Thangalaan Vikram: சேது படத்தில் சியானாக வெளிச்சம் பெற்று தமிழ் திரையுலகை ஒரு கலக்கு கலக்கி வருபவர் விக்ரம். தமிழ் திரையுலகால் இவருக்கு பெறுமை என்பதை கடந்து தமிழ் திரையுலகிற்கே இவர் பெறுமை என்ற நிலையை தனது கடின உழைப்பால் அடைந்திருக்கிறார் நடிகர் விக்ரம்.
ஒவ்வொரு படத்திற்கும் தனது உடலை வறுத்தி கதாபாத்திரமாக திரையில் வாழுவதில் இவர் வல்லவர். இந்த படத்தில் இவருக்கு பதில் அவர் நடத்திருந்தால் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்கமாட்டார். இவர் இல்லை என்றால் வேறு எவராலும் நடிக்க முடியாது என்கிற அளவிற்கு தனது முழு பங்களிப்பை கொடுப்பார். குறிப்பாக "ஐ" போன்ற படத்தில் தனது உடலை உருக்கி நடித்திருப்பார்.
இப்படி ஒவ்வொரு படத்திற்கு உடல் எடையை அதிகரிப்பார், குறைப்பார். இது பலருக்கும் கேள்வியை எழுப்பியது. "தன்னிடம் இயக்குநர் கதை கூறும்போது அந்த கதாபாத்திரமாக தன்னை சிந்தித்து பார்ப்பேன். அது எப்படி இருக்கும் என முடிவு செய்துதான், படத்தின் நடிப்பேன்" என நடிகர் விக்ரமே கூறியுள்ளார். அப்படி கதையை கேட்கும் போதே தனது உடலை அதற்கு தயார் செய்ய தொடங்கிவிடுவார்.

தற்போது வெளியாகியுள்ள தங்கலான் படத்தில் கூட தனக்கே உரிய பாணியில் செதுக்கி இருக்கிறார். தங்கலான் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக அவர் நடக்கும் நடை. தொப்பையை முன்புறம் தள்ளி வைத்து ஸ்டைலாக இயல்பு தன்மையோடு அவர் நடிப்பது மிரட்டியிருக்கிறது. இந்த படத்திலும் ஆரம்பத்தில் இருக்கும் உடலை விட கடைசியில் புதையலை தேடிச் செல்லும் காட்சியில் உடலை குறைத்து வறுத்தி நடித்திருப்பார்.
சரி, நடிகர் விக்ரம் எப்படி உடனுக்குடன் உடல் எடையை குறைக்கிறார் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதுகுறித்து முன்னதாக அவர் ஒரு இடத்தில் கூறியிருக்கிறார். அது என்ன என்று பார்க்கலாம்.
நடிகர் விக்ரம் டயட் சீக்ரெட்
நடிகர் விக்ரம் உடல் எடையை குறைக்க என்னென்ன செய்தால் என்பதை வரிசையாக பார்க்கலாம். நடிகர் விக்ரம் முதலில் புரோட்டீன் டயட் இருப்பாராம். உடல் எடை குறைக்கும் காலக்கட்டத்தில் அவர் வெறும் டயட் உணவை மட்டுமே உட்கொள்வாராம். டயட் என்றால் அதில் மிக கவனமாக இருப்பாராம். இது என்ன புரோட்டீன் டயட் என்று இப்போது பார்க்கலாம்.
புரோட்டீன் டயட் என்றால் என்ன?
குறிப்பாக பெண்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 50 கிராம் புரதம் தேவை. அதேபோல் ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 60 கிராம் புரதம் தேவை. புரதம் சார்ந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது கார்போஹைட்ரேட் உணவுகளை குறைக்கலாம். இதன்மூலம் உங்கள் உடல் தண்ணீரை இழப்பதால் எடை வேகமாக குறையும்.
கூடுதல் கார்போஹைட்ரேட்டுகள் இல்லாமல், உடல் எரிபொருளுக்காக அதிக கொழுப்பை எரிக்கத் தொடங்குகிறது. இது கெட்டோசிஸுக்கு வழிவகுக்கும், இது எடை இழப்பை எளிதாக்கும், ஏனெனில் நீங்கள் குறைவான பசியை உணருவீர்கள். ஆனால் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், கெட்டோசிஸ் சிலருக்கு தலைவலி, எரிச்சல், குமட்டல், வாய் துர்நாற்றம் மற்றும் தூக்க பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
சரி, இந்த பட்டியலில் எந்தெந்த உணவு இடம்பெறும் என்பதை பார்க்கலாம். முட்டை, பால் உணவு, கடல் உணவு, சிக்கன் நெஞ்சு இறைச்சி, தயிர், நட்ஸ் உள்ளிட்டவைகள் அடங்கும்.
