Parotta Side Effects: பரோட்டா பிரியரா நீங்க.? இதை தெரிஞ்சிக்கோங்க..!

  • SHARE
  • FOLLOW
Parotta Side Effects: பரோட்டா பிரியரா நீங்க.? இதை தெரிஞ்சிக்கோங்க..!


Side Effects Of Mide Parotta: எல்லா பகுதிகளிலும் மக்களை கவர்ந்த ஒரு உணவாக பரோட்டா திகழ்கிறது. மக்களையும் பரோட்டாவையும் பிரிக்க முடியாது என்ற நிலை உள்ளது. ருசியால் நம்மை கட்டி இழுத்து வசியம் செய்யும் பரோட்டாவில், எவ்வளவு பக்க விளைவுகள் இருக்கிறது என்று தெரிந்தால் அதை தொடவேமாட்டீர்கள். இதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இங்கே காண்போம். 

சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்து

மைதாவில் கிளைசெமிக் அளவீடு அதிகமாக உள்ளது. இதை உட்கொள்வதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும். மேலும் இதில் மைதாவில் கலக்கப்படும் அல்லோக்ஸான், சர்க்கரை நோயாளிகளின் கணையத்தை நேரடியாக பாதிக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் பரோட்டா சாப்பிடக்கூடாது. மேலும் மைதாவில் தயாரிக்கப்படும் எதையும் சாப்பிடக்கூடாது. 

இதையும் படிங்க: Heart Patients: இதய நோயாளிகள் கோழிக்கறி சாப்பிடலாமா? உண்மை தகவல் இதோ!

நார்ச்சத்து இல்லை

மைதா நிறைந்த உணவில் நார்ச்சத்து கிடையாது. இது செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். நீங்கள் பரோட்டா சாப்பிட்டால் அது செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும். இதனால் வயிறு உப்புதல், நெஞ்செரிச்சல், வாயு பிரச்னை, மலச்சிக்கல் போன்ற குடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். இதனால் உடல் எடை அதிகரிக்கும். முடிந்தவரை பரோட்டாவை அதிகம் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளவும். 

கணைய புற்றுநோய்

மைதாவை தயாரிக்கும் போது அதை வெள்ளையாக்க பென்சாயில் பெராக்ஸைடு கலக்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் அழகு சாதனப்பொருட்களில் பயன்படுத்தப்படும். இதனை உட்கொள்ளும் போது கணையம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். மேலும் இது இன்சுலில் சிரப்பை பாதிக்கும். 

இதய பாதிப்பு

பரோட்டா சாப்பிடுவதால் இதயத்திற்கு இரத்த நாளங்கள் பாதிக்கப்படும். இது கொழுப்பை அதிகரிக்கவும், உடல் எடையை அதிகரிக்கவும், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும் செய்கிறது. இதனால் மாரடைப்பு, நெஞ்சு வலி போன்ற இதயம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். 

Image Source: Freepik

Read Next

காலை டிஃபன்.. வகைவகையான இட்லி ரெடி.! ரொம்ப நல்லது..

Disclaimer