இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்புகள்! 24 மணி நேரத்தில் 4 பேர் மரணம்! மீண்டும் ஊரடங்கா?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 4 பேர் மரணமடைந்ததாக வெளியான தகவல் பலரை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
  • SHARE
  • FOLLOW
இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்புகள்! 24 மணி நேரத்தில் 4 பேர் மரணம்! மீண்டும் ஊரடங்கா?


நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் நான்கு COVID-19 இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும். டெல்லியைச் சேர்ந்த 22 வயது பெண், தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 வயது ஆண், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 44 வயது ஆண் மற்றும் கேரளாவில் ஒருவர் என இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த திங்கட்கிழமை, இந்த ஆண்டு இறப்புகள் 32 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போதைய நிலவரப்படி கொரோனா உறுதி செய்யப்பட்டு தற்போது பாதிப்பில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 4,000 என்ற எண்ணிக்கையை நெருங்கிவிட்டது.

கொரோனா அதிகரிக்கும் மாநிலங்கள்

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கேரளா மற்றும் மகாராஷ்டிரா அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவு செய்துள்ளன. அந்த பகுதிகளில் மட்டும் இறப்பு எண்ணிக்கை தலா 8 என நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் கர்நாடகாவில் தலா நான்கு இறப்புகளும், குஜராத், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் இறப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும் படிக்க: இந்த அறிகுறிகள் எல்லாம் கருப்பை தொடர்பான பிரச்சனைகளாம்.. இத நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்

கேரளாவில் அதிகபட்சமாக 1,435 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 506 பேர், டெல்லி 483 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தில் 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

nb-1-8-lf-7-corona virus-india

COVID-19 இறப்புகள் இந்தியா

நேற்றைய நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் நான்கு பேர் COVID-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த 22 வயது பெண், தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 வயது ஆண், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 44 வயது ஆண் மற்றும் கேரளாவில் ஒருவர் என மரணம் அடைந்துள்ளனர்.

பொது வெளியில் செல்பவர்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்வது நல்லது என அனைத்து மாநிலங்களிலும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சமூகஇடைவெளி மற்றும் மாஸ்க் அணிவது ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான விஷயமாகும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

மேலும் படிக்க: மஞ்சளின் ஆரோக்கியம் டபுள் மடங்காக கிடைக்க இப்படி யூஸ் பண்ணுங்க... இந்த தவறுகள மட்டும் செய்யாதீங்க!

உலக நாடுகள் போராடி கொரோனா தாக்கத்தின் தீவிரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் தலை தூக்கத் தொடங்கி இருக்கிறது. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் சற்று வேகமாகவே இருக்கிறது. அதேபோல் இந்தியாவில் சமீபத்திய சில நாட்களாக கொரோனா பாதிப்பு பரவல் சற்று வேகமெடுக்கத் தொடங்கி இருக்கிறது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா ஊரடங்கு வருமா?

புதிய வகை கொரோனா என்பது 2023ல் உருவான ஜேஎன் 1 என்ற வகையில் இருந்து உருமாறி எல்எஃப் 7 மற்றும் என்பி 1.8 ஆக கண்டறியப்பட்டிருக்கிறது. முந்தைய வைரஸ் பாதிப்பு போல் இந்த வகை கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும் பொதுவாகவே வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்வது நல்லது. தற்போதுவரை ஊரடங்கு என்பதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

image source: freepik

Read Next

வாயைத் திறப்பதில் சிரமமா? காரணங்கள், தடுப்பு முறைகள் குறித்து மருத்துவர் தரும் விளக்கம் இதோ

Disclaimer

குறிச்சொற்கள்