Best Food for Sinus: சைனஸ் வலியிலிருந்து உடனடி நிவாரணம் பெற… இந்த உணவுகளை சாப்பிடுங்க!

  • SHARE
  • FOLLOW
Best Food for Sinus: சைனஸ் வலியிலிருந்து உடனடி நிவாரணம் பெற… இந்த உணவுகளை சாப்பிடுங்க!


குளிர் காலத்திற்கு குட்பை சொல்லக்கூடிய தருணம் வந்துவிட்டது. இந்தப் பருவ காலத்தில் சாமானியர்களை விட சைனஸ் உள்ளவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகள் கொடுமையானது. மூக்கடைப்பு, தாங்கமுடியாத தலைவலி, வீங்கிய முகம், புருவங்களுக்கு இடையே வலி என சைனஸ் கொடுக்கக்கூடிய தொந்தரவு தாங்க முடியாதது.

குளிர்காலத்தில் சைனஸ் தொற்று ஏற்படுவது சகஜம். சைனஸ் அறிகுறிகளைக் குறைப்பதில் நாம் உண்ணும் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது. சைனஸ் தொல்லை தரும்போது நிவாரணம் பெற என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிடலாம் என்று இந்த கட்டுரை மூலம் அறிந்து கொள்ளுங்கள்…

சூடான பானங்கள்:

சூடான பானங்கள் சைனஸ் தொற்றிலிருந்து உடனடி நிவாரணம் தரக்கூடியவை. உங்களுக்குச் சைனஸ் பிரச்சனையால் வலி ஏற்பட்டால், சூடான சூப், தேநீர் உள்ளிட்ட ஹாட்டான பானங்களை எடுத்துக்கொள்ளலாம். சைனஸின் பிடியில் சிக்கித்தவிக்கும்போது சூடான பானங்களைப் பருகுவது, நாசி நெரிசல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளிலிருந்து நிவாரணம் அளிக்கின்றது.

2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, சிக்கன் சூப் உட்கொள்வது தொற்றுநோய்களுக்கு எதிரான அழற்சி எதிர்ப்பு எதிர்வினைகளை மேம்படுத்த உதவும். தவிர, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இஞ்சி டீ எடுத்துக்கொள்வது நல்லது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

வைட்டமின் சி உணவுகள்:

சைனஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுவாக வைத்திருப்பது மிகவும் அவசியம். 2011 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது மற்றும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

எனவே வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, திராட்சை, கிவி போன்ற பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகச் செயல்படுகிறது. இது சைனஸ் தொற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. வைட்டமின் சி மியூகோசல் சேதத்தைத் தடுக்கிறது. வீக்கம் மற்றும் நாசி நெரிசலைக் குறைக்கிறது.

இஞ்சி, பூண்டு:

உங்கள் உணவில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்துக் கொள்வதால் சைனஸ் தொற்று மற்றும் வலியிலிருந்து விடுபடலாம். இஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. அவை சைனஸ் நோய்த்தொற்றுகளுக்குச் சிகிச்சையளிக்கவும் வலியைக் குறைக்கவும் உதவுகின்றன. மேலும் இஞ்சியில் உள்ள ஆண்டிஹிஸ்டமின்கள, ஒவ்வாமை மற்றும் சைனஸ் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன

பூண்டில் கந்தக கலவைகள் நிறைந்துள்ளன. இது பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வைரஸ்களை எதிர்த்துப் போராடவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

தேன்:

தேனில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் அதிகமுள்ளது. தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சைனஸ் தொற்றிலிருந்து விடுபட உதவுகின்றன. அவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன.

சைனஸ் தொற்று உங்களைப் பாடாய்படுத்தும்போது, ​​ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

சூடு தண்ணீர்:

சைனஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்கான எளிதான வழிகளில் ஒன்று தண்ணீர். நீங்கள் சைனஸ் தொற்றுகளால் பாதிக்கப்படும்போது, ​​சளித்தொந்தரவிலிருந்து விடுபடவும் நீரேற்றம் தேவைப்படுகிறது.

வெதுவெதுப்பான நீரைக் குடித்தால், சைனஸ் தொற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். நிறைய தண்ணீர் குடித்தால் தொண்டை வறண்டு போவது தடுக்கப்படும்.

Image Source: Freepik

Read Next

டை அடித்த பிறகு ஸ்கின் அலர்ஜியா.? வீட்டிலேயே குணமாக்கலாம்..!

Disclaimer

குறிச்சொற்கள்