பொதுவாக மனித வாழ்வில் நல்ல மற்றும் கெட்ட பழக்கங்கள் என்பது பொதுவானதுதான். ஒரு மனிதனுக்கு நல்ல பழக்கம் என்று இருந்தால் கண்டிப்பாக கெட்டப் பழக்கம் என்பதும் இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை. இதன் தாக்கம் தான் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கும்.
கெட்ட பழக்கம் மனித வாழ்வில் இருக்கும் என்றாலும் அது என்ன மாதிரியான பழக்கம் என்பதில்தான் முக்கியம். எடுத்துக்காட்டாக கூற வேண்டும் என்றால், நீங்கள் புகைப்பிடிக்கிறீர்கள் என்றால் அது உங்களுக்கு பாதிப்பு என்பது தெரியும், அதே புகைப்பிடிக்கும் போது உங்கள் அருகில் இருக்கும் புகைப்பிடிக்காத நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மிகப் பெரிய தவறு.
அதிகம் படித்தவை: Normal Delivery: சுக பிரசவம் ஆகனுமா.? இத ஃபாளோ பண்ணுங்க..
சுற்றுவட்டாரத்தை பாதிக்கும் போதைப் பழக்கம்
மது போதையில் பிறருடன் சண்டைப்போடுவது, காதல் என்ற பேரில் ஏமாற்றுவது, இசை போதையில் பிறருக்கும் தொந்தரவு செய்யும் விதமாக சத்தம் வைப்பது என இவை அனைத்தும் மிகப் பெரிய தவறான செயல்.
சரி, விஷயத்திற்கு வந்தால் போதைப்பழக்கம் என்பது மனித வாழ்வில் இருக்கத்தான் செய்யும் என்றாலும் அது என்ன மாதிரியான பழக்கம் என்பதுதான் முக்கியம்.
போதைப் பழக்கங்களில் இருந்து விடுபடுவது எப்படி?
எந்தவொரு விஷயமும் அளவுக்கு மீறும் போது அது நஞ்சாக மாறுகிறது. அதேபோல் எந்தவொரு பழக்கமும், கெட்டப்பழக்கம் என்று தெரிந்தும் அதை விடாமுடியாமல் சிக்கும் போது அது போதைப்பழக்கமாக மாறுகிறது. இளைஞர்களைப் பற்றி நாம் பேசினால், இந்த காலத்தினர் மது, சிகரெட் மற்றும் ஆபாசப் பழக்கங்களின் மீது விரைவாக ஈர்க்கப்படுகிறார்கள். இந்த பழக்கங்கள் மோசமானவை, ஏனென்றால் அவை எப்போது பழக்கத்திலிருந்து போதைப்பழக்கமாக மாறும் என்று கணிக்க முடியாது.
ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் உள்ளது. ஆனால் இந்த அடிமைத்தனம் டீனேஜர்களில் மிகவும் பொதுவானது, இது அவர்களின் மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது. சரி, எந்தவகையான போதைப்பழக்கத்தில் இருந்தும் விடுபட என்ன செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
எத்தனை போதைப்பழக்கம் என்பதை கண்டறிவது முக்கியம்?
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எத்தனை வகை போதைக்கு அடிமையாகி உள்ளீர்கள் என்பதை கவனிக்க வேண்டியது முக்கியம். ஒருவர் மது அடிப்பார்கள், சிகரெட் பிடிப்பார்கள், ஆபாச படம் பார்ப்பார்கள். என பல கெட்டப்பழக்கத்தை வைத்திருப்பார்கள், இதில் இருந்து ஒவ்வொன்றாக விடுபட வேண்டியது மிக முக்கியம்.
மன ஒருநிலைப்பாடு
மனதை நிலையாக வைத்துக் கொள்ளுங்கள். எந்தவொரு போதைப் பழக்கத்தையும் நாட வேண்டும் என தோன்றும் போது மனதை திசைத் திருப்புங்கள். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, புகைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றினால் அந்த நேரத்தில் வேறு ஏதாவது பிடித்து நல்ல உணவை வாங்கிச் சாப்பிடுங்கள்.
உங்கள் நண்பர்கள் வட்டாரம் முக்கியம்
உங்கள் சுற்றி எப்படிப்பட்ட இளைஞர்கள், நண்பர்கள் என சுற்றுவட்டாரம் இருக்கிறது என்பதை கவனியுங்கள். இது மிக முக்கியம், உங்கள் சுற்றுவட்டாரம் தான் உங்களை தீர்மானிக்கும். உங்களுக்கே ஒரு விஷயம் தோன்றவில்லை என்றாலும், அதை உங்களுடன் இருப்பவர்கள் நியாபகப்படுத்தும் போது அது மீண்டும் தோன்றத் தொடங்கும்.
மொபைலை ஒதுக்கி வைப்பது முக்கியம்
முதலில் மொபைலை ஒதுக்கி வைப்பது என்பது மிக மிக முக்கியம். காரணம் மொபைலின் அதீத பயன்பாடே ஒருவகை போதைதான் என்பதை உணர வேண்டும். மொபைலை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது அது உங்கள் நேரத்தை முழுவதுமாக எடுத்துக் கொள்ளும். அதோடு அதில் வரும் காட்சிகளும் உங்கள் போதைப்பழக்கமும் ஒன்றாக இருந்தால் அது உங்கள் கெட்ட பழக்கத்தை தூண்டும்.
அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்
அன்புக்குரியவர்களிடையே நேரத்தை செலவிடுவது உங்களை திசை திருப்பும். அதே சமயம், தனிமையில் இருக்கும்போது, ஆபாசத்தைப் பார்ப்பதில் அதிக ஆசை இருக்கலாம். எனவே, பெரும்பாலான நேரத்தை தனியாக செலவிடுவதற்கு பதிலாக, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே இருங்கள். இது போதைப் பழக்கத்திலிருந்து விடுபட உதவும்.
புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள்
நாம் புதிய திறன்களைக் கற்றுக் கொள்ளும்போது, நம் முழு கவனமும் அதைக் கற்றுக்கொள்வதில் செல்கிறது. போதையிலிருந்து கவனத்தை திசை திருப்ப இது ஒரு நல்ல வழியாகும். எனவே, உங்கள் அறிவை அதிகரிப்பதோடு பயனற்ற விஷயங்களிலிருந்து உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப உதவும் விஷயங்களைப் பட்டியலிடுங்கள்.
ஸ்போர்ட்ஸ் சிறந்த தேர்வு
ஸ்போர்ட்ஸ் என்பது அனைத்து போதை பழக்கத்தில் இருந்தும் விடுபட சிறந்த வழியாகும். இந்த விளையாட்டு தான் என்பதில்லை, பொதுவாக ஆர்வமாக ஏதேனும் ஒருவிளையாட்டை விளையாடுவதே நல்ல விஷயமாகும். இது தானாக உங்களை போதை பழக்கத்தில் இருந்து விலக வைக்கும்.
இதையும் படிங்க: தாடி திட்டுத்திட்டாக ஆங்காங்கே மட்டும் வளருகிறதா? இதை மட்டும் பண்ணுங்க
ஒரு நிபுணரை அணுகவும்
நீங்கள் அடிக்கடி மனநிலை மாற்றங்களைக் கொண்டிருந்தால், முயற்சித்த பிறகும் உங்கள் போதையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், நீங்கள் தாமதமின்றி ஒரு நிபுணரை அணுக வேண்டும். ஏனெனில் இதன் மூலம் நீங்கள் உங்கள் போதையிலிருந்து சரியான வழியில் வெளியே வர முடியும்.
pic courtesy: freepik