Benefits of colorful Capsicum: சிவப்பு, மஞ்சள், பச்சை கேப்சிகம்… எதில் அதிக நன்மைகள் இருக்கு?

  • SHARE
  • FOLLOW
Benefits of colorful Capsicum: சிவப்பு, மஞ்சள், பச்சை கேப்சிகம்… எதில் அதிக நன்மைகள் இருக்கு?


சிவப்பு, மஞ்சள், பச்சை என கலர்ஃபுல்லான கேப்சிகம் பீட்சா, நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா வரை பல்வேறு வகையான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. கேப்சிகத்தை உணவில் சேர்ப்பதால் உணவு சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் கண்களை கவர்ந்திழுக்கும் வகையில் அழகான தோற்றமளிக்கிறது. இப்படி பார்த்தாலே வாங்க தூண்டும் வகையில் கலர், கலராய் விற்பனையாகும் கேப்சிகத்தில் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என என்றாவது நினைத்து பார்த்திருக்கிறீர்களா?

இந்த வெவ்வேறு வண்ண காய்கறிகள் ஒன்றோடொன்று கலந்து உணவின் அழகை அதிகரிக்கின்றன. பல்வேறு வகையான கேப்சிகத்தில் மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள் மறைந்துள்ளன. இது நம் உடலை உள்ளிருந்து வலிமையாக்குகிறது. பச்சை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு கேப்சிகம் அனைத்தும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை கொண்டுள்ளன. இருப்பினும் இதில் எந்த நிற கேப்சிகம் சிறந்தது என்பதை கண்டுபிடிப்போம்…

சிவப்பு குடைமிளகாய்:

சிவப்பு குடைமிளகாய், பழுத்ததாக இருப்பதால், மிகவும் இனிப்புச்சுவையுடனும், அதிக ஊட்டச்சத்துக்களும் அடங்கியது. பச்சை மற்றும் மஞ்சள் கேப்சிகத்தை சிவப்பு கேப்சிகத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.

இதையும் படிங்க: Heart Attack : சாப்பிட்ட பிறகு கவனமா இருங்க… இதுகூட மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்!

சரும ஆரோக்கியம், பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க வைட்டமின் ஏ அவசியம். கூடுதலாக, சிவப்பு குடைமிளகாயில் பொதுவாக பச்சை மற்றும் மஞ்சள் குடைமிளகாயை விட அதிக வைட்டமின் சி உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தக்கூடிய ஆக்ஸிஜனேற்றியாகும்.

பச்சை குடைமிளகாய்:

பச்சை நிற குடைமிளகாயானது, பழுப்பதற்கு முன்னதாக ஆரம்ப கட்டத்திலேயே அறுவடை செய்யப்படுகிறது. இதனால் இதில் சிவப்பு குடைமிளகாயை விட கசப்பு சுவை சற்றே அதிகமிருக்கும்.

இது வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகும், இது இரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. அதேபோல் இதில் சிவப்பு குடைமிளகாயைப் போலவே வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

மஞ்சள் குடைமிளகாய்:

மஞ்சள் கேப்சிகம் சத்து நிறைந்தது. இதுவும் சிவப்பு குடைமிளகாயைப் போலவே இனிப்புச்சுவை கொண்டது. சிவப்பு மற்றும் பச்சை குடைமிளகாயைப் போலவே, மஞ்சள் கேப்சிகத்திலும் வைட்டமின் ஏ மற்றும் கே நிறைந்துள்ளது.

கலர் கேப்சிகத்தில் நிறைந்துள்ள தனித்துவமான நன்மைகள் என்னென்ன?

  • கேப்சிகம் - கேப்சைசின் மற்றும் கரோட்டினாய்டுகளைக் கொண்டுள்ளது, இது அதன் நிறத்தை அளிக்கிறது. இவை ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • கிரீன் கேப்சிகம் - வைட்டமின் சி மற்றும் குளோரோபில் உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • மஞ்சள் கேப்சிகம் - கண்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் விழித்திரையைப் பாதுகாக்கும் கரோட்டினாய்டுகளைக் கொண்டுள்ளது.
  • ஆரஞ்சு கேப்சிகம் - இதிலுள்ள பீட்டா கரோட்டின் ஆரஞ்சு நிறத்தை அளிக்கிறது. மேலும் கரோட்டின் கண்களுக்கு நன்மை பயக்குவதோடு, விழித்திரையைப் பாதுகாக்கிறது.

சுவையின் அடிப்படையில் எந்த நிறம் சிறந்தது?

சிவப்பு கேப்சிகம்:

சிவப்பு கேப்சிகம் மிகவும் இனிமையானது மற்றும் சற்று பழ சுவை கொண்டது. இந்த சிவப்பு கேப்சிகத்தை சாலட்களிலும் பச்சையாகப் பயன்படுத்தலாம்.

பச்சை கேப்சிகம்:

சிவப்பு குடைமிளகாயை விட பச்சை குடைமிளகாய் மிகவும் தீவிரமான மற்றும் சற்று கசப்பான சுவை கொண்டது. இந்த குடைமிளகாய் பெரும்பாலும் சாலட்களில் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள் கேப்சிகம்:

மஞ்சள் குடைமிளகாய் பச்சை குடைமிளகாயை விட மென்மையான மற்றும் இனிமையான சுவை கொண்டது. இது அனைத்து தரப்பினராலும் மிகவும் விருப்பக்கூடியதாக உள்ளது.

Image Source: Freepik

Read Next

Beetroot Juice: இவங்க எல்லாம் மறந்து கூட பீட்ரூட் ஜூஸ் குடிக்கக்கூடாதாம்; ஏன் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்