High Salt Foods: உப்பு அதிகம் உள்ள உணவுகள் இது தான்.. விழிப்புடன் இருங்கள்..

  • SHARE
  • FOLLOW
High Salt Foods: உப்பு அதிகம் உள்ள உணவுகள் இது தான்.. விழிப்புடன் இருங்கள்..


பொதுவாக உடல் உழைப்பு செய்யாதவர்கள், அதிக அழுத்தம் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், இளம் வயதிலேயே இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உப்பு மற்றும் காரத்தை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

நாம் வீட்டில் சமைக்கும் போது உப்பு அளவை சரி பார்த்துக்கொள்ளலாம். ஆனால் வெளியில் சாப்பிடும் உணவுகளில் உப்பு அதிகமாக இருந்தால் அதனை நாம் தடுக்க முடியாது. அப்படி வெளியில் உள்ள உணவுகளில், எதில் உப்பு அதிகமாக இருக்கும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். 

உப்பு அதிகம் உள்ள உணவுகள் (High Sodium Foods)

பீட்சா

நம்மில் பலர் பீட்சா சாப்பிட விரும்புகிறோம். ஆனால் இந்த பீட்சாவில் பயன்படுத்தப்படும் சாஸ், மாவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் அதிக உப்பு உள்ளது. எனவே இவற்றை அடிக்கடி சாப்பிடாமல் இருப்பது நல்லது.

சாண்ட்விச்

பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சீஸ் மற்றும் சாலட் ஆகியவை இதில் அடங்கும். இவற்றிலும் உப்பு அதிகம்.

காய்ந்த இறைச்சி

கடைகளில் பொரித்த இறைச்சியும் விற்கப்படுகிறது. இவற்றில் உப்புச் சத்தும் அதிகம்.

ஊறுகாய்

நாம் உண்ணும் மாம்பழம், நெல்லிக்காய் போன்ற பல்வேறு வகையான ஊறுகாய்களில் உப்பு அதிகம் உள்ளது. எனவே, அவற்றின் நுகர்வை குறைக்க வேண்டும். 

சாஸ்கள்

ஃபாஸ்ட் ஃபுட் மையங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு சத்து மிகவும் அதிகம். எனவே, இவற்றை முடிந்தவரை குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

ரொட்டி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பாலாடைக்கட்டி, ரொட்டி போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும்.

குக்கீகள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் குக்கீகளில் கூட உப்பு அதிகம் இருக்கும். எனவே முடிந்தவரை இவற்றின் நுகர்வு குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது.

பேக் செய்யப்பட்ட உணவுகள்

குழந்தைகள் அதிகம் சாப்பிடும் சிப்ஸ் முதல் பல்வேறு பொருட்கள் வரை கடைகளில் பாக்கெட்டுகளாகக் கிடைக்கும். இவை அனைத்திலும் உப்பு அதிகம். எனவே, இவற்றை தொடவே கூடாது.

Read Next

Milk Vs Curd: குடல் ஆரோக்கியத்திற்கு எது மிகவும் நல்லது? பால் அல்லது தயிர்?

Disclaimer

குறிச்சொற்கள்