Salt: உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பவரா நீங்கள்?… இதை தவறாமல் படியுங்கள்!

  • SHARE
  • FOLLOW
Salt: உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பவரா நீங்கள்?… இதை தவறாமல் படியுங்கள்!


“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பது அதிக அளவில் உப்பு சாப்பிடுபவர்களுக்கு கச்சிதமாக பொருந்தும். எந்த உப்பு இல்லை என்றால், உணவை ருசித்து சாப்பிட முடியாதோ, அதே உப்பை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு பல்வேறு தீங்கு ஏற்படுகிறது. அப்படி அளவுக்கு அதிகமாக உப்பு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்…

1.வயிற்று உபசம்:

நீங்கள் அதிக அளவு உப்பை உண்ணும் போது இரத்தத்தில் சோடியம் அளவு அதிகரிக்கும், இது உடலில் ரத்தம் உள்ளிட்ட திரவங்களை கட்டுப்படுத்துகிறது. இதனால் வயிறு, முகம் வீங்கியது போன்ற உணர்வு ஏற்படும்.

2.அதிக தாகம்:

அதிக உப்பு நிறைந்த எந்த உணவும் கடுமையான தாகத்தைத் தூண்டும். ரத்தத்தில் சோடியம் அதிகரிப்பதை உணர்ந்து, சிறுநீரகம் மற்றும் மூளையில் உள்ள சுரப்பிகள் தாக உணர்வைத் தூண்டுகின்றன. இதனால் கட்டுக்கடங்காத தண்ணீர் தாகம் ஏற்படக்கூடும்.

3.தலைவலி:

அதிக அளவில் உப்பு சாப்பிடுவது உடனடியாக உடலில் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் சிலருக்கு ரத்த அழுத்தத்தின் பொதுவான அறிகுறியான தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

4.சரும அழற்சி:

எக்ஸிமா போன்ற தோல் அரிப்பு நோய்களுக்கு அதிகப்படியான உப்பு நுகர்வு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதாவது அதிகப்படியான உப்பை உட்கொள்வது டி-செல்களை வெளியிட நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. இது எக்ஸிமா, கீழ்வாதம், ஆஸ்துமா போன்ற நோய்கள் வர காரணமாக அமைகிறது.

5.வயிற்று புற்றுநோய் ஆபத்து:

அதிக உப்பு உட்கொள்வது, உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ள புற்றுநோயான, வயிற்று புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

6.சிறுநீரக கற்கள்:

அதிகப்படியான உப்பை தொடர்ந்து உட்கொள்வதால் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். ஏனெனில் அதிக உப்பு சிறுநீரில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது. சிறுநீரில் கால்சியம் ஆக்சலேட்டுகள் அல்லது யூரிக் அமிலத்துடன் இணைந்து படிகங்களை உருவாக்குகின்றன.

7.டிமென்ஷியா அபாயம்:

உணவில் அதிக அளவில் உப்பை சேர்த்துக் கொள்வது, மூளையில் ஆக்ஸிஜனேற்ற சேதத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் மனிதர்களுக்கு டிமென்ஷியா ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Image Source: Freepik

Read Next

Soup For Sickness: சளி, இருமல், காய்ச்சலால் அவதியா? உடனடி நிவாரணம் பெற இந்த 5 சூப்களை குடிங்க!

Disclaimer

குறிச்சொற்கள்