மழைக்காலம் வந்துவிட்டது. இந்த நேரத்தில் சில உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
பருவம் மாறும்போது நமது உணவு முறையும் மாறுகிறது. அந்த பருவத்தில் சில உணவுகளை சாப்பிட வேண்டும், சிலவற்றை சாப்பிடக்கூடாது. இதன் மூலம் உடல்நலக் கோளாறுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இச்சூழலில், மழைக்காலத்தில் என்னென்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிடக்கூடாது எனத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஃப்ரூட் சாலட்:

கடைகளில் வெட்டி விற்பனை செய்யக்கூடிய ஃப்ரூட் சாலட்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பழங்கள் எப்போது வெட்டப்பட்டன, அவை ப்ரெஷான பழங்களில் இருந்து தான் வெட்டப்பட்டதா? எப்படி சேமித்து வைக்கப்பட்டது? என பல கேள்விகள் உள்ளன. மேலும் கடைகளில் வெட்டி விற்பனை செய்யப்படும் பழங்களில் பாக்டீரியா இருக்கலாம். இதனால் தொற்றுநோய்கள் ஏற்படக்கூடும்.
கீரைகள்:
கீரைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மழைக்காலத்தில் கீரை, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளைக் குறைப்பது நல்லது. மழைக்காலத்தில் இதில் பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளின் வளர்ச்சி அதிகமிருக்கும். இதனால் செரிமான பிரச்சனைகள் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. நீங்கள் பச்சை இலைக் காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்க்க விரும்பினால், அவற்றை நன்கு கழுவி சுத்தப்படுத்த மறக்காதீர்கள்.
மீந்து போன உணவுகள்:
சில சமயங்களில் வீட்டில் சாப்பாடு மீந்து போவது இயல்பானது. அப்படி அதிகமிருக்கும் உணவுகளை ப்ரிட்ஜில் சேமித்து வைத்து,மறுநாள் பயன்படுத்துவோம். ஆனால் மழைக்காலத்தில் இதைச் செய்யக்கூடாது என்பதே பொதுவான அறிவுரையாகும்.
ஏனெனில் மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் இருக்கும், அது உணவில் பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவற்றின் வளர்ச்சியை ஊக்குவித்து, உடல் நலனுக்கு தீங்காக அமையக்கூடும்.
பால்பொருட்கள்:
பால், பாலாடைக்கட்டி மற்றும் பனீர் போன்ற பால் பொருட்களையும் இந்த நேரத்தில் குறைவாக உட்கொள்ள வேண்டும். அதிகமாக உட்கொண்டால் ஃபுட் பாயிஷன் ஏற்பட வாய்ப்புள்ளது .
மேலும் அவை சரியாக பேஸ்டுரைஸ் செய்யப்பட்டுள்ளதா, காலாவதி தேதி எப்பொழுது என்பதைத் தெரிந்து கொண்ட பிறகே எடுக்க வேண்டும் அல்லது இவற்றுக்குப் பதிலாக தயிர், பால் எடுத்துக் கொள்ளலாம்.
எண்ணெயில் பொறித்த உணவுகள்:
குளிர் காலத்தில் சமோசா, பக்கோடா போன்ற வறுத்த பொருட்களை அதிகம் சாப்பிடுவார்கள். அவை வீட்டிலேயே தயாரிக்கப்பட்டவையாக இருந்தாலும் குறைவான அளவில் தான் சாப்பிட வேண்டும்.
வெளியில் தயாரிக்கப்படும் இந்த உணவுகளில் என்ன எண்ணெய் கலக்கப்படுகிறது என்று தெரியவில்லை. இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
முளைக்கட்டிய பயிர்கள்:
முளைக்கட்டிய பயிர்களில் பல அற்புதமான பண்புகள் உள்ளன. ஆனால், இவற்றில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை இருக்க வாய்ப்பு உள்ளது.
பருவமழைக் காலத்தில் இவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால் ஃபுட் பாயிஷன் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் அவற்றை சாப்பிட விரும்பினால், அவற்றை நன்றாக சுத்தம் செய்து சாப்பிடுங்கள்.
கடல் உணவுகள்:
இந்த நேரத்தில் மீன் மற்றும் பிற கடல் உணவுகளை உட்கொள்வதைக் குறைப்பது அல்லது முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மழை நீரில் இந்த கடல் உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி, பாக்டீரியா தொற்று போன்றவை வரலாம்.
Image Source: Freepik