$
Symptoms Of Covid 19 New Variant Jn 1: கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் உள்ள மக்களை பெருமளவில் பாதித்த கொரோனா தொற்று மறக்க முடியாத சம்பவமாக மாறியது. இது கண்டறியப்பட்ட சில நாள்களிலேயே மின்னல் வேகத்தில் பரவி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இந்த தொற்று பாதிக்கப்பட்டு, இலட்சக்கணக்கில் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டறியப்பட்ட பிறகே, இதன் தீவிரம் குறைந்தது.
இந்த தொற்று முற்றிலும் குறைந்து விட்டதாகக் கருதிய நிலையில் , தற்போது சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Pierced Ears Care: குளிர்காலத்தில் காது குத்தினால் இந்த பிரச்சனை எல்லாம் வருமாம். எப்படி தவிர்க்கலாம்?
புதிய வேரியண்ட்
கொரோனா வேறு சில வைரஸ்களாக உருமாறி தாக்கி வந்தது. அந்த வகையில், தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸில் இருந்து புதிய வேரியன்ட் உருமாறியுள்ளது. இதன் பெயர் ஜே என்1 வைரஸ் ஆகும். இந்த வேரியன்ட் ஆனது முதலில் கடந்த ஆகஸ்ட் மாதம் லக்சம்பேர்க்கில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு 38 நாடுகளில் இந்த ஜே என்1 வைரஸ் பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் கோவிட் 19 ஜே என் 1 ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 111 அதிகரித்து, 1,634 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் வலைத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றினால், ஒரு உயிரிழப்பு நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கேரளா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவுமா?
பொதுவாக நோய்த்தொற்றுக்கள் கோடைகாலத்தைக் காட்டிலும், குளிர்காலத்திலேயே மிக வேகமாக பரவுவதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தூண்டும் வகையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மழைக்காலங்களில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், வேகமாக நோய்த்தொற்றுக்களால் பாதிக்கப்படும் அபாயம் உண்டாகலாம்.
எனவே இந்த காலகட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாள வேண்டும். மேலும், உடலில் தோன்றும் சிறிய அறிகுறிகளையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவ சிகிச்சை அளிப்பது நல்லது. இல்லையெனில், இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிப்பதாக அமையலாம். இந்த புதிய வேரியன்ட் கொரோனா ஜே என்1-ன் அறிகுறிகளைக் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Loss Of Appetite Causes: பசியே இல்லாம இருக்கா.? அப்ப இந்த நோயெல்லாம் வரலாம். உஷார் மக்களே!
ஜே என் 1 கொரோனா அறிகுறிகள்
கேரளாவில் பரவி வரும் ஒமிக்ரானின் வேரியன்ட் ஜே என்1-ன் அறிகுறிகளைக் குறித்து காணலாம்.
- காய்ச்சல்
- இருமல்
- மூக்கடைப்பு
- மூக்கு ஒழுகுதல்
- வயிற்றுப்போக்கு
- தலைவலி
- சோர்வு
இவை அனைத்தும் புதிய கொரோனா வேரியன்ட்டின் முக்கிய அறிகுறியாகும் .

முதியவர்கள் மற்றும் வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இது போன்ற அறிகுறிகளைக் கண்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது. அதே சமயம், கொரோனா வேரியன்ட் பரவுவதைத் தடுக்க மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Winter Illness: குளிர்காலத்தில் நம்மை பாடாய்படுத்தும் நோய்த் தொற்றுகள்.. தடுப்பது எப்படி?
Image Source: Freepik