Ayurveda tea For Good Sleep : நாள் முழுவதும் வேலை செய்து விட்டு, இரவில் நிம்மதியாக தூக்கவேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். நிம்மதியான தூக்கம் இல்லை என்றால் நம்மால் அடுத்த நாள் சுறுசுறுப்பாக பணியாற்ற முடியாது. இந்த நிலை தொடர்ந்தால், பல்வேறு நோய்க்கு வழிவகுக்கும். எனவே, போதுமான தூக்கம் மிகவும் முக்கியமானது. சிலருக்கு படுக்கையில் படுத்தவுடன் உறக்கம் வரும். அதே சமயம், சிலர் இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்படுவார்கள்.
இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பதற்கு பல காரணம் இருக்கலாம். அப்படி பல காரணங்களால் ஒன்று ஹார்மோன் சமநிலையின்மை. இதனால், உங்களின் தூக்கம் அடிக்கடி களையும். இரவில் நிம்மதியாக தூங்க நாங்கள் உங்களுக்கு ஒரு ஆயுர்வேத டீ பற்றி கூறுகிறோம். இது உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : மலச்சிக்கல் இத்தனை பாதிப்பை ஏற்படுத்துமா?
தூக்கமின்மைக்கு காரணம்?

வேலைப்பளு, மன அழுத்தம், மது பழக்கம் மற்றும் கல்லீரல் நோய் ஆகியவை தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கலாம். இரவில் சரிவர தூங்கவில்லை என்றால், கல்லீரல் பாதிக்கப்படும். ஏனென்றால், உடல் ஓய்வு நிலையில் இருக்கும் போது கலீரல் நச்சுத்தன்மையை நீக்குகிறது. இது தவிர, ஹார்மோன் சமநிலையின்மையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். உடலில் உள்ள ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக, உங்கள் தூக்கம் இரவில் மீண்டும் மீண்டும் திறக்கிறது.
தூங்கும் முன் இந்த ஆரோக்கியமான தேநீரை அருந்தவும்
தேவையான பொருட்கள் :
சுக்கு (உலர்ந்த இஞ்சி தூள்) - 1/4 டீஸ்பூன்.
அதிமதுரம் - 1/2 டீஸ்பூன்.
இலவங்கப்பட்டை - 1/4 தேக்கரண்டி.
அஸ்வகந்தா - 1/4 டீஸ்பூன்.
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
- எடுத்து வைத்துள்ள பொடிகளை அதில் கலக்கவும்.
- தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க வைக்கவும்.
- தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இந்த டீயை குடிக்கவும்.
- இதை குடித்து வந்தால் இரவில் நிம்மதியான தூக்கம் வரும்.
இந்த பதிவும் உதவலாம் : நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்
மூலிகை டீயின் நன்மைகள்

- இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. இதில் ஜிஞ்சரால் உள்ளது, இது தூக்க ஹார்மோனை வெளியிட உதவுகிறது.
- அதிமதுரம் மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் மெலடோனின் ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது.
- இலவங்கப்பட்டை தூக்க சுழற்சியை சரிசெய்ய உதவுகிறது.
- அஸ்வகந்தா பதட்டத்தைத் தணித்து உடலைத் தளர்த்தும். இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
Image Credit: freepik