No Smoke Day 2024: புகைபிடித்தல், வேடிக்கையாகத் தொடங்கி படிப்படியாக அடிமையாக மாற்றுகிறது. சிகரெட், சுருள், பீடி போன்றவை உடலின் அனைத்து உறுப்புகளிலும் அதீத தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பிக்கிறது.
புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு சில லட்சம் பேர் இறக்கின்றனர். அதனால்தான் புகைப்பிடித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் 'No Smoke Day' கொண்டாடப்படுகிறது. No Smoke Day என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? புகைப்பிடிப்பதை நிறுத்த என்னென்ன குறிப்புகள் பின்பற்ற வேண்டும்? என்பதை இங்கே காண்போம்.

புகைபிடித்தல் தீங்கு விளைவிக்கும்
“புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவுக்கும்” என்ற வார்த்தையை நாம் பலமுறை கேட்டிருப்போம். இருப்பினும், புகைபிடிப்பதை சிலர் நிறுத்துவதில்லை. உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, புகைப்பிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் இறக்கின்றனர். அவர்களில் 13 லட்சம் பேர் சிகரெட் புகையை சுவாசித்தவர்கள். எனவேதான் புகைப்பிடித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகைப்பிடிப்பதை விட்டுவிடுமாறு மக்களை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் No Smoke Day கொண்டாடப்படுகிறது.
No Smoke Day எப்போது?
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமையன்று No Smoke Day கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி No Smoke Dayவந்துள்ளது.
No Smoke Day வரலாறு:
No Smoke Day முதன் முதலில் 1984 இல் ஐக்கிய இராச்சியத்தில் அனுசரிக்கப்பட்டது. அப்போதுதான் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது புதன் கிழமை புகைபிடித்தல் தடை தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. புகைபிடிப்பதை விட்டுவிட விரும்புபவர்களுக்கு உதவும் வகையில், No Smoke Day என்பது ஆண்டுதோறும் சுகாதார விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
No Smoke Day தினம் 2024 தீம்:
ஒவ்வொரு ஆண்டும், ஒரு புதுமையான கருப்பொருளுடன் No Smoke Day கொண்டாடப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் No Smoke Day தீம் "புகையிலை தொழில் குறுக்கீட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்" என்பதாகும்.
இதையும் படிங்க: No Smoking Day: நீங்க புகைப்பிடிக்கும் போது உடலில் என்னென்ன நடக்கும் தெரியுமா?
சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீமைகள்:
புகைபிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி), எம்பிஸிமா, மூச்சுக்குழாய் அழற்சி, இதய நோய் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. தவிர, தொண்டை, வாய், உணவுக்குழாய், சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்ற பல்வேறு புற்றுநோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. புகைபிடிப்பதை விட்டுவிட இந்த குறிப்புகளை பின்பற்றுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான குறிப்புகள்:
- சிகரெட் பிடிக்க நினைக்கும் போதெல்லாம் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். ஆரஞ்சு, இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் திராட்சை சாப்பிடுவது சிகரெட் பிடிக்கும் ஆசையை அழிக்கும் என்று கூறப்படுகிறது. நீங்கள் புகைபிடிக்க நினைக்கும் போதெல்லாம் மெல்லும் கம் மற்றும் சாக்லேட் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.
- பலர் ஒரே நேரத்தில் புகைபிடிப்பதை நிறுத்த விரும்புகிறார்கள். ஆனால் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு, தினமும் காலையில் எழுந்ததும், இன்று புகைபிடிக்கக் கூடாது என்பதை மனதில் திடமாக நினைத்துக் கொள்ள வேண்டும். புகைபிடிப்பதை விட்டுவிட விருப்பம் மிகவும் முக்கியமானது. எனவே நீங்கள் ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் புகைபிடிக்காமல் இருக்கும் வரை தினமும் இதைச் செய்யுங்கள்.
- புகைபிடிப்பதற்கான தூண்டுதல்களையும் அடையாளம் காண வேண்டும். கார் ஓட்டும் போது சிலருக்கு சிகரெட் பிடிப்பது போல் இருக்கும். சிலருக்கு தேநீர் அருந்தும்போது புகைபிடிப்பது போலவும், சிலருக்கு சில வேலைகளைச் செய்யும்போது அல்லது மன அழுத்தத்தில் புகைபிடிப்பது போலவும் இருக்கும். அத்தகைய தூண்டுதல் புள்ளிகளைக் கண்டறிந்து அவற்றை முற்றிலும் தவிர்க்க முயற்சிக்கவும்.
- நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்த முடிவு செய்தால், உங்கள் முடிவைப் பற்றி உங்கள் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் சொல்லுங்கள். இப்படிச் செய்தால் பயம் காரணமாக புகைப்பிடிப்பதை நிறுத்திவிட வாய்ப்பு உள்ளது. புகைபிடிப்பதை விட்டுவிட உங்களை ஊக்குவிக்க ஒரு அமைப்பை நீங்கள் அமைக்க வேண்டும். இதற்கு அவர்களுடன் சேர்ந்து புகைப்பிடிப்பதை நிறுத்துபவர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- ஒருவருக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதற்கு பதிலாக, நேரத்தை 5 நிமிடங்களாக அதிகரிக்கவும். உதாரணமாக, நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பு சிகரெட் புகைத்திருந்தால், ஒரு மணி நேரம் கழித்து புகைபிடிக்காமல் ஐந்து நிமிடங்கள் காத்திருக்கவும். புகைபிடிக்கும் அமர்வுகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிப்பது இந்த அடிமைத்தனத்தை சமாளிக்க உதவும். இந்த சிறிய மாற்றம் பெரிய பலனைத் தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
- நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்த விரும்பினால், உங்கள் மனதை அதிலிருந்து திசை திருப்ப வேண்டும். நீங்கள் அதை செய்ய விரும்பினால், நிகோடின் மாற்று சிகிச்சையை (NRT) முயற்சிக்கவும். அதற்கு உங்கள் மருத்துவரை அணுகி அவர் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுவது நல்லது.
Image Source: Freepik