New Year Resolution: 2024ல் உறுதியாக சிகரெட்டை நிறுத்துவோம்.. இதை பண்ணுங்க!

  • SHARE
  • FOLLOW
New Year Resolution: 2024ல் உறுதியாக சிகரெட்டை நிறுத்துவோம்.. இதை பண்ணுங்க!

பலரும் உறுதியாக அந்த எண்ண ஓட்டத்தில் இருந்து, இன்று இரவோடு விட்டுவிடுவோம் என அதிகமாக அதை உட்கொள்ளத் தொடங்குவார்கள். அப்படி அதிக உட்கொள்ளலே அடுத்தநாள் காலை அதை மீண்டும் எடுத்துக் கொள்ள எண்ணம் தூண்டும். அதேபோல் புகைப்பிடிக்கும் பலரிடம் கேட்டாலும் அவர்கள் கூறும் ஒரே பதில் இதை எப்படி விடுவது என்றே தெரியவில்லை, குறைக்கலாம் என்று பார்க்கிறேன் என்றுதான் கூறுவார்கள்.

சிகரெட்டை நிறுத்துவது எப்படி? (How to Quit Smoking?)

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் இந்த காலக்கட்டத்தில் நம்முடைய ஒரு கெட்டப்பழக்கத்தை கைவிடுவது என்பது அவ்வளவு கடினமான விஷயமல்ல. மனதளவில் ஒன்றை நினைத்து அதை சாதித்துக் காட்டியவர்கள் பலர். இதை நிறுத்துவதற்கான வழிகளை பின்பற்றும் போது முதலில் மனதளவில் உறுதியாக இருக்க வேண்டும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்..

பொதுவாக ஒரு இடத்தில் நீங்கள் தினசரி சென்று புகைப்பிடிக்கிறீர்கள் என்றால், புகைப்பிடிப்பதை நிறுத்த முயற்சிக்கும் போது அந்த இடத்துக்கு செல்லாமல் இருக்கக் கூடாது. மனதை நிலையாகக் கொண்டு அதே இடத்திற்கு சென்று ஒரு டீயோ அல்லது சாக்லேட்டோ சாப்பிட்டு புகைப்பிடிக்காமல் திரும்ப வர வேண்டும். இப்படி செய்தால் அது பழக்கம் ஆகிவிடும். இதற்கு மனதளவில் உறுதியாக இருப்பது முக்கியம்.

நாளை விடுவேன் என்று சொல்வதை விட, இன்று புகை பிடிக்க மாட்டேன் என்று பலமாக நினைக்க வேண்டும். நீங்கள் புகைபிடிப்பதை விட்டுவிடுகிறீர்கள் என்று உங்கள் நண்பர்கள் மற்றும் அன்பானவர்களிடம் சொல்லுங்கள். அதற்கு அவர்களின் ஆதரவையும் ஊக்கத்தையும் நாடுங்கள். யாராவது கிண்டல் செய்தால் அவர்களிடம் உங்களை நிரூபிக்க முயலுங்கள். பின் அவரே ஆச்சரியப்படுவார்.

சிகரெட்டுக்கு மாற்றை தேடுங்கள்

புகைப்பிடிக்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டால், அவர்களுக்கும் அறிவுரை கூறுங்கள். கேட்காதபட்சத்தில் அவர்களுடன் செல்லும்போது அவர்கள் புகைப்பிடித்தால் நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கு பதிலாக வேறு ஏதாவது ஆரோக்கியமான பானம் போன்றவையை வாங்கி பருகுங்கள். உங்கள் வழக்கமான புகைபிடிக்கும் இடைவேளையின் போது காபி மட்டும் உள்ள இடத்திற்குச் செல்லுங்கள்.

நீங்கள் புகைபிடிக்க வேண்டும் என்று வலுவாக உணரும் போதெல்லாம், ஒரு சிறிய நடைக்கு செல்லுங்கள். ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். மொபைலில் எந்த விளையாட்டையும் விளையாடுங்கள்.. வீட்டை சுத்தம் செய்வது, பைக்கை சுத்தம் செய்வது போன்றவற்றையும் செய்யுங்கள்.

சிகரெட் இடம் இருந்து விலகி இருங்கள்

சிகரெட் பாக்கெட், லைட்டர் போன்றவற்றை வைத்திருக்க வேண்டாம். இவற்றை முந்திரி, பட்டாணி அல்லது கேரட், லாலிபாப் மற்றும் சாக்லேட்டுகளுடன் மாற்றவும். புகைபிடிக்கும் எண்ணம் வரும்போது, ​​ஒரு துண்டு சூயிங் கம் அல்லது நட்ஸ் போன்றவைகளை மென்று சாப்பிடுங்கள்.

உங்கள் குடும்பத்தையும் செலவையும் சிந்தியுங்கள்

புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது அதற்கான செலவை ஒரு கேனில் போடுங்கள். ஒரு வாரத்தில் எவ்வளவு சேமிக்கலாம், ஒரு மாதத்தில் எவ்வளவு சேமிக்கலாம் என்பதைக் கணக்கிடுங்கள். இது பெரிதளவு உதவும். அதேபோல் உங்களுக்கு புகைப்பிடிக்க தோன்றும் போதெல்லாம் உங்கள் குடும்பத்தாரை சிந்தியுங்கள், உங்கள் மனைவி, மகன், மகள், தாய், தந்தை போன்றவர்களை சந்தியுங்கள். இதனால் நீங்கள் சந்திக்கும் விளைவையும் அதன்மூலம் அவர்கள் சந்திக்கும் பாதிப்பையும் சிந்தியுங்கள்.

புகைபிடிக்க விரும்பினால், சிறிது நடைபயிற்சி செய்யுங்கள், படிக்கட்டுகளில் ஏறி இறங்குங்கள். உங்களுக்கு யோகா மற்றும் தியானம் தெரிந்திருந்தால், அவற்றை முயற்சிக்கவும்.

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

உறுதியாக நாம் நினைத்தால் முடியாதது என்பது இல்லை. சற்று கடினமாக இருந்தாலும், தொடர்ச்சியாக சில நாட்கள் மனதை நிலையாக்கிக் கொண்டால் அது அப்படியே பழகிவிடும். நம்புவோம் நம்மால் முடியும். நம்மால் முடியவில்லை என்றால் வேறுயாராலும் முடியாது என்று உங்களை நீங்கள் நம்புங்கள்.

Pic Courtesy: FreePik

Read Next

வளர்ந்து வரும் JN.1.. ஆபத்தை உணர்த்தும் மருத்துவர்.!

Disclaimer

குறிச்சொற்கள்