$
Can using your phone in the toilet cause constipation: தற்போதைய காலத்தில் சிலருக்கு மொபைல் போன்களை கழிப்பறைக்கு எடுத்துச் செல்லும் பழக்கம் உள்ளது. மக்கள் நீண்ட நேரம் மொபைல் போன்களுடன் கழிப்பறையில் அமர்ந்திருப்பதால் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படலாம். இது பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பரவும் அபாயத்தை அதிகரிக்கிறது. உங்களுக்கும் இந்த பழக்கம் உள்ளதா? ஆம் எனில், அத்தகைய பழக்கம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : National Lazy Day: சோம்பேறித்தனத்தை முறியடிக்க கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகள்
கழிப்பறையில் மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் என்ன?

- நீண்ட நேரம் டாய்லெட்டில் அமர்ந்தபடி போனை உபயோகிக்கும் பழக்கம், உங்களுக்கு முதுகு வலி பிரச்சனையை ஏற்படுத்தலாம். இந்நிலையில், தசை விறைப்பு மற்றும் முதுகுவலி பிரச்சனை இருக்கலாம்.
- கழிப்பறையில் அமர்வதால் மலக்குடலில் அழுத்தம் ஏற்பட்டு பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
- நீண்ட நேரம் தொலைபேசியைப் பயன்படுத்தும் பழக்கம் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
- கழிப்பறையில் போனை பயன்படுத்தும் பழக்கம் சில நேரங்களில் அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.
- தொடர்ந்து கழிப்பறையில் தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு குடல் நோயுடன், சிறுநீர் தொற்றும் ஏற்படலாம்.
- கலப்பறையில் நீட நேரம் அமர்ந்திருப்பதாள் புழுக்கள் வயிற்றை அடைந்து, வயிற்று தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : தவறான காலணிகளை அணிவது சரியா? - நிபுணர் கூறுவது என்ன?
கழிப்பறைக்கு ஏன் மொபைலை எடுத்து செல்ல கூடாது?

பல சிறிய கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் கழிப்பறை இருக்கை அல்லது சுவர்களில் இருக்கும், அவை தொலைபேசியிலும் அமரலாம். போனில் இருக்கும் பாக்டீரியாக்கள் உங்கள் கைகளிலும் உடலின் மற்ற பகுதிகளிலும் ஒட்டிக்கொள்ளலாம். அதே நேரத்தில், நீங்கள் எதையாவது சாப்பிட்டால், அது வாய் வழியாக உடலுக்குள் நுழையும், இது வயிற்று வலி மற்றும் குடல் நோய்த்தொற்றையும் ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம் : Quit Drinking Alcohol: மது அருந்துவதை நிறத்த வேண்டுமா? இதை செய்து பாருங்கள்!
மனநலமும் பாதிக்கப்படுமா?

இத்தகைய பழக்கம் உடல் ஆரோக்கியத்துடன் மனநலம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது மன அழுத்தத்தையும், கவனம் செலுத்துவதில் சிரமத்தையும் ஏற்படுத்தும். சில சமயங்களில் மன அழுத்தம் காரணமாக தூக்கமும் தடைபடலாம்.
Pic Courtesy: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version