Coronavirus Vaccine Side Effects in Tamil: உலகையே உலுக்கிய கொரோனா வைரஸிலிருந்து தங்களை பாதுகாக்க, மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டினார். ஏனென்றால், கொரோனா தொற்று நோயைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்பதால் பலரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டனர். தடுப்பூசி எடுத்துக்கொண்ட 2 ஆண்டுகளுக்கு பின் இதன் பக்க விளைவுகள் தெரிவதாக பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இதன் காரணமாக நக்கல் மத்தியில் பீதி எழுந்துள்ளது.
கடந்த வாரம் கோவிஷீல்டு குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதனால் இதய செயலிழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இதை தொடர்ந்து, தற்போது கோவாக்சின் (Covaxin) தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களும் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த பதிவும் உதவலாம் : Supplements For High BP: உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் 5 சப்ளிமெண்ட்!!
கோவாக்சின் தடுப்பூசி எடுத்தவர்கள் சுவாச தொற்று, இரத்தம் உறைதல் மற்றும் தோல் தொடர்பான நோய்கள் காணப்பட்டன. குறிப்பாக இளைஞர்கள் தோல் தொடர்பான ஒவ்வாமையால் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆய்வு கூறுவது என்ன?

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) ஷங்க சுப்ரா சக்ரவர்த்தி மற்றும் அவரது குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பங்கேற்ற மூன்றில் ஒரு பகுதியினருக்கு கோவாக்ஸின் பக்க விளைவுகள் காணப்பட்டன. அதாவது, கோவாக்சின் மருந்தை எடுத்துக்கொண்ட ஓராண்டுக்குப் பிறகு, அதன் பக்கவிளைவுகள் மக்களிடம் காணப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் சுமார் 1024 பேர் கலந்து கொண்டனர். அதில் 635 இளைஞர்கள் மற்றும் 291 பேர் பெரியவர்கள் ஆவர். அறிக்கையில் கூறப்பட்டுள்ள கூற்றின்படி, ஒரு வருடம் கழித்து, இந்த தடுப்பூசியின் பக்க விளைவுகள் மக்களிடம் தெரிய தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், அதன் பக்க விளைவுகள் 124 இளைஞர்களிடம் காணப்பட்டன.
இந்த பதிவும் உதவலாம் : Female Fertility: தூக்கமின்மை கருவுறுதலை பாதிக்குமா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!
என்னென்ன பக்கவிளைவுகள் காணப்படும்
அறிக்கையின்படி, சிலருக்கு கோவாக்ஸின் ஒரு வருடத்திற்குப் பிறகு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகளை 0.3 சதவிகிதம் பேருக்கும், Guillain-Barré சிண்ட்ரோம் 0.1 சதவிகிதம் பேருக்கும் காணப்பட்டது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஆண்களை விட பெண்களே இதன் பக்கவிளைவுகளுக்கு அதிகம் பலியாவதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசியைப் பெற்ற பிறகு பெண்களுக்கும் தைராய்டு பிரச்சனைகளும் காணப்படுகின்றன.
இளைஞர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்

அறிக்கையின்படி, அதன் பக்க விளைவுகள் இளம் வயதினரிடையே அதிகம் காணப்படுகின்றன. ஆய்வில் பங்கேற்ற 1024 பதின்ம வயதினரில், 48 சதவிகிதம் அதாவது 304 இளைஞர்களுக்கு மேல் சுவாசக்குழாய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது சுவாச அமைப்பு தொடர்பான பிரச்சனையாகும். இது மட்டுமின்றி, 'புதிய-ஆன்செட் ஸ்கின் மற்றும் சப்குட்டேனியஸ் கோளாறு' 10.5 சதவீத இளைஞர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம் : ஒரே நாளில் இத்தனை பேருக்கா.? மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு.!
என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்?
இளைஞர்களிடையே காணப்படும் பிரச்சினை
- தோல் மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகள் (10.5%)
- பொது உடல் பிரச்சனைகள் (10.2%)
- நரம்பு மண்டல கோளாறுகள் (4.7%)
பெரியவர்களிடையே காணப்படும் பிரச்சினை
- பொது உடல் பிரச்சனைகள் (8.9%)
- தசைக்கூட்டு கோளாறுகள் (5.8%)
- நரம்பு மண்டல கோளாறுகள் (5.5%)
கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு நீங்கள் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டாலோ அல்லது புதிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, கண்டிப்பாக உங்கள் மருத்துவரை அணுகவும்.
Pic Courtesy: Freepik