Fri Sep 11, 2026 | 09:30 PM IST

Fruits in Monsoon: மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி டபுளாக… இந்த பழங்கள சாப்பிடுங்க!

மழைக்காலம் தொடங்கிவிட்டது. வெயிலில் இருந்து மக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். ஆனால் இந்த சீசனில் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். ஈரமான காலநிலை காரணமாக, பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சை தொற்றுகள் அதிகரிக்கும்.

இதனால், பல வகையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும். குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அதே போல் கொசுக்களும் அதிகளவில் தாக்குகின்றன.

இதனால் டெங்கு, டைபாய்டு, மலேரியா, பருவகால காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, சோர்வு மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். இந்த நோய்களைத் தாங்க, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். கீழே குறிப்பிட்டுள்ள சில பழங்களை உண்பதால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை அளிக்கிறது.

புளூ பெர்ரி:

புளூ பெர்ரிகளும் பருவமழைக் காலத்தில் அதிகம் கிடைக்கும். இரும்புச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இவற்றில் உள்ளன. இந்த பழங்களை சாப்பிடுவதால் பருவகால நோய்களால் தாக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

பப்பாளி:

பப்பாளி அனைத்து பருவக் காலங்களிலும் கிடைக்கக்கூடியது. ஆனால் மழைக்காலத்தில் இந்தப் பழத்தை அதிகம் உட்கொள்வது மிகவும் நல்லது. உடலுக்குத் தேவையான சத்துக்கள் இதில் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களுக்கு எதிராக போராடக்கூடியது.

பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இதனால் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உதவுகிறது மற்றும் பளபளப்பான சருமத்திற்கும் உதவுகிறது. பப்பாளி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. பப்பாளியில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது.

மாதுளை:

மழைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் பழங்களில் ஒன்று மாதுளை. மாதுளம் பழத்தில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையை அளிக்கின்றன. சிறு குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் நல்லது.

மாதுளையில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மாதுளையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் பி வைட்டமின்கள் மற்றும் ஃபோலேட்டுகள் உள்ளன.

மாதுளை செரிமானத்திற்கும் உதவுகிறது மற்றும் சளி, காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. பொட்டாசியம் நிறைந்திருப்பதால், இது இதயம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு நல்லது.

ஆப்பிள்கள்:


சீசன் பாராமல் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் நோய்கள் மற்றும் மருத்துவர்களிடம் இருந்து விலகி இருக்கலாம். எனவே மழைக்காலத்தில் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களை தவிர்க்கலாம்.

குறிப்பிட்டுள்ள பழங்களை தினமும் ஏதாவது ஒரு வடிவில் எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

Monsoon Care, Monsoon season, seasonal diseases, seasonal health care, health care tips, health care, Fruits in Monsoon, Foods in Monsoon, Monsoon effect,மழைக்கால பராமரிப்பு, மழைக்காலம், பருவகால நோய்கள், பருவகால சுகாதாரப் பாதுகாப்பு, சுகாதாரக் குறிப்புகள், சுகாதாரப் பாதுகாப்பு, பருவமழையில் பழங்கள், பருவமழையில் உணவுகள், பருவமழை விளைவு

Read Next

World Arthritis Day 2024: உலக மூட்டுவலி தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content