கடந்த 2 ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் தலை தூக்கத் தொடங்கி இருக்கிறது. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் சற்று வேகமாகவே இருக்கிறது.
இதையடுத்து இந்தியாவில் சமீபத்திய சில நாட்களாக கொரோனா பாதிப்பு பரவல் சற்று வேகமெடுக்கத் தொடங்கி இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1007 ஆக இருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. மாநிலங்கள் வாரியாக பார்க்கையில், கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் பிற மாநிலங்களைவிட அதிகரித்து வருகிறது.
மேலும் படிக்க: இந்த மழை நாட்களில் இந்த சூப்பர்ஃபுட்டை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க..!
இந்தியாவில் எந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்?
கேரளா மாநிலத்தை பொறுத்தவரை 335 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 430 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் மகராஷ்டிராவில் 153 பேரும், டில்லியில் 99 பேரும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி மொத்தமாக மகாராஷ்டிராவில் 209 பேருக்கும், டில்லியில் 104 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 83, கர்நாடகா 47, உத்தரப்பிரதேசம் 15, மேற்கு வங்கும் 12 பேர் என கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 1007 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர். கடந்த சில நாட்களோடு ஒப்பிடுகையில் தற்போது கொரோனா பாதிப்பு என்பது தீவிரமடைந்து வருகிறது.
புதிய வகை கொரோனா என்பது 2023ல் உருவான ஜேஎன் 1 என்ற வகையில் இருந்து உருமாறி எல்எஃப் 7 மற்றும் என்பி 1.8 ஆக கண்டறியப்பட்டிருக்கிறது.
புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள்
டெல்லி சுகாதார அமைச்சர் பங்கஜ் சிங் இதுகுறித்து பிடிஐ தளத்துக்கு அளித்த பேட்டியில், "தற்போது நகரில் பரவி வரும் புதிய கோவிட் வகைகள் வழக்கமான வைரஸ் காய்ச்சலைப் போன்ற லேசான அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்துகின்றன, மேலும் இந்த நேரத்தில் பொதுமக்கள் கவலைப்பட எந்த காரணமும் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், இந்த பாதிப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை, புதிய மாறுபாட்டால் ஏற்படும் கோவிட் சாதாரண வைரஸ் போன்றதே ஆகும். இதுவரை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் காய்ச்சல், இருமல், சளி போன்ற லேசான அறிகுறிகளை மட்டுமே அனுபவித்து இருக்கின்றனர் என பேசினார்.
மேலும் படிக்க: இரவில் இரத்த சர்க்கரை ஏன் அதிகரிக்கிறது? - இந்த காரணங்கள கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க...!
மேலும், பெரிய அளவிலான நோயாளிகள் எண்ணிக்கை எந்த மருத்துவமனையிலும் சேர்க்கப்படவில்லை. மருத்துவமனைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே, அவசரநிலைக்கான அறிகுறி இல்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.
பொதுவாக உத்தரவு வந்தால் தான் மாஸ்க் அணிவோம் என அடம்பிடிக்காமல் பொது இடத்திற்கும் கூட்டத்திற்குள் செல்லும் போதும் கட்டாயம் மாஸ்க் அணிவது நல்லது. நம் சுகாதாரம் நம் ஆரோக்கியம் நம் கையில் என்பதை மறக்க வேண்டாம்.
image source: freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version