Causes of reduced mouth opening: வாயைத் திறக்க முடியாமல் இருப்பது ஒரு வகையான உடல்நல பிரச்சனையைக் குறிக்கிறது. இந்த பிரச்சனையால் நோயாளி வாயைத் திறப்பதில் நிறைய சிரமங்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். வாயைத் திறக்க முடியாத பிரச்சனைக்கு ஆங்கிலத்தில் டிரிஸ்மஸ் அல்லது லாக் ஜா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு அசௌகரியமான நிலையாகும். இதில் நோயாளி எதையும் மெல்லவோ அல்லது வாயைத் திறக்கவோ சிரமப்படுவர். உண்மையில், இந்த நோய் ஏற்படும்போது, கடைவாய்ப்பற்கள் வீங்கி, தசைகள் சுருங்கும் நிலை உண்டாகலாம்.
இதன் காரணமாக, வாயைத் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. பொதுவாக வாய் முழுமையாகத் திறக்கப்படும்போது, வாய் 35 மில்லிமீட்டருக்கும் அதிகமாகத் திறக்கும். அதே சமயத்தில் யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களின் வாய் 35 மில்லிமீட்டருக்கும் குறைவாகவே திறக்கும்.
வாயைத் திறக்காத பிரச்சனை எவ்வளவு நாள் நீடிக்கும்?
இந்த பிரச்சனை குறித்து அட்வான்ஸ்டு டென்டல் கிளினிக் மற்றும் இம்ப்லாண்ட் சென்டரின் பல் நிபுணர் டாக்டர் விஷால் தேவல்வார் கூறியதாவது, ”வாயைத் திறக்காத பிரச்சனை தற்காலிகமானதாகும். எனினும், இந்த பிரச்சனை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கக் கூடியதாக இருக்கும். சில சமயங்களில், இந்த நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், வாயைத் திறக்காத பிரச்சனையும் நிரந்தரமாகிவிடும்” என்று கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Side Effects of Mouth Breathing: வாய் வழியாக சுவாசித்தால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள் பற்றி தெரியுமா?
முக்கிய கட்டுரைகள்
நிரந்தர பிரச்சனையாக மாறுமா?
வாய் திறக்க இயலாமல் போகும் நிலை ஏற்பட்டால், நோயாளி வாயைத் திறக்க உதவும் சில நடவடிக்கைகளை முயற்சிப்பது அவசியமாகும். ஏனெனில், வலி காரணமாக அவர் வாயைத் திறக்க முயற்சிக்கவில்லை என்றால் இது ஒரு நிரந்தரப் பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளது.
வாயைத் திறக்கக் கையாள வேண்டிய சிகிச்சை முறைகள்
வாயைத் திறக்க தாடையை மசாஜ் செய்வது
வாயைத் திறக்க முடியாத பிரச்சனையைச் சரி செய்வதற்கு தாடையை மசாஜ் செய்வது நன்மை பயக்கும். அதன் படி, வலியிலிருந்து நிவாரணம் பெற, தாடையின் வலி இருக்கும் பகுதியை மசாஜ் செய்ய வேண்டும். எனவே மசாஜ் செய்வதற்கு கைகளை வட்ட இயக்கத்தில் நகர்த்தி, சுமார் 30 வினாடிகள் இதைச் செய்யலாம்.
வாயைத் திறக்க வெப்ப சிகிச்சையைப் பயன்படுத்துவது
வாயைத் திறப்பதில் உள்ள பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு வெப்ப சிகிச்சை முறையைப் பயன்படுத்தலாம் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். வெப்ப சிகிச்சை அளிப்பதற்கு, ஒரு துணியை லேசாக சூடாக்கி, அதை தாடையின் அருகே தடவ வேண்டும். இதற்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 15 நிமிடங்கள் இதைச் செய்யலாம். இந்நிலையில் வலி குறைவாக இருக்கும்போது, வாயைத் திறக்க முயற்சிக்கலாம் என மருத்துவர் கூறுகிறார்.
வாயைத் திறக்க உணவை மாற்றுவது
வாயைத் திறக்க, உணவில் மென்மையான உணவுகளைச் சேர்க்க வேண்டும். அதே சமயம், கடினமான பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், கடினமான பொருட்கள் தாடையில் சிக்கிக்கொள்ளலாம். இதனால் பல் பிரச்சனைகள் அதிகமாவதுடன், வாயைத் திறப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே வலியிலிருந்து சிறிது நிவாரணம் பெறத் தொடங்கும்போது மட்டுமே உணவில் கடின அல்லது திட உணவைச் சேர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: பல் துலக்க அதிகமா டூத்பேஸ்ட் யூஸ் பண்றவங்களா நீங்க? எவ்வளவு போடணும்னு தெரிஞ்சிக்கோங்க..
வாயைத் திறக்க தாடை நீட்சி பயிற்சிகளைச் செய்வது
டாக்டர் விஷால் தேவல்ரார் அவர்களின் கூற்றுப்படி,”வாயைத் திறக்க, தாடை நீட்சி பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியை எப்படிச் செய்வது என்று உங்களுக்குத் தெரியாவிடில், இந்த விஷயத்திற்கு ஒரு பிசியோதெரபிஸ்ட்டின் உதவியைப் பெறுவது நல்லது. நிலைக்கு ஏற்ப நீட்சி பயிற்சிகளைச் செய்வதற்கான சரியான வழியை அவர்களிடமிருந்து பெறலாம். இது வாயைத் திறக்க உதவுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
வாயை இடது மற்றும் வலது பக்கம் நகர்த்தி திறப்பது
மருத்துவரின் கூற்றுப்படி, "வாயைத் திறக்க, வலது மற்றும் இடது பக்கமாக வாயை நகர்த்தக்கூடிய பயிற்சிகளைச் செய்யலாம். எனவே வாயைத் திறப்பதில் சிரமம் இருக்கும்போது, வாயை சிறிது சிறிதாகத் திறக்க முயற்சிக்க வேண்டும். முதலில் வாயால் ஆங்கில எழுத்தான "O" ஐ உருவாக்க முயற்சிக்கலாம். மேலும், வாயை முடிந்தவரை வசதியாகத் திறக்க வேண்டும். அதன் பிறகு, தசைகள் திறக்க உதவும் வகையில் வாயை வலது மற்றும் இடது பக்கமாக நகர்த்தலாம். இந்த ஒவ்வொரு நிலையிலும் சுமார் 5 முதல் 10 வினாடிகள் இருக்க வேண்டும். அதன் பின்னர், இயல்பு நிலைக்குத் திரும்பலாம். அதன் பிறகு, செயல்முறையை மீண்டும் செய்யலாம்” என்று கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு இருக்கா? அதுக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் இதோ
Image Source: Freepik