What Is ALS Disease Caused From: கேப்டன் மார்வெல் மற்றும் ஸ்டார் ட்ரெக் தொடர்களில் நடித்து உலகளவில் அறியப்பட்ட ஹாலிவுட் கனடிய நடிகர் கென்னத் மிட்செல் (Kenneth Mitchell) (49) சமீபத்தில் காலமானார். இவ்வளவு இளம் வயதிலேயே அவர் இறந்ததற்குக் காரணம் 'Amyotrophic lateral sclerosis' (ALS) என்ற நோய். இது ஒரு நரம்பியல் நோய்.
இவருக்கு முன் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கும் இந்த நோயால் பல தசாப்தங்களாக அவதிப்பட்டு தனது வாழ்க்கையை இழந்தார். தற்போது கென்னத் மிட்செல் மரணம் அடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் இந்த நோய் குறித்து விவாதம் நடந்து வருகிறது. அப்படி இந்த ALS நோயில் என்ன தான் இருக்கு? இதன் ஆபத்து காரணிகள் என்ன? இதன் அறிகுறிகள் என்ன? என்பதை இங்கே காண்போம்.

ALS நேய் என்றால் என்ன?
அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS) என்பது ஒரு மோட்டார் நியூரான் நோயாகும். இந்த நோய் "லூ கெஹ்ரிக்" நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் நரம்பு செல்கள் பாதிக்கப்படுகின்றன. கால், கை போன்ற உறுப்புகள் வேலை செய்வதை நிறுத்திவிடும்.
சிறு அறிகுறிகளுடன் தொடங்கும் இந்நோய் படிப்படியாக உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் இறப்பதற்கு வழிவகுக்கிறது. நோய் தீவிரமடைந்தால் மரணம் தவிர்க்க முடியாதது.
ALS நேய் அறிகுறிகள்
* தசை பலவீனம்
* உறுப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாமை
* உணவை விழுங்குவதில் சிரமம்
* சரியாக பேச இயலாமை
* கால்கள் மற்றும் கைகளின் தவறான இயக்கம்
* சொந்தமாக நடக்க இயலாமை
* சுவாசிப்பதில் சிரமம்
நோயாளியின் நிலை என்ன?
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுப்புகள் வேலை செய்யாவிட்டாலும், மூளை தொடர்ந்து செயல்படும். பாதிக்கப்பட்டவர்கள் சுயநினைவை இழப்பதில்லை. மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பிரேஷன் நிமோனியா மற்றும் நுரையீரல் தக்கையடைப்பு போன்ற பிற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
நவீன மருத்துவத்தின் வளர்ச்சி இருந்தபோதிலும், சில நோய்களுக்கான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை. ALS அதில் ஒன்று. அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS) சரியான காரணத்தை மருத்துவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் மரபணு பரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் குடும்ப உறுப்பினர்களில் யாருக்கேனும் இந்த நோய் இருந்தால், அது சந்ததியினருக்கும் பரவக்கூடும் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்தால், மருத்துவ சேவைகளைப் பெறலாம்.
Image Source: Freepik