குறைந்த கார்போஹைட்ரேட் உணவுமுறை (Low-Carb Diet)
நடிகர் விக்ரம் இந்த டயட் முறையில் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டுமே உட்கொள்வாராம். அதாவது 20 முதல் 57 கிராம் வரை உள்ள கார்போஹைட்ரேட் உணவை மட்டுமே எடுப்பாராம். இதனால் உடலில் குறைவான கலோரிகள் மட்டுமே சேரும். உடல் எடையை குறைக்க நினைக்கும் பலரும் பின்பற்றும் டயட் முறைகளில் பிரதான ஒன்று இதுதான்.
கார்டியோ உடற்பயிற்சி
உடற்பயிற்சியில் பல வகைகள் இருந்தாலும் நடிகர் விக்ரம் உடல் எடையை குறைக்கும் போது கார்டியோ உடற்பயிற்சியை தான் செய்வாராம். உடல் எடை குறைப்புக்கு கார்டியோ உடற்பயிற்சி மிக முக்கியம்.
கார்டியோ உடற்பயிற்சி என்றால் என்ன?
எடை தூக்குதல் போன்றில்லாமல் முழுவதுமாக உடல் செயல்பாடுகளை கொண்டிருப்பது கார்டியோ உடற்பயிற்சி. இது உடலுக்கு மிக நல்லது. அனைத்து தசைகளையும் செயல்பாட்டில் வைக்கும். இது உடல் எடை குறைப்புக்கு மிக நல்லது.
கார்டியோ பயிற்சிகளில் ஸ்கிப்பிங், நடனம், சைக்கிளிங், வாக்கிங், நீச்சல், படி ஏறுதல் உள்ளிட்டவைகள் அடங்கும். இதை அதிகாலையில் செய்வது அனைத்து வயதினருக்கும் நன்மை பயக்கும்.
உடல் எடை குறைப்பு குறித்து நடிகர் விக்ரம் சொன்ன ரகசியம்
நடிகர் விக்ரமே கூறிய ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், ஒரே மாதிரியாக டயட் தொடர்ந்து இருந்து அது போர் அடிக்கும் என கூறியுள்ளார். எனவே சியா விதைகள், குயினாவோ, குக்கீஸ், ப்ரோட்டீன் ஷேக்ஸ் உணவுகள் போன்றவை உட்கொள்வாராம்.
இப்படி ஒரே டயட் இருப்பது அனைவருக்கும் கண்டிப்பாக போர் அடிக்கத் தான் செய்யும். எப்போது தான் இந்த டயட் முடியும் என எதிர்பார்த்து, டயட் நாட்கள் முடிந்தவுடன் சராசரி உணவை பலர் வெளுத்துக்கட்டுவார்கள். இப்படி செய்வது உடல் எடையை எவ்வளவு குறைத்தோமோ அதைவிட அதிகமாக அதிகரிக்கத் தொடங்கும்.
உடல் எடை குறைப்புக்கு நினைவில் வைக்க வேண்டிய விஷயம்
எந்த ஒரு விஷயத்துக்கும் மனது ஒருநிலையோடு இருக்க வேண்டியது அவசியம். நடிகர் விக்ரம் இந்த விஷயத்தை தனது கடின உழைப்பால் செய்து காட்டியுள்ளார். அவரை சுற்றி பல உணவுகள் இருந்தும், நினைத்தால் எதை வேண்டுமானால் வாங்கி சாப்பிடலாம் என்ற நிலை இருந்தும் கட்டுக்கோப்பாக இருந்து சாதித்துக் காட்டியிருக்கிறார். இப்படி மனக்கட்டுப்பாடு மிக முக்கியம்.
அதேபோல் நீங்கள் புதிதாக டயட் இருப்பவராக இருந்தால் முறையான நிபுணர் ஆலோசனை பெற்று டயட் முறை கடைபிடிப்பது மிக நல்லது.
Pic Courtesy: Social Media