Fri Sep 11, 2026 | 11:45 PM IST

Doctor Verified

மொரிங்காவுடன் துளசி சேர்த்த டீயைக் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? மருத்துவர் தரும் விளக்கம்

முருங்கை மற்றும் துளசி இரண்டுமே பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். இவை இரண்டையும் சேர்த்த தேநீரை உட்கொள்வது பல வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் அதைப் பற்றி இங்குக் காண்போம்.

ஆயுர்வேதத்தில், முருங்கை மற்றும் துளசி இரண்டுமே பல்வேறு மருத்துவ குணங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது உடலில் பல்வேறு முக்கிய உடல் செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது உடலில் ஏற்படும் பல உடல்நலப் பிரச்சினைகளைப் போக்கவும் பெரிதும் உதவுகிறது. எனவே தான், அன்றாட உணவில் முருங்கை, தேநீரை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த இரண்டு பொருள்களின் தேநீரை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

பொதுவாக, முருங்கையில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அத்துடன் கால்சியம், இரும்பு, புரதம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி போன்ற நல்ல அளவு ஊட்டச்சத்துக்களும் உள்ளன. மறுபுறம், துளசியில் ஆன்டிவைரல், பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, அடாப்டோஜெனிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் ஏராளமான பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

எனவே இந்த இரண்டிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் குடிப்பதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். இதில் நொய்டாவின் செக்டர் 12 இல் உள்ள அர்ச்சிட் ஆயுர்வேத கிளினிக்கின் டாக்டர் அனந்த் திரிபாதி அவர்கள் முருங்கை மற்றும் துளசி தேநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

முருங்கை மற்றும் துளசி தேநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

டாக்டர் அனந்த் திரிபாதி அவர்களின் கூற்றுப்படி, முருங்கை மற்றும் துளசி இரண்டும் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. எனவே, அவற்றின் தேநீர் அருந்துவது பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: துளசி தேநீர் குடிப்பதால் வாயு பிரச்சனைகள் நீங்குமா.? மருத்துவரிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.. 

உடல் எடையைக் குறைப்பதற்கு

முருங்கை மற்றும் துளசி தேநீரில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

முடி ஆரோக்கியத்திற்கு

துளசி மற்றும் முருங்கை தேநீரில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை இரண்டும் கலந்த தேநீரைக் குடிப்பது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், வேர்களிலிருந்து முடியை வலுப்படுத்தவும், ஆரோக்கியமான முடியை பராமரிக்கவும் உதவுகிறது.

சருமத்திற்கு நன்மை தர

இரண்டு ஆயுர்வேத மூலிகைகளான முருங்கை மற்றும் துளசி தேநீர் ஆனது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. இந்த தேநீரை உட்கொள்வது, சருமத்தை உள்ளிருந்து ஊட்டமளிக்கவும், நச்சுகளை வெளியேற்றவும், கறைகளைக் குறைக்கவும், நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்கவும், இயற்கையாகவே பளபளப்பான சருமத்தை பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் முகப்பரு, சிவத்தல் மற்றும் வீக்கம் போன்ற பல தோல் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

முருங்கை மற்றும் துளசி தேநீர் ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். இவற்றை உட்கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும், நோயைத் தடுக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மழைக்காலத்தில் இந்த மூலிகைகளை டீயில் கலந்து குடிங்க..

செரிமானத்தை மேம்படுத்த

முருங்கை மற்றும் துளசி தேநீரானது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டதாகும். இவற்றை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தவும், அத்தியாவசிய நொதிகளை அதிகரிக்கவும், வாயு, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளைப் போக்கவும் உதவுகிறது.

உடலில் ஆற்றலைப் பராமரிக்க

மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கை மற்றும் துளசி தேநீரில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் பல்வேறு வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவற்றை உட்கொள்வது இயற்கையான ஆற்றல் அளவைப் பராமரிக்கவும், சோர்வு மற்றும் பலவீனம் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு

முருங்கை மற்றும் துளசி தேநீரில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, இவற்றை உட்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கவும், மூளையை ரிலாக்ஸ் செய்யவும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Green Tea Vs Moringa Tea: கிரீன் டீ Vs முருங்கை டீ! இது ரெண்டுல எது பெஸ்ட் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

மழைக்காலம் தொடங்கிடுச்சி! நீங்க ஹெல்த்தியா, பாதுகாப்பா இருக்க என்ன செய்யணும் தெரியுமா? மருத்துவர் ஹன்சாஜி விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 02, 2025 23:02 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content