Fri Sep 11, 2026 | 11:45 PM IST

Doctor Verified

தீபாவளிக்குப் பிறகு உடலை நச்சு நீக்கம் செய்ய 5 எளிய வழிகள்.!

தீபாவளி பண்டிகைக்குப் பிறகு இனிப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை சாப்பிட்டிருந்தால், உங்கள் உடலை இயற்கையாக நச்சு நீக்கம் செய்ய இந்த 5 டிடாக்ஸ் குறிப்புகளைப் பின்பற்றுங்கள். உணவியல் நிபுணர் திவ்யா காந்தி வழங்கும் ஆலோசனைகள்.

தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்பு, காரம், எண்ணெய் வறுவல்கள் என சுவையூட்டும் பலவகை உணவுகள் அன்றாட உணவுமுறையை முற்றிலும் மாற்றி விடுகின்றன. ஆனால் பண்டிகை முடிந்தவுடன், உடலில் அதிகப்படியான சர்க்கரை, எண்ணெய் மற்றும் நச்சுக்கள் சேர்வது தவிர்க்க முடியாத ஒன்று.

இதனை சரி செய்ய உடலை இயற்கையாக நச்சு நீக்கம் செய்வது அவசியம் என உணவியல் நிபுணர் திவ்யா காந்தி அறிவுறுத்துகிறார். அவரது வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், தீபாவளிக்குப் பிறகு உடலை எவ்வாறு சுத்தமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கலாம் என்பதற்கான ஐந்து முக்கிய குறிப்புகளை இங்கு பார்ப்போம்.

தீபாவளிக்குப் பிறகு உங்கள் உடலை நச்சு நீக்கம் செய்வதற்கான குறிப்புகள்

உடலை நீரேற்றமாக வைத்திருங்கள்

பண்டிகைக் காலத்தில் அதிக எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுகளை உட்கொள்வதால், உடலின் நச்சுக்கள் அதிகரிக்கின்றன. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம், உடல் அந்த நச்சுகளை வெளியேற்றும். இதற்காக வெறும் தண்ணீர் மட்டுமல்லாமல், மூலிகை தேநீர் (Herbal Tea), எலுமிச்சை நீர், வெந்தய நீர் போன்றவை சிறந்த தேர்வாகும்.

சீரான உணவைப் பின்பற்றுங்கள்

தீபாவளிக்குப் பிறகு ஜங்க் உணவு, பொரியல், இனிப்பு போன்றவற்றைத் தவிர்த்து, சீரான உணவுமுறையை பின்பற்ற வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், மெலிந்த புரதம் போன்ற உணவுகள் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கும். இது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, உடல் மீண்டும் சக்திவாய்ந்ததாக மாற உதவுகிறது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம்

நார்ச்சத்து உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்ற முக்கிய பங்கு வகிக்கிறது. தீபாவளி காலத்தில் சுத்திகரிக்கப்பட்ட மாவில் செய்யப்பட்ட இனிப்புகள் மற்றும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் ஏற்படும். இதை சமநிலைப்படுத்த, பருப்பு வகைகள், முழுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளை தினசரி சேர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: மந்தமான கூந்தலுக்கு நாவல் பழம் ஹேர் மாஸ்க்.. 4 வாரங்களில் பளபளக்கும் முடி.!

காஃபின் மற்றும் மது உட்கொள்ளலைக் குறையுங்கள்

தீபாவளி சந்திப்புகளில் பலர் காபி, தேநீர், மது போன்றவற்றை அதிகமாக உட்கொள்கிறார்கள். இது கல்லீரலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, பண்டிகை முடிந்தவுடன் காஃபின் மற்றும் மதுபானம் உட்கொள்ளலைக் குறைத்து, கல்லீரலுக்கு ஓய்வு அளிக்க வேண்டும்.

உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம்

பண்டிகை நாட்களில் உடல் எடை அதிகரிப்பதும், சோர்வும் சாதாரணம். இதை சமநிலைப்படுத்த தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி, யோகா அல்லது இலகு உடற்பயிற்சி செய்வது அவசியம். கூடுதலாக, தினமும் 7-8 மணி நேரம் நல்ல தூக்கம் பெறுவது உடல் நச்சு நீக்கத்திற்கு மிக முக்கியம்.

இறுதியாக..

தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியையும் இனிப்பையும் தந்தாலும், அதற்குப் பிறகு உடலுக்கு ஓய்வு மற்றும் சுத்தம் தேவை. திவ்யா காந்தி பரிந்துரைக்கும் இந்த 5 வழிகள், இயற்கையாக உடலை நச்சு நீக்கம் செய்து, உள் உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும். பண்டிகை முடிந்த பின் இதை பின்பற்றினால், நீங்கள் புத்துணர்ச்சியுடன் புதிய நாளை தொடங்கலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரை தகவல் வழங்கும் நோக்கத்திற்காக மட்டுமே. உங்களிடம் ஏதேனும் மருத்துவ நிலை, கல்லீரல் பிரச்சனை அல்லது நீண்டகால உடல் சோர்வு இருந்தால், உணவு பழக்கத்தை மாற்றுவதற்கு முன் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Read Next

வெதுவெதுப்பான நீர் குடிப்பது கிட்னியை க்ளீன் செய்ய உதவுமா? மருத்துவர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 20, 2025 23:05 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content