Women Heart Disease: பெண்களுக்கு ஏற்படும் இதய நோய்க்கான ஆபத்து காரணிகள் என்னென்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Women Heart Disease: பெண்களுக்கு ஏற்படும் இதய நோய்க்கான ஆபத்து காரணிகள் என்னென்ன தெரியுமா?

பெண்களுக்கு இதயத் தடுப்பு அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள்

உயர் இரத்த அழுத்தம்

இது இதயம் மற்றும் இரத்த நாளங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இந்த அழுத்தத்தால் இதய நோய், பக்கவாதம் மற்றும் இதயத்தடுப்பு அபாயம் ஏற்படுகிறது. எனவே இரத்த அழுத்தத்தைக் கண்காணித்து வாழ்க்கை முறை மாற்றங்களை உள்ளடக்கி சிகிச்சை திட்டத்தை மருத்துவரின் ஆலோசனையுடன் பெறலாம்.

கரோனரி தமனி நோய் (CAD)

இது இதயத்திற்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்கள், பிளேக் குவிவதன் காரணமாக குறுகலாக அல்லது தடுக்கப்படும் போது CAD ஏற்படுகிறது. இது இதய தசைகளுக்கு இரத்த ஓட்டத்தைக் குறைத்து, அரித்மியா மற்றும் இதயத்துடிப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Women Sleep Benefits: ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்கணும்? ஏன் தெரியுமா?

உடல் பருமன்

அதிக உடல் எடை, குறிப்பாக அடிவயிற்றைச் சுற்றி நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதயத் தடுப்புக்கு வழிவகுக்கலாம். காய்கறிகள், முழு தானியங்கள், பழங்கள், மற்றும் மெலிந்த புரதங்கள் போன்ற ஆரோக்கியமான உணவை சேர்த்துக் கொள்ளவதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம். மேலும் வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

புகைபிடித்தல்

இது இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. மேலும், இரத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கிறது. மேலும் இது அரித்மியாவின் அபாயத்தை அதிகரித்து, இதயத் தடுப்பு அபாயத்திற்கு பங்களிக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்திற்கு புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதிக கொழுப்பு

எல்டிஎல் கொழுப்பு அதிகம் இருப்பது தமனிகளில் பிளேக் உருவாக காரணமாகிறது. இது சிஏடி மற்றும் இதயத் தடுப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. இதற்கு ஆரோக்கியமான உணவினை உட்கொள்வது அவசியமாகும். சுகாதார வழிகாட்டுதலின் கீழ், கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஹார்மோன் மாற்றங்கள்

ஹார்மோன் சிகிச்சைகள், மாதவிடாய், கர்ப்பம் போன்றவற்றுடன் தொடர்புடைய ஹார்மோன் மாற்றங்கள் கொழுப்பின் அளவை பாதிக்கலாம். இதுவே பெண்களுக்கு சிஏடி மற்றும் அரித்மியாவின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதற்கு மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Postpone Periods Tips: மாதவிடாய் தள்ளிப் போக இயற்கை வீட்டு வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தக்கூடிய மோசமான விளைவைத் தருகிறது. அரித்மியா, இதயத்தடுப்பு போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. வழக்கமான இரத்த சர்க்கரை கண்காணிப்பு, மருந்துகளைக் கடைபிடிப்பது, சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். சுகாதார வழங்குநருடன் வழக்கமான சோதனைகள் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

உடல் செயலற்று இருப்பது

வழக்கமான உடல் செயல்பாடு இல்லாத போது இதய தசை பலவீனமடைகிறது. இதனால், உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. இது ஒட்டுமொத்த இதய ஆபத்துக்கு காரணமாக அமைகிறது. எனவே வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமன தீவிரம் கொண்ட ஏரோபிக் செயல்பாடுகளை இலக்காக வைத்துக் கொள்வது அவசியமாகும்.

மன அழுத்தம்

மனச்சோர்வு, பதட்டம், நாள்பட்ட மனஅழுத்தம் போன்றவை அரித்மியாவை ஏற்படுத்தலாம். இது இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோய் அபாயத்திற்கு பங்களிக்கிறது. இதற்கு உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

இவை அனைத்தும் பெண்களுக்கு ஏற்படும் இதய நோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகளாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Cardiac Disease after Pregnancy: பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு இதய நோய்களின் ஆபத்து ஏன் அதிகரிக்கிறது?

Image Source: Freepik

Read Next

Vaginal Health: மன அழுத்தம் உங்கள் பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்குமா? டாக்டர்கள் கூறுவது இங்கே!

Disclaimer