Fri Sep 11, 2026 | 10:20 PM IST

Expert

உங்க இம்யூனிட்டியை ஸ்ட்ரங்காக வைக்க இந்த காலை பழக்கங்களை நீங்க கட்டாயம் செய்யணும்.. நிபுணர் தரும் டிப்ஸ்

உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கு அன்றாட வாழ்வில் சில பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். இதில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் சில காலை நேர பழக்கங்கள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

மாறிவரும் வானிலை மாற்றத்தில், உடல் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். ஏனெனில், இந்த காலகட்டத்திலேயே உடலில் நோயெதிர்ப்புச் சக்தி பலவீனமாகி, பல்வேறு உடல்நல அபாயங்கள் ஏற்படலாம். இந்நிலையில், நோய்களிலிருந்து உடலைப் பாதுகாப்பதில் நோயெதிர்ப்பு அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, சளி, வயிற்று வலி, சோம்பல் போன்ற பிரச்சினைகள் எப்போதும் காணப்படலாம். மேலும் தொற்று நோய்கள் வருவதற்கான அதிக ஆபத்தும் உள்ளது.

குறிப்பாக, குழந்தைகள், வயது முதியவர்கள் போன்றோர் அதிகளவு அபாயத்தைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், நோய்களைத் தவிர்க்க நோயெதிர்ப்பு மண்டலத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். இந்நிலையில், அன்றாட வாழ்வில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம், உடலில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம். இதில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் குறிப்புகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணரான லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: இம்யூனிட்டி ஸ்ட்ராங்கா இருக்கணுமா? இந்த 7 பழக்கங்களை தினமும் பின்பற்றுங்க.. மருத்துவர் சொன்னது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலை பழக்கங்கள்

ஊட்டச்சத்து நிபுணர் பத்ராவின் கூற்றுப்படி, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உங்களுடன் விழித்தெழுகிறது - மேலும் முதல் ஒரு மணி நேரத்தில் நீங்கள் செய்வது நாள் முழுவதும் தொனியை அமைக்கிறது என்று தனது பதிவை ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான காலை நேர சடங்குகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

நீரேற்றத்துடன் இருப்பது

காலை எழுந்ததும் முதலாவதாக தண்ணீர் குடிக்க வலியுறுத்தி நிபுணர்கள் பலரும் அறிவுறுத்துகின்றனர். உண்மையில், காலை நேரத்தில் உடல் நீரிழப்புடன் காணப்படும். இந்நிலையில், உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. ஆனால், சிலருக்கு வெற்று தண்ணீரைக் காட்டிலும், அதில் சில ஆரோக்கியமான பொருள்களைச் சேர்ப்பது நீரேற்றத்தை மேலும் அதிகரிக்க வழிவகுக்கிறது. நிபுணர் பத்ரா அவர்கள், முதல் காலை சடங்காக உடலை நீரேற்றமாக வைக்க நீரேற்றமாக இருப்பதை பரிந்துரைக்கிறார்.

அவர், சூடான நீர் + ஒரு சிட்டிகை இமயமலை உப்பு + எலுமிச்சை + கற்றாழை நிறைந்த பானத்தை பரிந்துரைக்கிறார். இந்த பானம் சிறந்த நச்சு நீக்கத்திற்கும், நிணநீர் ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் ஆற்றல் மேம்பாட்டிற்கும் உதவுகிறது.

  • வெதுவெதுப்பான நீர் - 1 கப்
  • இமயமலை உப்பு - ½ தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - ½ தேக்கரண்டி
  • கற்றாழை சாறு -15 மில்லி

இந்த அளவில் இவை அனைத்தையும் கலந்து பானத்தைத் தயார் செய்யலாம்.

ஆக்ஸிஜனேற்றிகளைச் சேர்ப்பது

நீரேற்றத்திற்குப் பிறகு அடுத்ததாக, உடலை ஆரோக்கியமானதாக மாற்ற சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இயற்கை பொருள்களைக் கொண்டு தயார் செய்யப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த ரெசிபியை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்.

இந்த பதிவும் உதவலாம்: தொடரும் மழையால் வரும் நோய் அபாயங்கள்.. இம்யூனிட்டியை அதிகரிக்க இந்த 5 உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க

இதில் ஆம்லா + ஊறவைத்த பாதாம் + பூசணி விதைகள் போன்றவை சேர்க்கப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, ஈ & ஒமேகா-3 போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு செல்களை வலுப்படுத்த உதவுகிறது.

  • 1 நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் ஷாட்
  • ஊறவைத்த பாதாம் - 6
  • பூசணி விதைகள் - 1 தேக்கரண்டி

View this post on Instagram

A post shared by Lovneet Batra (@lovneetb)

நகர்ந்து சூரிய ஒளியைப் பெறுவது

மூன்றாவது, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடல் செயல்பாடுகளைச் செய்வதற்கு நிபுணர் பரிந்துரைக்கிறார். இவை உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.

அதன் படி, 10 நிமிட நடைபயிற்சி அல்லது யோகா + 30 நிமிட சூரிய ஒளி போன்றவற்றைக் கையாளலாம். இது வைட்டமின் டி மற்றும் சிறந்த சுழற்சிக்கு வழிவகுக்கிறது.

  • நடைப்பயிற்சி அல்லது மென்மையான யோகா - 10-15 நிமிடங்கள்
  • சூரிய ஒளி வெளிப்பாடு - 30 நிமிடங்கள்

இந்த காலை சடங்குகளைக் கையாள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முடியும்.

சமச்சீர் காலை உணவு

இது தவிர, சமச்சீரான காலை உணவை எடுத்துக் கொள்ள நிபுணர் பரிந்துரைக்கிறார். அதன் படி, தயிர்/மோர் + முளைகள் + முட்டை/பனீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவை புரோபயாடிக்குகள், துத்தநாகம், புரதம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதரவு அளிக்கின்றன.

இறுதியாக, வலுவான காலை உணவின் மூலம் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம் எனக் கூறி தனது பதிவை முடித்தார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: மழைக்காலத்தில் காய்ச்சலைத் தவிர்க்க இந்த 5 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள்

Image Source: Freepik

Read Next

தைராய்டை ரிவர்ஸ் செய்ய நீங்க காலையில் குடிக்க வேண்டிய மூன்று பானங்கள்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 04, 2025 22:46 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content