Cholesterol Control Drinks: உடலின் கொழுப்பு அளவை குறைக்க உதவும் பெஸ்ட் பானங்கள்!

  • SHARE
  • FOLLOW
Cholesterol Control Drinks: உடலின் கொழுப்பு அளவை குறைக்க உதவும் பெஸ்ட் பானங்கள்!


கொலஸ்ட்ரால் மூலம் ஏற்படும் அபாயம்

அதிகப்படியான, குறிப்பாக கெட்ட கொழுப்பு (எல்டிஎல்) போன்றவையே ஆபத்தானதாக கருதப்படுகிறது. இது இதயத்தின் இரத்த நாளங்களில் உறைவு உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதயம், மூளை போன்றவைகளில் அடைப்பு ஏற்படுத்துகிறது. அதிக கொழுப்பு இதய பிரச்சனைகள், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது.

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. கொலஸ்ட்ரால் அளவு உச்ச நிலையை அடையும் போது.. அதன் அறிகுறிகள் தெரியும். மார்பு வலி, உடல் பருமன், கால்களில் வலி, வியர்வை போன்ற அறிகுறிகள் தோன்றும்.

உடல் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் பானங்கள்

அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுபட, தொடர்ந்து பரிசோதனை செய்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். ஆரோக்கியமான சாப்பாடு, நிம்மதியான தூக்கம், தொடர் உடற்பயிற்சி, குறைந்த மன அழுத்தம் போன்றவைகள் கொலஸ்ட்ரால் பிரச்சனையை நீக்கும். அதேபோல் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க சில பானங்களும் உதவியாக இருக்கும். அது என்ன என்று பார்க்கலாம்.

சோயா பால்

சோயாவில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது. கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் அதிக கொழுப்புள்ள பால் மற்றும் பால் பொருட்களுக்கு மாற்றாக சோயா பாலை குடிக்கலாம். சோயா உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. சோயாவில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறைவாக உள்ளது. ஒரு நாளைக்கு 25 கிராம் சோயா புரதத்தை உட்கொள்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.

தக்காளி சாறு

தக்காளி சாறு உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற பொருள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், லிப்பிட் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. தக்காளியில் உள்ள நார்ச்சத்து மற்றும் நியாசின் கொலஸ்ட்ராலை கரைக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 280 மில்லி தக்காளி சாறு குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஓட்ஸ் சாறு

ஓட்ஸில் பீட்டா-குளுக்கன்கள் நிறைந்துள்ளன. அவை குடலில் ஒரு ஜெல் போன்ற பொருளை உருவாக்குகின்றன, இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. பேக் செய்யப்பட்ட ஓட்ஸ் பானம் வாங்கும் பட்சத்தில் அதில் பீட்டா குளுக்கன்கள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

க்ரீன் டீ

காலையில் கிரீன் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. கிரீன் டீயில் உள்ள கேடசின்கள் மற்றும் எபிகல்லோகேடசின் கேலேட் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன. க்ரீன் டீ உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.

உடலில் கொழுப்பு சேரவிடாமல் பார்த்துக் கொள்வது என்பது பல ஆரோக்கிய நன்மைகளுக்கு முன்னோடியான விஷயமாகும். உடல்நலம் தொடர்பான எந்த ஒரு விஷயத்திலும் தீவிரத்தை உணரும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

Image Source: Freepik

Read Next

Omam Water Benefits: தினமும் ஓமம் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்