தமிழகத்தில் பகல் நேரத்தில் வெயில் கொழுத்தினாலும், மாலை நேரத்தில் ஆங்காங்கே மழை பெய்துக் கொண்டுதான் இருக்கிறது. கிட்டத்தட்ட மழைகாலம் நெருங்கிவிட்டது என்றே கூறலாம். கொளுத்தும் வெயிலில் இருந்து பொதுமக்களுக்கு சாரல் மழை நிம்மதி அளித்துள்ளது.
மழையால் குறிப்பிட்ட நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்து வருகிறது. மழையின் போது காற்றில் உள்ள ஈரப்பதம், தொற்று காரணமாக பல வகையான நோய்கள் ஏற்படலாம். மேலும், சாலை, வாய்க்கால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. கொசுக்களால் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
மழைகால நோய்கள்
மும்பையின் முலுண்ட் வெஸ்டில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அனிதா மேத்யூ, மழைக்காலத்தில் எந்தெந்த நோய்கள் பரவ வாய்ப்புள்ளது என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
பருவமழையில் பரவும் முக்கிய நோய்கள்

சளி மற்றும் காய்ச்சல்
மழைக்காலத்தில் வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிற வைரஸ் தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கும். மூக்கு ஒழுகுதல், தும்மல், உடல் வலி, காய்ச்சல், பொதுவான சோர்வு போன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
வைரஸ் காய்ச்சல்
மழைக்காலத்தில் காற்றில் பரவும் நோய்த்தொற்றுகளால் ஏற்படும் பொதுவான நோயாக வைரஸ் காய்ச்சல் இருக்கலாம். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் எரிச்சல், சோர்வு மற்றும் உடல்வலி போன்றவற்றை உணர்கிறார்.
வைரஸ் காய்ச்சல் பொதுவாக காலப்போக்கில் சரியாகிவிடும், ஆனால் அது 3 நாட்களுக்கு மேல் நீடித்தால், நீங்கள் மருத்துவரை நாட வேண்டும்.
டெங்கு
டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு தொற்று நோயாகும். மழைக்காலங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலில் அதிக காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, உடலில் சிவந்துபோதல், தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும்.
டெங்குவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் ஒரு வாரத்தில் குணமடைந்துவிடுவார்கள். வாந்தி, மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
இதையும் படிங்க: Diabetes Care In Monsoon: மழைக்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் எதில் கவனம் செலுத்தனும்?
மலேரியா
இந்தியாவில் மழைக்காலத்தில் டெங்குவுக்கு அடுத்தபடியாக மலேரியா பாதிப்பு அதிகமாக உள்ளது. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியால் மலேரியா ஏற்படுகிறது. காய்ச்சல், குளிர், தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தசை அல்லது மூட்டு வலி, சோர்வு, விரைவான சுவாசம், இருமல், அமைதியின்மை ஆகியவை மலேரியாவின் அறிகுறிகளாக இருக்கலாம்.
டைபாய்டு
டைபாய்டு போன்ற நோய்கள் அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவுகிறது. அதிக காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் உடல் பலவீனம் போன்றவை டைபாய்டு காய்ச்சலின் அறிகுறிகளாகும். மழைக்காலத்தில் டைபாய்டு தொற்று பரவாமல் இருக்க, சோப்பு மற்றும் தண்ணீரால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
மழைக்காலத்தில் நோய்களைத் தடுப்பது எப்படி?
ஆரோக்கியமான, சத்தான உணவை உண்ணுங்கள். இதில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் அடங்கும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். அதனால் உடலில் நீர்ச்சத்து இருக்கும் மற்றும் நோய்களின் ஆபத்து குறைகிறது.
எந்த உணவை உண்ணும் முன் கைகளை கழுவ வேண்டும். கொசுக்களை தடுக்க, உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருங்கள்.
கொசு விரட்டி கிரீம் பயன்படுத்தவும் மற்றும் முழு கை ஆடைகளை அணியவும்.
வைரஸ் தொற்று அபாயத்தைக் குறைக்க நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.
Image Source: FreePik