$
உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் விருப்பமே ஆகும். இதற்கு பலரும் ஜிம்மிற்குச் செல்வர். ஆனால், ஜிம்மிற்குச் செல்வதற்கு முன் சில விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். புதிதாக ஜிம்மிற்குச் செல்பவராக இருப்பினும் அல்லது ஏற்கனவே பல காலமாக ஜிம்மிற்குச் செல்பவராக இருந்தாலும் சில தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.
ஜிம் செல்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை
சீரான உடற்பயிற்சி வழக்கம்
தினசரி ஜிம்மிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் ஏதாவது வொர்க் அவுட் செய்கிறோம் என்று இல்லாமல், ஒரு வாரத்தில் ஒவ்வொரு நாளும் எது போன்ற உடற்பயிற்சிகள் செய்யப் போகிறார்கள் என்பதை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். ஜிம்முக்குச் செல்லும் முன் ஒவ்வொரு நாளும் என்ன உடற்பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே நிர்ணயிக்க வேண்டும். குறிப்பாக, கார்டியோ உடற்பயிற்சி, அதிகப்படியான வொர்க் அவுட் பயிற்சிகள் உள்ளடக்கிய சீரான திட்டங்களுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Daily Exercise Benefits: இது தெரிஞ்சா இனி தினமும் எக்ஸர்சைஸ் பண்ணுவீங்க
சரியாக உடற்பயிற்சி செய்வது
ஜிம்மிற்கு செல்லும் போது காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும், எதிர்பார்க்கும் முடிவை விரைவாக அடையவும் சீரான உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். முதலில் உடற்பயிற்சி செய்யப் போகிறார்கள் எனில், அதனைக் குறித்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், இதை சரியாக எப்படி செய்வது என்பதை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்.

இலக்குகளை சரியாக அமைப்பது
ஜிம்மிற்கு செல்லும் முன் எதற்காக ஜிம்மிற்கு செல்கிறோம் என்பதில் தெளிவுடன் இருக்க வேண்டும். ஜிம்மிற்குச் செல்லும் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியான நோக்கங்கள் இருக்க வேண்டும். ஜிம்மிற்குச் செல்பவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும், அதிகரிக்க வேண்டும் என பல்வேறு குறிக்கோள்களுடன் ஜிம்மிற்குச் செல்வார்கள். இதன் மூலம் உங்களுடைய இலக்கு என்ன என்பதை நிர்ணயம் செய்து இதை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு வாரமும் இலக்குகளை நிர்ணயித்து உடற்பயிற்சிக்கு செல்ல வேண்டும்.
படிப்படியாக பயிற்சியின் தீவிரத்தை அதிகரிப்பது
ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்யும் போது, அதில் முன்னேற்றம் முக்கியமாகும். அதாவது படிப்படியாக எடை தூக்கும் விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் சரியான முடிவைப் பெற முடியும். இது போன்று அல்லாமல் எப்போதும் ஒரே மாதிரி எடையைத் தூக்கிக் கொண்டிருப்பது, சரியான பலனைத் தராது. எனவே எடையை சிறிது சிறிதாக அதிகரிக்க பழக வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: உடற்பயிற்சி செய்வதை திடீரென நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?
ஓய்வெடுப்பது
உடற்பயிற்சி செய்ய ஜிம் செல்பவர்களுக்கு, ஓய்வு குறித்த முக்கியத்துவம் தெரிவதில்லை. ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள், அதிகப்படியான பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும், காயங்களைத் தவிர்க்கவும் உடற்பயிற்சிகளுக்கு இடையே ஓய்வெடுப்பது அவசியமாகும். மேலும், வாரத்தில் ஏழு நாள்களும் ஜிம் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு நாளாவது செல்லாமல் ஓய்வெடுப்பதன் மூலம் தசைகள் மீண்டும் புதுப்பிக்க உதவும். இதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம்.

தொடர்ந்து செல்வது
வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் அனைத்து விஷயங்களுக்கு Consistency மிக முக்கியமாகும். இதன் மூலமே விரைவாக பலன்களை பெற முடியும். முடிந்தவரை அதிகம் விடுப்பு எடுக்காமல், வாரத்தில் குறைந்தது ஐந்து நாள்களாவது ஜிம் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது எதிர்பார்த்த முடிவைப் பெற உதவுகிறது. இதற்கு நிலையான உடற்பயிற்சிகள் மற்றும் இலக்குகள் தேவைப்படுகிறது. எனவே பாதியிலேயே விட்டுக் கொடுத்து விடாமல், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது சிறந்த நன்மைகளைத் தர உதவும்.
ஜிம்மிற்குச் செல்பவர்கள் இந்த விஷயங்களைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: ஜிம்மிற்கு செல்லும் முன் மறந்தும் இதை சாப்பிடாதீர்கள்.!
Image Source: Freepik