூங்கும் முன் தேநீர் அருந்தவே கூடாது.
- மலச்சிக்கல் ஏற்பட்டால் தேநீர் அருந்தக் கூடாது.
- உங்களுக்கு ஏதேனும் தீவிர நோய் இருந்தால், மருத்துவரை அணுகிய பின்னரே தேநீர் உட்கொள்ள வேண்டும்.
- உங்களுக்கு அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், தேநீரை தவிர்க்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : காய்ச்சல் விரைவில் குணமாக இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்!!!
தவறான நேரத்தில் தேநீர் அருந்துவதால் ஏற்படும் தீமைகள்

உணவுடன் தேநீர் அருந்துவது தீங்கு விளைவிக்கும். இது உணவை உறிஞ்சுவதில் உடல் சிக்கலை ஏற்படுத்தும். மேலும், தவறான நேரத்தில் டீ குடிப்பதால் உடலில் உள்ள வாத சமநிலையின்மை ஏற்படும். மாலை நேரத்திற்கு பிறகு தேநீர் குடித்தால், அது உங்கள் தூக்கத்தை மோசமாக பாதிக்கும். இரவில் டீ அல்லது காபி குடிப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பெட் டீ எடுத்துக்கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.
Pic Courtesy: Freepik