Doctor Verified

Post Abortion Care: அபார்ஷனுக்கு பிறகு பெண்கள் செய்ய வேண்டியது என்ன? - மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைகள்! 

  • SHARE
  • FOLLOW
Post Abortion Care:  அபார்ஷனுக்கு பிறகு பெண்கள் செய்ய வேண்டியது என்ன? - மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைகள்! 

கருச்சிதைவு பெண்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கூடியது. மனரீதியாக அவர்களை மேம்படுத்த உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு தேவையாகிறது. 

அதேசமயம் கருச்சிதைவிற்கு பிறகு மீண்டும் கருத்தரிக்க விரும்பும் பெண்கள் தங்களது உடலை தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். எனவே கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு ஏற்பட்ட பெண்கள் என்னென்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சென்னை ஜிஜி மருத்துவமனையின் தலைமை மகப்பேறு மருத்துவரான கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளார். 

கருக்கலைப்பிற்கு பிறகு பெண்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிமுறைகள் இதோ... 

1. மருத்துவ பராமரிப்பு: 

பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்பட்டு விட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். ஒருவேளை கருச்சிதைவு முற்றிலும் ஏற்படவில்லை என்றால், அதனை மருந்துகள் மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ முறையாக அகற்ற வேண்டும். 

மேலும் கருச்சிதைவு சிகிச்சைக்குப் பிறகு, அதிக ரத்தபோக்கு, கடுமையான முதுகு மற்றும் வயிற்று வலி, மயக்கம், காய்ச்சல், குமட்டல் அல்லது வாந்தி போன்றவை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

2. கிருமி ஒழிப்பு: 

கருக்கலைப்பிற்கு பிறகு கர்ப்பப்பை வாய் திறந்திருக்கும் என்பதால் கிருமி தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கும் மருத்துவர் கமலா செல்வராஜ், மருத்துவரின் பரிந்துரைப்படி, கருக்கலைப்பு செய்த 7 முதல் 10 நாட்களுக்கு தொற்றுக்களை தடுக்ககூடிய ஆன்டிபயோடிக் மாத்திரிகளை  முறையாக எடுத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறார். 

3. சுகாதாரம்:

கருச்சிதைவிற்கு பிறகு பெண்கள் சுத்தமான கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சுகாதாரமில்லாத கழிப்பறைகளை பயன்படுத்தும் போது சிறுநீர் பாதை தொற்று போன்றவை ஏற்படக்கூடும். மேலும் மிகவும் சுத்தமான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும். 

4. கருத்தடை சாதனங்கள்:

கருக்கலைப்புக்குப் பின் உடனடியாக மீண்டும் கருவுறவும் வாய்ப்பு உண்டு. கருக்கலைப்புக்குப் பின் 2 வாரத்திலேயே அடுத்த மாதவிடாய் வரலாம் என்பதால் கருத்தடை சாதனங்கள் அவசியம் என்கிறார் மருத்துவர் கமலா செல்வராஜ்.

கருக்கலைப்புக்கு பிறகான ரத்தப்போக்கு நிற்கும் வரை உடலுறவு கொள்ளக்கூடாது. குறிப்பாக கருக்கலைப்பு செய்த பிறகு 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை கருத்தரித்தலை தள்ளிப்போட வேண்டும். 

மருத்துவரிடமே கருத்தடைக்கான மாத்திரை அல்லது பிற பாதுகாப்பான கருத்தடை முறைகள் குறித்து ஆலோசனை பெறலாம். 

Read Next

மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் இயற்கை வழிகள் இதோ! 

Disclaimer