உலக நாடுகள் போராடி கொரோனா தாக்கத்தின் தீவிரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் தலை தூக்கத் தொடங்கி இருக்கிறது. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் சற்று வேகமாகவே இருக்கிறது.
இதையடுத்து இந்தியாவில் சமீபத்திய சில நாட்களாக கொரோனா பாதிப்பு பரவல் சற்று வேகமெடுக்கத் தொடங்கி இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1007 ஆக இருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. மாநிலங்கள் வாரியாக பார்க்கையில், கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் பிற மாநிலங்களைவிட அதிகரித்து வருகிறது.
மேலும் படிக்க: தினமும் கொஞ்சம் பிஸ்தா சாப்பிடுங்க.. இந்த பிரச்னை எல்லாம் தெறித்து ஓடும்..
இந்தியாவில் எந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்?
கேரளா மாநிலத்தை பொறுத்தவரை 335 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 430 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் மகராஷ்டிராவில் 153 பேரும், டில்லியில் 99 பேரும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி மொத்தமாக மகாராஷ்டிராவில் 209 பேருக்கும், டில்லியில் 104 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 83, கர்நாடகா 47, உத்தரப்பிரதேசம் 15, மேற்கு வங்கும் 12 பேர் என கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 1007 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர். கடந்த சில நாட்களோடு ஒப்பிடுகையில் தற்போது கொரோனா பாதிப்பு என்பது தீவிரமடைந்து வருகிறது.
வேகமாக புதிய வகை கொரோனா பாதிப்புகள்
- கடந்த வகை கொரோனா போல் இல்லாமல் தற்போது புதிய வகை கொரோனா பரவி வருகிறது.
- ஆனால் இந்த புதிய வகை கொரோனாவால் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை ஆய்வாளர் தெரிவிக்கின்றனர்.
- வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையை பெற்றாலே இதற்கு போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
- இதன்காரணமாக இந்த முறை ஊரடங்கு போன்ற எந்தவித அறிவிப்புக்கும் வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Soup For Weight Loss: எடையைக் குறைக்க எல்லா முயற்சியும் செஞ்சி சலிச்சிட்டீங்களா? - இந்த ஒரு சூப் ட்ரை பண்ணிப் பாருங்க!
கொரோனா ஊரடங்கு வருமா?
புதிய வகை கொரோனா என்பது 2023ல் உருவான ஜேஎன் 1 என்ற வகையில் இருந்து உருமாறி எல்எஃப் 7 மற்றும் என்பி 1.8 ஆக கண்டறியப்பட்டிருக்கிறது. முந்தைய வைரஸ் பாதிப்பு போல் இந்த வகை கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும் பொதுவாகவே வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்வது நல்லது. உத்தரவு வந்தால்தான் உடல்நலத்தை காப்பேன் என உறுதியாக இருக்காமல் நம் உடல்நலன் நம் பொறுப்பு என பாதுகாப்பாக இருப்பது நல்லது.