Ajinomoto Side Effects: அஜினமோட்டோவில் இவ்வளவு ஆபத்தா? இது என்ன செய்யும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Ajinomoto Side Effects: அஜினமோட்டோவில் இவ்வளவு ஆபத்தா? இது என்ன செய்யும் தெரியுமா?


Side Effects Of Ajinomoto: உணவகங்கள் மற்றும் துரித உணவு மையங்களுக்குச் செல்வது இப்போது நாகரீகமாகிவிட்டது. சுவையும் சூப்பராக இருப்பதால் குழந்தைகளும் அந்த உணவை விரும்புவார்கள். ஆனால் அந்த உணவுகளில் பயன்படுத்தப்படும் அஜினமோட்டோவால் நீண்டகாலத்தில் மீள முடியாத உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

அஜினமோட்டோ என்றால் என்ன? அது ஏன் ஆபத்தானது? இதனால் என்னென்ன உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்? என்பதை இங்கே காண்போம். 

அஜினமோட்டோ என்றால் என்ன?

அஜினமோட்டோ என்பது மோனோசோடியம் குளூட்டமேட் என்ற வேதிப்பொருள். இது பெரும்பாலும் சீன உணவுகளில் சுவையூட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த அஜினமோட்டோவை சைனீஸ் உப்பு என்று அழைப்பர். 

உணவகங்கள் மற்றும் துரித உணவு மையங்களில் மட்டுமின்றி வீட்டில் சாம்பார், சூப்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கறி வகைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. துரித உணவு மையங்களில் தயாரிக்கப்படும் நூடுல்ஸில் இது கட்டாயம். 

இதையும் படிங்க: ஆபத்து.. குழந்தைகளுக்கு ஃபாஸ்ட் ஃபுட்ஸ் கொடுக்காதீங்க.!

அஜினமோட்டோவைப் பயன்படுத்துவதால் உணவுகளுக்கு நல்ல சுவையும் மணமும் கிடைக்கும். ஆனால் அதன் சுவைக்கு பின்னால் தேன் பூசிய கத்தி போன்ற ஆபத்தான விஷம் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அஜினமோட்டோவின் பக்க விளைவுகள்

* அஜினமோட்டோ (MSG) கொண்ட உணவுகளை உட்கொண்ட பிறகு சிலருக்கு தலைவலி, வியர்வை, நெஞ்சு வலி போன்ற அறிகுறிகளை அனுபவிப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

* அஜினமோட்டோவில் சோடியம் அதிகம் உள்ளது. இந்த சோடியத்தின் அதிக நுகர்வு விரைவில் BP தாக்குதலுக்கு வழிவகுக்கும். இதய நோய் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

*  உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அல்லது இதய நோய் அபாயத்தில் உள்ளவர்கள், முடிந்தவரை அஜினமோட்டோ உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

* அஜினமோட்டோ அதிகம் உள்ள உணவுகள் சுவையானவை மற்றும் அதிகமாக சாப்பிடுவதை ஊக்குவிக்கும். இதனால் நாளடைவில் உடல் எடை அதிகரித்து, உடல் பருமனும் ஏற்படும். 

* அஜினமோட்டோவை அதிகமாக எடுத்துக் கொண்டால், ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கும். 

* அஜினமோட்டோ நரம்பு மண்டலத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. 

* நீங்கள் உண்ணும் உணவுகளில் மோனோசோடியம் குளுட்டமேட் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம்.

* இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து சாதாரண உணவுகளை சாப்பிடுவது நல்லது என சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Image Source: Freepik

Read Next

சுடு சோறு Vs பழைய சோறு: எது பெஸ்ட் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்