ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் தொடர்பான ஒரு நோயாகும். இந்த நோயில், எலும்புகள் மிகவும் பலவீனமாகி, நபர் நடக்க கூட சிரமப்படுவர். இந்த நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், ஆபத்தான கட்டத்தை நோக்கி அழைத்துச்செல்லும். மயோகிளினிக்கின் கூற்றுப்படி, ஆஸ்டியோபோரோசிஸ் என்பது நீண்டகால கால்சியம் குறைபாடு காரணமாக ஏற்படும் ஒரு நோயாகும். இந்த நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பது முக்கியம். ஆஸ்டியோபோரோசிஸ் காரணமாக, ஒரு நபர் சிறிது தும்மினாலும் அல்லது விழுந்தாலும், அவரது எலும்புகளில் விரிசல் அல்லது முறிவு ஏற்படலாம்.
ஆஸ்டியோபோரோசிஸ் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்படலாம். உண்மையில், இந்த நோய் வயதுக்கு ஏற்ப அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால், சமீப காலமாக, இளைஞர்களிடையே கூட ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் அதிகரித்துள்ளது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. இது குறித்து, டெல்லியில் உள்ள அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கௌரவ் கேடா இங்கே பகிர்ந்துள்ளார்.

உடல் செயல்பாடு இல்லாமை
நாம் நம் உடலுக்கு அதிகபடியான செயல்பாடுகள் கொடுக்காவிட்டால், இது போன்ற மோசமான நோய்க்கு தள்ளப்படுவோம். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் வேலை செய்கிறார்கள். உடல் செயல்பாடுகள் அலட்சியமாகிவிட்டன. இந்த நிலை எலும்புகளில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதால் எலும்புகள் மற்றும் தசைகள் விறைப்பாக மாறுகிறது.
அதிகப்படியான மது அருந்துதல்
ஒரு நபர் நீண்ட காலமாக அதிக போதைப்பொருளை உட்கொண்டால், குறிப்பாக மது அருந்தினால், இந்த நிலையில், எலும்புகளில் மோசமான விளைவுகளைக் காணலாம். அதுமட்டுமின்றி, இது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் அதிகரிக்கிறது. NCB இல் வெளியிடப்பட்ட கட்டுரையின் படி, ஒருவர் நீண்ட நேரம் புகைபிடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு அபாயம் அதிகரிக்கிறது.
மருந்துகளின் பக்க விளைவுகள்
சில சமையங்களில் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் நன் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. உண்மையில், எலும்புகளை பலவீனப்படுத்தும் பல மருந்துகள் உள்ளன. இதில் நீரிழிவு மருந்துகள் மற்றும் வலிப்புக்கான பல மருந்துகளும் எலும்புகளை வலுவிழக்கச் செய்யும். நீங்கள் நீண்ட நாட்களாக ஏதேனும் மருந்தை உட்கொண்டிருந்தால், உங்கள் மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.
ஆரோக்கியமற்ற உணவுகள்
நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஆரோக்கியமான உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல், தவறான உணவு முறையும் நம் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. ஒருவர் அதிக கலோரி உணவுகளை உட்கொண்டால், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டால், அதிகப்படியான நொறுக்குத் தீனிகளை உட்கொண்டால், அது எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைத் தவிர்க்க, உங்கள் உணவில் பருப்பு வகைகள், முழு தானியங்கள், புரதம் சார்ந்த உணவுகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது அவசியம்.
Image Source: Freepik